Skip to Content

02.லைப் டிவைன்

 “ஸ்ரீ அரவிந்தம்”

லைப் டிவைன்                                                                                                                                                                 கர்மயோகி

X. Conscious Force - Page No.81, Para.5

10. சித் -சக்தி

Schools of Indian philosophy offer this explanation.

இந்தியத் தத்துவ மேதைகள் இப்படிக் கூறுகின்றனர்.

Modern materialism also speaks thus.

இக்காலத்து நாத்திகமும் இப்படியே பேசுகிறது.

Both are similar.

இரண்டும் ஒன்று போலுள்ளது.

The Indian mind was serious.

இந்தியர் எண்ணம் சிறந்தது.

It was also reflective.

அதனால் சிந்திக்க முடியும்.

This was a mechanical idea.

இது ஜீவனற்ற தத்துவம்.

Or an idea of mechanical Force.

அல்லது ஜீவனற்ற சக்தியைப் பற்றிய தத்துவம்.

It was a Natural Force.

இது இயற்கை சக்தி.

The Indian view may have its defects.

இந்தியர் கருத்து தவறாக இருக்கலாம்.

Its main idea was indisputable.

அதன் மையக் கருத்து மறுக்க முடியாதது.

It was generally accepted.

அதைப் பொதுவான அனைவரும் ஏற்றனர்.

We may explain consciousness as we like.

ஜீவியத்தை நாம் எப்படியும் விளக்கலாம்.

Nature may be an inert principle.

இயற்கை எனும் பிரகிருதி ஜீவனற்றதாக இருக்கலாம்.

It may be an inert impulse.

அது ஜீவனற்ற உந்துதலாகவும் இருக்கலாம்.

Or it may a conscious principle.

ஜீவனுள்ளதாகவுமிருக்கலாம்.

Nature, in either case, is certainly Force.

எப்படியானாலும் பிரகிருதி என்பது சக்தி.

There is a principle of things.

விஷயத்திற்குத் தத்துவமுண்டு.

It is a formative movement of energies.

விஷயம் எனில் உருவம் பெற்ற சக்தியின் சலனமாகும்.

There are unshaped forces.

அவை உருவமற்ற சக்திகளாகும்.

They meet.

அவை சந்திக்கின்றன.

They mutually adapt to each other.

ஒன்று மற்றதை மாற்றுகிறது.

Forms are born out of them.

அதனால் உருவங்கள் உற்பத்தியாகின்றன.

There are forms of Force.

இவை சக்தியின் உருவங்கள்.

They contact other such Forms.

அவை அதுபோன்ற உருவங்களைச் சந்திக்கின்றன.

They too are forms of Forces.

அவையும் சக்தியின் உருவங்களாகும்.

As a result, sensations arise.

இதன் விளைவாக உணர்வு எழுகிறது.

Action too is such a result.

செயலும் இதன் விளைவே.

This is our experience.

இதுவே நம் அனுபவம்.

It is our world.

இது நம் உலகம்.

We must start from here.

நாம் இங்கிருந்தே அனுபவிக்க வேண்டும்.

Page No.82, Para No.6

 

Modern Science analysed Matter.

விஞ்ஞானம் ஜடத்தை ஆராய்ந்தது.

It came to the same conclusions.

அதுவும் அதே முடிவுக்கு வந்துள்ளது.

They do have doubts.

அவர்கட்கு ஐயப்பாடுகள் உள்ளன.

They may be a few.

அவை சில.

Such doubts do linger.

சில ஐயப்பாடுகள் தொடர்கின்றன.

Science and philosophy concur.

விஞ்ஞானமும் தத்துவமும் ஆமோதிக்கின்றன.

Intuition endorses it.

ஞானம் ஏற்றுக் கொள்கிறது

Experience confirms it.

அனுபவம் உறுதிப்படுத்துகிறது.

Pure reason is satisfied.

பகுத்தறிவுக்குத் திருப்தி.

Its own essential conceptions are satisfied.

அதன் அடிப்படை இங்கு பூர்த்தியாகிறது.

We can view it in the view of the world.

உலகக் கண்ணோட்டத்தில் அதைக் காணலாம்.

Or, look at it from an act of consciousness.

அதை ஜீவியத்தின் செயலாகவும் பார்க்கலாம்.

There is always an act.

செயல் என்றும் உண்டு.

It is implied.

அது இல்லாமலில்லை.

An act is a movement of Force.

செயல் என்பது சக்தியின் சலனம்.

Force is a play of energy.

சக்தி செயல்படும்பொழுது தீவிரம் எழுகிறது.

Let us consider our experience.

நம் அனுபவத்தைப் பார்ப்போம்.

Let us examine from within it.

நம் உள்ளே அதைக் காண்போம்.

This is the fundamental nature of the world.

உலகின் அடிப்படை இயல்பு அது.

The old philosophies speak of triple forces.

மூன்று சக்திகளைத் தத்துவமறியும்.

They are forces of knowledge, desire and action.

ஞானம், பிராணன், கிரியை ஆகிய மூன்று அவை.

All our activities are covered by them.

நம் செயலனைத்தும் அவற்றுள் அடக்கம்.

There is an original Power.

ஆதியான சக்தியுண்டு.

It is identical.

அது ஐக்கியமானது.

It is Adhya Shakti.

அதை ஆதிசக்தி என்பர்.

These three forces are its three streams.

மூன்று சக்திகளும் மூன்று ஓட்டங்கள்.

Our rest too is an activity.

அமைதியும் செயலாகும்.

It is an equal state of equilibrium.

அமைதி என்பது அமைதியைக் காக்கும் செயல் எனப்படும்.

Or it is a play of her movement.

அல்லது சலனத்தின் ஓருருவமாகும்.

contd...

தொடரும்...

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

பிறருக்கு உதவி செய்யும் வேகம் எழுந்தால், அந்த உதவியைச் செய்வதற்குப் பதிலாக, அந்த வேகத்தைச் சமர்ப்பணம் செய்தால், அடுத்தாற்போல் என்ன செய்வது என்பதற்குச் சமர்ப்பணம் வழி செய்யும். அச்செயல் எவர் மனதையும் புண்படுத்தாது.

உதவும் வேகம் சமர்ப்பணத்திற்கு உரியது உதவிக்கன்று.

ஸ்ரீ அரவிந்த சுடர்

அன்னை நினைவு மற்ற நினைவை விட வலுவானால், அன்னையை நாடும் ஆர்வம் மற்ற ஆசைகளை விட வலுவானால், அன்னையாக மாறுவது மற்ற செயல்களை விட அதிகச் சுவையானால், ஆர்வம் உருவாகிறது எனப் பொருள்.

ஆர்வம் உருவானால் அன்னையாகலாம்.

 

 

 



book | by Dr. Radut