Skip to Content

04.பகவானுடைய இதர நூல்கள்

"பகவானுடைய இதர நூல்கள்"

 ஆன்மாவின் முடிவு முக்கியம்; தோற்றத்தின் ரூபம் முக்கியமில்லை.

- என்ன வாங்கப் போகிறோம் என்பது முக்கியம், எந்தக் கடையில் வாங்குகிறோம் என்பது முக்கியமில்லை.

- உத்தியோகம் முக்கியம்; எந்த ஊரில் வேலை செய்வது என்பது முக்கியமில்லை.

- திருமணம் முக்கியம், யாரைத் திருமணம் செய்து கொள்கிறோம் என்பதன்று.

- காரணம் அடிப்படை, காரியம் தோற்றம்

- படிப்பு முக்கியம், எந்தக் கல்லூரியில் படிக்கிறோம் என்பதன்று.

       ஆக்ஸிஜனும், ஹைட்ரஜனும் சேர்ந்து நீர் உற்பத்தியாகிறது என்ற உதாரணத்தை பகவான் ஸ்ரீ அரவிந்தர் ‘மாலை நேர உரையாடல்கள்’, ‘Archives’, ‘Life Divine’ ஆகிய இடங்களில் குறிப்பிட்டு முடிவு செய்வது ஆண்டவன். வெளிப்படுவது தோற்றம். நீர் என்பது தோற்றம் அது முக்கியமில்லை. அதை முடிவு செய்தவனே முக்கியம் என்பதை வலியுறுத்துகிறார்.

நம் வாழ்வின் போக்கை நிர்ணயிப்பது இறைவன்.

அதற்குரிய ரூபம், தோற்றத்தை அவன் அவ்வப்பொழுது மேற்கொள்கிறான்.

தோற்றத்தை முடிவு எனக் கருதுவது விஞ்ஞானம்.

முடிவை முக்கியமாகக் கருதுவது ஆன்மீகம் என்கிறார்.

- எழுத்து முக்கியம், எந்தப் பேனாவால் எழுதினோம் என்பதன்று.

- சர்க்கார் முக்கியம், யார் ஆள்வது என்பதன்று.

- ஆரோக்கியம் முக்கியம், எதை சாப்பிடுகிறோம் என்பது முக்கியமில்லை

- சிகிச்சையே முதல், டாக்டர் யாரானாலும் பரவாயில்லை.

- பிரயாணம் அவசியம், எப்படிப் போகிறோம் என்பது இரண்டாம்பட்சம்

- அன்னை முக்கியம், எப்படி வழிபடுகிறோம் என்பது முக்கியமில்லை

- இலாபம் அவசியம், எந்தச் சரக்கை விற்கிறோம் என்பது அன்று.

- ஆன்மீகம் அடிப்படை, முறை முக்கியமில்லை.

- குணம் முக்கியம், ஆப்பரேஷனில்லை.

- முழுமையின் முடிவு முக்கியம், பகுதியின் தோற்றமன்று.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

புரியாத விஷயங்களை வாயால் பேசும்பொழுது புரிந்தால் அது அறியாமையைக் குறிக்கும். இந்த அறியாமை மனத்தின் குணம். அறிவு உள்ளவரை இதுவும் இருக்கும். புத்திக்கு இக்குணம் இல்லை.

நினைவில் புரிவது அறிவு. பேசினால் மட்டும் புரிவது அறியாமை.

 

 

 



book | by Dr. Radut