Skip to Content

07.சாவித்ரி

 சாவித்ரி”

P. 18.Of limiting Nature with a limitless Soul

          சுருங்கும் பிரகிருதியும், விரியும் ஆன்மாவும்

     ஆன்மா அனந்தமானது. காலத்தைக் கடந்தது. இடத்தால் கட்டுப்படாதது. புருஷன் எனப்படும். பிரகிருதி என்பது இயற்கை. புருஷன்-பிரகிருதி எனவும், பிரம்மம்-மாயை எனவும், ஈஸ்வரன்-சக்தி எனவும் இரண்டிரண்டாக உலகைப் பிரித்து ஞானிகள் கூறுகின்றனர். அதனால் வாழ்வு இயற்கையைச் சேர்ந்தது. துறவி வாழ்வை விலக்கி புருஷனை நாடுகிறார். வாழ்வு சுருக்கம் தருவது என்பதால் துறவறத்திற்குத் துணை செய்யாது. ஆனால் ஸ்ரீ அரவிந்தம் அடுத்த கட்டம் போய் அந்த வாழ்வும் பிரம்மமாயிற்றே, சர்வம் பிரம்மம் என்பதால், வாழ்வு பிரம்மமில்லாமல் இருக்க முடியாதே என்கிறது. பிரகிருதியை விட்டு விலகும் புருஷன், பிரகிருதியுள்ளும் இருக்கின்றானே என்று ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

விரியும் ஆன்மா சுருங்கும் வாழ்வுக்கு வித்தாயிருப்பதால், வாழ்வு மையத்தை அதனுள் உள்ள ஆன்மாவுக்கு மாற்றினால் மனித வாழ்வு, தெய்வீக வாழ்வாகும் என்பது ஸ்ரீ அரவிந்தம்.

ஸ்ரீ அரவிந்தத்தின் தத்துவம் அடுத்த கட்டங்கட்கும் போகும். இங்கு நாம் அதைக் கருதத் தேவையில்லை.

இப்பக்கத்திலுள்ள இதர கருத்துகள் :

காலத்தின் தலைவனுக்குரிய விளையாட்டுக் கருவி.

சதுரங்கத்தின் காய், விதியின் விளையாட்டை நடத்தும்.

அளவில்லாத அரங்கத்தின் ஊர்ந்து வரும் அசைவு.

புவியின் சொக்கட்டான் விதியுடன் விளையாடும்.

காலத்தில் வரைந்த மனித உருவம்.

கடுமையான மன்றத்தில் கட்டுப்பட்ட வாழ்வு.

ஆனந்தத்தை வெறுக்கும் காரிருள் சக்திகள்.

ஜடத்தின் பொக்கிஷம் சிம்மாசனம் பெறுகிறது.

வாழ்வு எனும் யாத்திரையில் தடை செய்யும் மரணம்.

வெடித்து விரியும் இதயத்தில் வைத்தெடுத்த முத்திரை.

சீறி எழும் மனதை மீறிவரும் கட்டு.

வலியை எழுப்பும் சாட்டை, லஞ்சம் தரும் மகிழ்வு.

அறியாமையின் அர்த்தமற்ற நீதிமன்றம்.

பரமனின் பாரம் தாங்காமல் அமிழும் பூமி.

****



book | by Dr. Radut