Skip to Content

14. மரபு வழி வந்த ஆன்மீகமும் அன்னை ஸ்ரீ அரவிந்தரின் பூரணயோகமும்

மரபு வழி வந்த ஆன்மீகமும்

அன்னை ஸ்ரீ அரவிந்தரின் பூரணயோகமும்

N. அசோகன்

வ.எண்
மரபு வழி வந்த ஆன்மீகம்
அன்னை ஸ்ரீ அரவிந்தரின்
பூரண ஆன்மீகம்
1
படைப்பு என்பது ஒரு மாயை. நாம் அதிலிருந்து விடுபட வேண்டும்.
படைப்பு ஒரு மாயை இல்லை.
அது திருவுருமாற்றம் செய்யப்பட வேண்டிய ஒரு குறையாகும்.
2
ஆன்மாவிற்கு வளர்ச்சி இல்லை.
ஆன்மாவும்கூட அதனுடைய பிரதிநிதியான சைத்தியப்புருஷன் மூலம் பரிணாம வளர்ச்சியை அடைகிறது.
3
கர்மத்தை அழிக்க முடியாது.
கர்மம் கூட அருளின் ஸ்பரிசம் பட்டால் கரையும்.
4
ஐஸ்வரியம் ஆன்மீகத்திற்கு எதிரானது.
ஐஸ்வரியம் மகாலட்சுமியினுடைய வெளிப்பாடு என்பதால் அதை நாம் வரவேற்க வேண்டும்.
5
உடலை வருத்திக் கொள்ளும் கடுமையான விரதம் நல்லது. வாழ்க்கையை அனுபவிப்பது தவறு.
உடலை வருத்திக் கொள்வது சரியில்லை. விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கு விழிப்புணர்வு வருவதற்கு வலி தேவைப் படுகிறது. மாறாக வாழ்க்கையை
அனுபவிப்பது என்பது இறை ஆனந்தத்தின் வெளிப்பாடாக இருக்கும்.
6
தெய்வங்கள் உயர்ந்தவர்கள்.
மனிதனுக்கு ஆன்மா இருப்பதால் மனிதன் தெய்வங்களைவிட உயர்ந்தவன். தெய்வங்களுக்கு சைத்தியப்புருஷன் இல்லை என்பதால் அவர்களுக்கு வளர்ச்சி இல்லை.
7
தவ வாழ்க்கையும், இல்லற வாழ்க்கையும் இணைக்க முடியாது.
ஆன்மீக நியதிகளின்படி அமைகின்ற இல்லற வாழ்க்கை தவத்தையும், இல்வாழ்க்கையையும் ஒருங்கிணைத்து யோக வாழ்க்கையாக மாற்றுகிறது.
8
சடங்கு, சம்பிரதாயங்கள் முக்கியம்.
சடங்கு, சம்பிரதாயங்களை நாம் தவிர்க்கலாம்.
9
பிரம்மத்தை உணர முடியாது.
பிரம்மத்தை உணரலாம்.
10
ஆண்டவனை நாம் தூரத்தில் இருந்து தான் வழிபட முடியும்.
நாமே இறைவனாக மாறலாம்.
11
ஆண்டவனை மனிதன் தேடிப் போக வேண்டும்.
மனிதனைத் தேடி இறைவன் வருகிறான்.
12
பெண்களை ஒதுக்க வேண்டும்.
பெண்களுக்கும் ஆன்மீகத்தில் சம உரிமையுண்டு.

 

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மனம் உடலை உற்சாகப்படுத்துமானால், உடலில் வளர்ச்சி ஏற்படும். உடலிலுள்ள மனம் அதைச் செய்தால், வளர்ச்சி அல்லது அடுத்த நிலைக்குப் போகும் வளர்ச்சிக்குப் பதிலாக பரிணாமவளர்ச்சி ஏற்படும். உடலில் மேலெழுந்தவாரியாகவுள்ள மனம், திறமை (skill) பெற உதவுகிறது.
 
உடலின் அறிவு விழித்து, திறமை பெறுவது ஆன்மீகப் பரிணாமம்.

*****



book | by Dr. Radut