Skip to Content

11.வாழ்வின் மறுமொழி

Life Response

Life Response Web Site

வாழ்வின் எதிரொலிக்கு Internet”

       அமெரிக்க அன்பர் ஒருவர். நெடுநாளாக அன்னையை அறிந்தவர். 30 ஆண்டாக புதுவைக்கு வந்ததில்லை. இவர் அன்னையைப் பொதுவாக ஏற்றுக் கொண்டவர். அவருக்கு அவருடைய தொழில் முக்கியம். அன்னை அடுத்தபட்சம். 1960-65 இல் கல்லூரியை விட்டு வெளியேறியவர்களில் ஒருவர்.

       தாமே ஒரு computer training உற்பத்தி செய்து வாரம் 3, 4 நாள் வேலை செய்து வருகிறார். Computer training தருவது இவரது தொழில். திருமணமாகாதவர். ஒரு பெண்ணுடனிருக்கிறார். சிறு வயதிலிருந்தே இவருக்கும் பெற்றோருக்கும் ஒத்து வாராது. இவருடைய uncle, aunt இருவரும் விஞ்ஞானிகள், Ph.D.பெற்றவர்கள். அவர்களும் இவருக்கு ஒத்து வராது, என்றாலும் சில வருஷங்களுக்கு ஒரு முறை சந்திப்பதுண்டு. சந்திப்பு எப்பொழுதும் பிரச்சினை. எரிச்சல், வாக்குவாதம், சண்டை போன்றவை வழக்கமானவை. சென்ற மாதம் அவர்கள் வருவதாக எழுதி இருந்தார்கள். இவர் Internet இல் Life Responseக்காக ஒரு Web site ஏற்படுத்தியுள்ளார். நம் அன்பர்களில் சிலர் தங்கள் அனுபவங்களை இவருடைய siteக்காக அனுப்பியுள்ளனர். (எந்த அன்பர் அனுபவங்களை அனுப்பப் பிரியப்பட்டாலும், அதை ஆங்கிலத்தில் எழுதி அவருடைய Internet விலாசத்திற்கு - http://content.communities.msn.com/LifeResponseProject - அனுப்பலாம்.

       அவரிடமிருந்து வந்த emailஐ கீழே தமிழில் எழுதுகிறேன்.

       “பல ஆண்டுகளாக என் பெற்றோரிடமும், ஓரளவு uncle, aunt உடனும் எனக்குச் சரியான உறவில்லை. சில ஆண்டுகட்கு ஒரு முறை என் uncle,aunt இந்தப் பக்கம் வருவார். அப்பொழுது எனக்குச் செய்தி வரும். அவர்களைச் சந்திக்க நான் ஆவலோடு இருப்பேன். அதே சமயம் குடும்பம், அரசியல் பற்றி விவாதங்கள் காரசாரமாக இருப்பதால், சந்திப்புக் கசப்பது வழக்கம்.

       சென்ற வாரம் என் uncle,aunt போனில் கூப்பிட்டனர். அவர்களைச் சந்திப்பதைச் சமர்ப்பணம் செய்ய முடிவு செய்தேன். எல்லாம் சுமுகமாக இருக்க வேண்டும் என்பது என் அவா. அதன்படியே நடக்கட்டும் என இருந்துவிட்டேன். அந்த நிமிஷத்திலிருந்து எல்லாம் - எல்லாம் எனில் எல்லாம் - அற்புதமாக நடக்க ஆரம்பித்தது. அத்துடன் நாள் முழுவதும் சந்தோஷமான கலகலப்பான சூழல் அமைந்தது (a superb engaging happy atmosphere) உதாரணமாக நாங்கள் ரூம் எடுத்த ஹோட்டல் வசதிக்கு பேர் போனதன்று. ஆனால் எங்களுக்கு வசதியான இடம் அமைந்தது (had perfect seats). சாப்பாடு பிரமாதம். எங்களுக்கு வந்த waiter உடைய சேவை காவிய நயமுடையதாக இருந்தது. (Chef's service was almost poetic). எனது uncle, aunt இருவரும் உலகம் சுற்றியவர்கள். குறிப்பாக ஆசியாவில் அதிகம் பிரயாணம் செய்தவர்கள். ஆனால் இதுபோன்ற சாப்பாட்டு அனுபவம் அவர்கள் பெற்றதில்லை. வெய்யிலின் கடுமையோ, குளிரோ இல்லை. நாங்கள் போன lake parkஇல் கூட்டமில்லை. அழகாக அமைந்தது. உரையாடல் சுமுகமாகவும், சந்தோஷமாகவும், ஆழ்ந்த கருத்துணர்வோடும் அமைந்தது. Life Response என்பது போன்ற ஏராளமான முக்கியமில்லாத சிறு நிகழ்ச்சிகள் நடந்தன. அவை ஆனந்த அனுபவம், இனிய நிகழ்ச்சிகள் அவை. ஒன்றுக்கு மேற்பட்ட Ph.D.பட்டம் எடுத்தவர்கள் இருவரும். ஆன்மீகம் இவர்கள் அறியாதது என்றாலும் Life Response அவர்கள் கண்ணிலும், மனதிலும் பட்டன.

       அதிர்ஷ்டம் என்பதை நாங்கள் விவாதித்தோம். என் uncle அதிர்ஷ்டம் என்பது தானே நடப்பது என்றார். நான் அதிர்ஷ்டத்தை நாமே உருவாக்கலாம் என்றேன். உடனே ஓர் அதிர்ஷ்டவசமான நிகழ்ச்சி நடந்தது. எனது aunt icecream சாப்பிடப் பிரியப்பட்டார். நாங்கள் உள்ள இடத்திலிருந்து பல மைல் போனால்தான ice cream parlour கிடைக்கும். நான் அதற்குத் தயாரானேன். சற்று நேரத்தில் ice cream parlour கண்ணில் பட்டது! அது வேடிக்கையாக அமைந்தது. எப்படியும் அது ஒரு Life Response அல்லவா? இதுவரை போல் சண்டையும், எரிச்சலுமில்லாமல் அழகாக, சந்தோஷமாக, பிரியமாகச் சூழல் இருந்தது பெரிய விஷயமன்றோ?”

****

 



book | by Dr. Radut