Skip to Content

12. அஜெண்டா

"Agenda"

Submitting to the worst, as if it is surrender, is superstition.

The smaller we are, the more we revolt.

Fear of being selfish or a rebel is still fear.

சரணாகதியென நினைத்து, மோசமான நிலைக்குப் பணிவது மூடநம்பிக்கை.

சிறுமை புரட்சி செய்யும்.

சுயநலமாக இருக்க பயப்படுவதும், புரட்சிக்குப் பயப்படுவதும் பயமே.

- அஜெண்டா

  • இல்லாததை நம்புவது மூடநம்பிக்கை.

    மாதம் மும்மாரி பெய்யும், அமாவாசைக்கு மழை பெய்யும் என நம்புவது மூடநம்பிக்கை.

    இல்லாததை இருப்பதாகக்கொள்வது மூடநம்பிக்கை.

    தவறானதை இலட்சியமாகக்கொண்டு, அதற்குப் பணிவது மூடநம்பிக்கை.

    குடித்துவிட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் கணவனுக்குப் பணிவிடை செய்வது,

    கொடுமையான உள்ளங்கொண்ட தகப்பனார் படிப்பின் பேரால் மகனைத் துன்புறுத்துவது,

    ஊழல் மந்த தலைவரின் பொய்யை கட்சிக்காக நம்பிப் பணிவது,

    ஆயுள்முழுவதும் ஒருமுறையும் பலன் தாராத நோன்பை நம்பிக்கையுடன் எடுப்பது,

    மனப்பாடம் செய்தால் அறிவு வரும் என நம்புவது,

    ஸ்டிரைக் செய்தால் உயர்ந்த இலட்சியம் என்பது,

    விவாகரத்து செய்வது பெருமை என நம்புவது,

    கலப்புக்கல்யாணம் தவறு என நினைப்பது,

    கலப்புத்திருமணம் இலட்சியம் எனக் கொண்டு, வேறு ஜாதியில் திருமணம் செய்வது,

    ஊனமுற்ற பெண்ணைத் திருமணம் செய்வதால், அவளுக்கு வாழ்வு தருகிறோம் என மனம் கூறுவது,

    நாலுபேர் செய்வதை நாமும் செய்வது சரி எனப் புரிவது,

    எதிர்ப்பது ஏற்றம் என கேள்விப்பட்டு நம்புவது,

    அயோக்கியனை ஏமாற்றுவது நல்லது என மனம் கூறுவது,

    நாம் உற்பத்தி செய்யும் பொருளை அடக்கவிலைக்கு விற்பது சேவை எனக் கொள்வது,

    "ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" எனப் பாரதி கூறிய பொன்மொழியை நம்பி, ஏழைகட்கு இலவசப் பள்ளி நடத்துவது,

    பிறருக்கு வலிய உதவுவது,

    கொடுத்த கடனைக் கேட்காமலிருப்பது பெருந்தன்மை என சிறியவன், கேட்க முடியாதவன், கேட்டுப்பெற முடியாதவன் ஏற்கும் கொள்கை போன்றவை

    மூடநம்பிக்கை.

    இவற்றை மூடநம்பிக்கையென அறிவிக்கும் பழமொழிகள் பல.

    கடன் கேட்காமல் வாராது.

    வலியப் போனால் மரியாதையிருக்காது.

    சேவை எளியவன் செய்வதில்லை, "விரலுக்குத் தகுந்த வீக்கம்".

    அடக்கவிலைக்கு விற்றால் இலாபம் புரோக்கருக்குப் போகும், ஏழைக்குப் போகாது.

    அயோக்கியனை ஏமாற்றினாலும், பலன் ஏமாற்றியதற்கே வரும்.

    நாலுபேர் செய்வதைச் செய்தால், நாலுபேருக்குக் கிடைப்பது கிடைக்கும்.

    ஊனமுற்ற பெண்ணோ, பையனோ உயிரை எடுப்பான்.

    கலப்புத்திருமணம், திருமணம். அதில் இலட்சியமோ, தவறோ இல்லை.

    விவாகரத்து பெருமையென நினைத்தால், பெருமை ரத்து செய்யும்.

    ஸ்டிரைக் செய்வது உரிமைக்காக. ஸ்டிரைக்குக்காகச் செய்தால், பட்டினி இருக்கவேண்டும்.

    மனப்பாடம் ஞாபகத்தை வளர்க்கும், அறிவு மங்கும்.

    சம்பிரதாயம் அன்னை அன்பர்க்கு உயிரை எடுக்கும்.

    கொடுமை யார் செய்தாலும் கொடுமையே, தகப்பனார் செய்வதால் கடமையாகாது.

  • மூடநம்பிக்கை பலவிதத்தின.

     எந்த வகையிலும் மூடநம்பிக்கையில்லாமலிருக்க பகுத்தறிவு தேவை.

  • பயமுள்ளவரை மனிதனாக முடியாது என அன்னை கூறியுள்ளார்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பிரிசம்  ஒளியை 7 வண்ணமாகக் காட்டுகிறது. தோற்றவன் சோகமடைகிறான். கைதிக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்படுகிறது. வர்ணத்தைப் பார்ப்பவர்க்கும், தோல்வி அடைந்தவனுக்கும், கைதிக்கும் அவரவர் நிலை தெளிவானது, முடிவானது. பிரிசத்தைத் தலைகீழாக வைத்தால், வர்ணம் மறைந்து வெண்ணிற ஒளியாகிறது. தோல்வியை எதிராகப் புரிந்துகொண்டால், சோகம் சந்தோஷமாக மாறும். நீதிபதியின் அபிப்பிராயம் தண்டனையை விலக்க வல்லது.
மறுக்க முடியாத உண்மைகள் எண்ணத்திலிருந்து ஜீவியத்திற்குப் போனால் தலைகீழே மாறும். மனித உடலும் சக்தியின் அதிர்வாகும்.
 
எண்ணம் ஜீவியமானால் உண்மையின் உருவம் மாறும்.

*****



book | by Dr. Radut