Skip to Content

11. அஜெண்டா

அஜெண்டா

ஆத்மாவின் அந்தரங்கக் குரலாக ஒலிக்கும் மந்திரத்தை எந்தக் குருவாலும் கொடுக்க முடியாது.

Volume 4, page 139

  • எந்த யோகமும் ஒரு குரு மூலம் செய்ய வேண்டும்.
  • குரு இல்லாமல் யோகம் செய்வது நாலு வயதுக் குழந்தை ரோட்டில் நடப்பது போலாகும்.
  • யோகம், தவம் ஆபத்து நிறைந்த பாதை.
  • குருவின் கீழ் செய்யும் யோகத்திலும், எல்லா ஆபத்திலிருந்தும் தப்பிக்க முடியாது.
  • பெரும்பாலும் வழிதவறி, சித்தஸ்வாதீனமிழந்து விடுவார்கள்.
  • மூச்சு, ஜீரணம் சம்பந்தமான தீர்க்க முடியாத வியாதிகள் வரும்.
  • நஷ்டம் வராத தொழிலில்லை.
  • இலாபம் வேண்டுமானால், நஷ்டமும் வரும்.
  • யோகம் எளிய மனிதனுக்கில்லை.
  • Ph.D. பட்டம், பாரத ரத்னம், முதலமைச்சர் பதவி எல்லோருக்குமில்லை.
  • பெரு வெற்றிகள் குறைந்தபட்சமானவர்க்கேயுண்டு.
  • மந்திரம் என்பது வாழ்நாள் முழுவதும் செய்த யோகப் பலன்.
  • ஒருவர் பெற்ற நோபல் பரிசு, பாரத ரத்னம் அவரால் பிறருக்குக் கொடுக்க முடியாது.
  • தான் பெற்றதைப் பிறர் பெறும் வழி செய்வதும் எளிதல்ல.
  • ஒரு ரிஷி எழுதிய மந்திரத்தை நாம் உச்சரிப்பதால் அதன் பலன் பெறுகிறோம்.
  • பாம்புக் கடியிலிருந்து தொலைந்த பொருளைக் கண்டு பிடிக்கும்வரை உள்ள மந்திரங்கள் ஏராளம்.  
  • இங்கு யோக சம்பந்தமான மந்திரத்தை மட்டும் குறிக்கிறார் அன்னை.
  • மந்திரம் என்பது ஆத்மா விழித்து ஆண்டவனை நோக்கி எழுப்பும் ஆர்வக் குரல்.
  • அக்குரல் அவருக்கு மோட்சம் தரும்.
  • ஒரு குரு தரும் மந்திரம் அது போலிராது.
  • அந்த ஆர்வத்தை எழுப்ப அது உதவும்.
  • எழுந்த ஆர்வம் சொந்தமான மந்திரத்தை ஆழத்திலிருந்து எழுப்ப வேண்டும்.
  • ஒருவர் வலியைப் பிறர் ஏற்க முடியாது.
  • ஒருவருக்குத் தேவையான மந்திரத்தை அவரே அவருள் தேடிப் பெற வேண்டும்.
  • தீக்குளிப்பவர் மன நிலையது.
  • உடலும், உயிரும் மந்திரமயமானால் தீ சுடாது.
  • மந்திரம் ஜீவனுடைய குரல்.
  • வாழ்வே பூரண யோகத்தில் மந்திரமாக வேண்டும்.

*******

ஜீவிய மணி
 
சரணாகதி நோக்கமானால், எண்ணம் மௌனத்தின் வாயில்.
 
அதுவே ஜீவனின் இலட்சியமாவது உடலும் ஜீவனும் புளகாங்கிதம் தரும். அன்னை ஜீவியம் நம் ஜீவியமாவது சரணாகதியின் பூரணம்.
 
ஆன்மாவும், சுபாவமும் சரணாகதியை ஏற்றால் சரணாகதிக்கு வேலையில்லை.
 

*******



book | by Dr. Radut