Skip to Content

05. சாவித்ரி

"சாவித்ரி"

P.9. Makes yearn this life of flesh to intangible aims

தசையான வாழ்வு தண்மையான இலட்சியத்தை நாடும்

  • அழியும் உடலை அழியா அமரத்துவத்துடன் இணைக்கிறது.
  • ஜடம் இருளாகி மருண்ட மயக்கம்,
  • பரமாத்ம ஜோதியை நோக்கிப் பாடுபடுகிறது.
  • பூமிமட்டும் சிருஷ்டிக்கப்பட்டில்லை, பரமாத்மாவும் பூமியைச் சார்ந்ததே.
  • எண்ணம் எழுகிறது, வாழ்வு ஆனந்தம் தேடுகிறது.
  • பூமி தனித்திருந்தால் ஜட உருவம் மட்டுமிருக்கும்.
  • ஜடமான லோகசக்தி வாழ்வை நடத்துகிறது.
  • பொன்னான பூமிக்கு எதுவும் தேவையில்லை.
  • மனிதனைப் பிறப்பித்தது, மனிதனுக்குப் பிடிபடவில்லை.
  • உயர்ந்த நோக்கம் உள்ளுறை உலகில் நோக்கம்.
  • உயரும் விதிக்கு உரிய சாவி அதுவே.
  • தடித்த மரணத்தைத் தடிகொண்டு எழுப்புகிறது.
  • ஆத்மவிழிப்பு ஜடமெனும் வீட்டில் பிறந்து வளர்கிறது.
  • விழிப்பான லோகங்களின் ஜீவனுடைய அடையாளம்,
  • அதன் சக்திகளும், தெய்வங்களும் புலனுக்குப் புலப்படா.
  • சத்தியசெயல் அறிவின் அரணைக் கடந்தது.
  • சொல்லொணா சத்தியத்தின் சொற்பெருக்கால் எழுந்தவை,
  • அகவாழ்வின் அளவுகோலை நிர்ணயிக்கிறது.
  • ஆத்மா வீடு திரும்பும் அற்புத அடிச்சுவடுகள்,
  • பிறப்பெனும் புனிதம், ஆத்மாவின் அற்புத தீரம்.
  • விடுதலையளிக்கும் ஏணியைக் கண்டோம்,
  • இயற்கை தெய்வத்தை நாடும் இயல்பான படிகள்,
  • மரணமழியும் திருஷ்டியின் மகிமையின் உஷார்.
  • சிருஷ்டியில் பிரம்மம் ஜடத்துள் வந்து ஒளிந்த பாங்கு,
  • பிரம்மம் புரண்டு பரந்து தாவிய பக்குவம்.
  • ஆண்டவன் தன்னை விரும்பி அழித்த அற்புதம்,
  • லோகமாதாவின் சிருஷ்டித் தியாகம்.
  • மாதாவின் ஆத்மா மனிதனுடைய உடலாகி,
  • வேதனையை விரும்பிஏற்றுப் பார்வையிழந்து,
  • தன் அதிசயத்தைவிட்டு இறங்கிவரும் தெய்வம்.
  • ஆயிரம் ரகங்களான நாமும் நம் உலகமும்,
  • அழியும் வாழ்வில் பிரம்ம விக்ரஹம்.
  • புவியெனும் துண்டு மிச்சமான துணுக்கு,
  • பெருவெளியின் சக்தி பெருகிவரும் பாங்கு,
  • மண்ணின் மயக்கம் வண்ண எழிலாகும் உறைவிடம்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
செயல் பலநிலைகளிலுண்டு. அங்கு, திறமை பூரணமானால் செயல் பூர்த்தியாகும். திறனாலான வாழ்வின் அமைப்பு (physical organisation), சக்தியாலான உணர்வின் அமைப்பு (vital organisation), எண்ணத்தாலான மனத்தின் அமைப்பு (mental organisation), ஆன்மீகக் கருத்தின் (Real Idea) சத்தியஜீவிய அமைப்புப் போன்றவையாகும்.
 
செயல் தன்னைப் பலநிலைகளில் பூர்த்தி செய்துகொள்ளும்.

*****



book | by Dr. Radut