Skip to Content

2. சம்மர்ஹில் Summer Hill

சம்மர்ஹில் Summer Hill

மாணவர்கள் சுதந்திரமாகப் படிக்கவேண்டும் என்று 1929இல் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளி. வகுப்புகள் நடக்கும். மாணவர்கள் வர வேண்டும் என்ற அவசியமில்லை. பரீட்சைகள் இல்லை. கண்டிப்பு என்பதேயில்லை. மாணவர்கள் எப்பொழுதும் வரலாம், போகலாம், எந்த வகுப்பிலும் போய் உட்காரலாம், எந்த ஆசிரியர் உதவியையும் நாடலாம்.

  • இப்பள்ளியில் பயின்றவர்கள் வாழ்க்கையில் அபரிமிதமான வெற்றி பெற்றுள்ளனர்.

    ஒருவர்கூட அரசியலில் சேரவில்லை.

மொத்த மாணவர்கள் 59 பேரேயாகும். சமீபத்தில் இங்கிலாந்து அரசு இப்பள்ளி மீது நடவடிக்கை எடுத்து மூடப் போவதாக எச்சரித்தது. நிர்வாகம் கோர்ட்டுக்குப் போயிற்று. அத்தனை மாணவர்கள், பெற்றோர்கள் வாக்குமூலம்தர முன்வந்தனர்.

  • இது உலகில் முதன்மையான பள்ளி.
  • பெற்றோரும் மாணவர்களும் போற்றும் பள்ளி.
  • இதன் மாணவர்கள் மாணிக்கங்களாக மாறியவர்கள்.

அரசு எதிர்க்கிறது, மூட நினைக்கிறது. (Attendance) வருகையில்லை எனக் கூறுகிறது. பள்ளியின் கொள்கை வருகை தேவையில்லை என்பது. பள்ளி வழக்கை வென்றது. மாணவர்களும், பெற்றோரும், ஆசிரியர்களும் கோலாகலமாகக் கொண்டாடித் தீர்ப்பை வரவேற்றனர்.

  • பழைய சம்பிரதாயம் அவதாரப் புருஷனையும் எதிர்க்கும்.
  • படித்த மக்கள் உள்ள இங்கிலாந்தின் நிலை இதுவானால், இந்தியாவில் ஸ்ரீ அரவிந்தம் எப்படி எதிர்க்கப்படும் என்று கற்பனை செய்யலாம்.

அன்னை செய்தவை அனைத்தும் சம்பிரதாயத்திற்கு நேர் எதிரான செய்கையாகும்.

*****



book | by Dr. Radut