Skip to Content

15. மனிதனுடைய இன்றைய நிலைமையும் அன்னை அவனுக்கு வழங்க விரும்புவதும்

மனிதனுடைய இன்றைய நிலைமையும்

அன்னை அவனுக்கு வழங்க விரும்புவதும்

N.அசோகன்

 

வ. எண்
மனிதனுடைய இன்றைய நிலைமை
அன்னை அவனுக்கு வழங்க விரும்புவது
1
மனிதன் இன்பத்தை நாடுகிறான்.
அன்னை அவனுக்கு பேரின்பத்தை வழங்குகிறார்.
2
மனிதன் அவனுடைய சிறுமை குணம் படைத்த அகம்பாவத்தை மையமாக வைத்து வாழ்க்கையை நடத்துகிறான்.
அன்னை அவனுடைய ஆன்மாவை மையமாக வைத்து வாழ்க்கையை அமைத்துத் தர முன் வருகிறார்.
3
பணம் மற்றும் வசதியைத்தான் மனிதன் தேடுகிறான்.
அன்னை அவனுக்கு ஆன்மீகப் பொக்கிஷங்களை அளிக்கிறார்.
4
பகுதியானதும், பிரிவினையை வலியுறுத்தக்கூடியதுமான அறிவை மனிதன் பாராட்டுகிறான்.
அன்னை முழுமையானதும், ஒற்றுமையை வலியுறுத்தக் கூடியதுமான ஆன்மீக அறிவை அவனுக்கு வழங்குகிறார்.
5
மனிதன் அடுத்தவர்களிடமிருந்து பெறுவதன் மூலம் வளர விரும்புகிறான்.
அடுத்தவர்களுக்குக் கொடுத்து அதன் மூலம் வளர்வதற்கான வழியை அன்னை கற்றுத் தருகிறார்.
6
மனிதன் வெளிச் செயல்பாடுகளையே முக்கியமாகக் கருதுகிறான். வெளி உலகம் அவன் வாழ்க்கையை நிர்ணயிப்பதாக நினைக்கிறான்.
அவனுடைய வாழ்க்கையை அகத்திலிருந்து நிர்ணயிக்க அன்னை வழி சொல்கிறார்.
7
அவன் பணத்திற்குக் கட்டுப்பட்டு இருக்கிறான்.
அவனை பணத்திற்கு அதிபதியாக்க அன்னை முன் வருகிறார்.
8
புலனறிவை அவன் பாராட்டுகிறான்.
உள்ளெழுச்சியாகக் கிடைக்கும் அறிவை அன்னை அவனுக்கு வழங்குகிறார்.
9
மனிதன் அவனுடைய ஆசைகளுக்கு அடிமையானவன். ஒன்றன்பின் ஒன்றாகத் தன் ஆசைகளை நிறைவேற்றும் ஒரு முடிவில்லாத முயற்சியில் தன் வாழ்நாள் முழுவதும் செலவழிக்கிறான்.
ஆசைகளிலிருந்து அவனை நிரந்தரமாக விடுவித்துப் பேரின்பத்தை அவனுக்குச்
சொந்தமாக்க அன்னை முன் வருகிறார்.
10
அவனுடைய பார்வை, பகுதியானது மற்றும் தற்காலிகமானது.
கடந்த காலம், எதிர்காலம் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கிய பூரணப் பார்வையை அன்னை அவனுக்கு அளிக்கிறார்.
11
காலம் மற்றும் இடத்திற்கு மனிதன் கட்டுப்பட்டு இருக்கிறான்.
காலத்தையும், இடத்தையும் கடந்து செல்லக்கூடிய ஒரு ஆன்மீகசக்தியை அன்னை அவனுக்கு அளிக்கிறார்.
12
தனக்கு வேண்டியதை பெற்றுக் கொள்ள அவன் வாழ்க்கையைத் தேடிப் போகிறான்.
அவனுக்கு வேண்டியதை வழங்க வாழ்க்கை அவனைத் தேடி வரும்படி அன்னை செய்கிறார்.

*****



book | by Dr. Radut