Skip to Content

06. நெஞ்சுக்குரிய நினைவுகள்

நெஞ்சுக்குரிய நினைவுகள்

தனிப்பட்ட வகையில் சிறப்பெழும் முத்திரை

கர்மயோகி

  • நாடு சுதந்திரத்தை இழந்தாலும், சுபிட்சம் போய் வறுமை வந்தாலும், அடிப்படையான பெரிய கருத்துகளை மக்கள் மறந்துவிடுகின்றனர்.
  • அமெரிக்காவில் சுதந்திரம் சுபிட்சமாகத் தழைத்தது.
  • இங்கிலாந்து சீமாட்டிகளைவிட அமெரிக்கப் பன்றிகளுக்கு உயர்ந்த போஷாக்குண்டு என்பது உண்மையாயிற்று.
  • அந்நிலையில் இது போன்ற பெரிய உண்மைகள் வெளிவந்தன. அவை
    • எவரும் எதையும் செய்ய முடியும்.
    • தீராதப் பிரச்சனை இல்லை.
    • வாழ்வில் பிரச்சனையில்லை.
    • வாழ்விலில்லாத பெருவசதிகளில்லை.

இது போன்ற எண்ணங்களை அவர்கள் நம்பியதால் இன்று கூலிக்கார நாடாக ஆரம்பித்த அமெரிக்கா உலகை ஆள்கிறது.

  • அமெரிக்கா பெற்ற சுதந்திரம் சுபிட்சம் கொடுத்தது. தெம்பும், நம்பிக்கையும் கொடுத்தது. இது வாழ்க்கைக்குரிய வரப் பிரசாதம்.
  • அன்னை கொடுப்பது யோக சுபிட்சம்.
    வாழ முடியாத மனிதனுக்கு யோகமே உண்டு என்ற வாய்ப்பைக் கொடுக்கிறார்.
    அது வளம் உபரியாகும் வாழ்வு என்பதைக் காணாதவரிலர்.
    யோகங்களில் சிறந்தது ஞான யோகம்.
    மனத்தின் ஒரு பகுதியான எண்ணத்திற்குரிய யோகம் ஞான யோகம்.
    ஞாபகம், சிந்தனை, கற்பனை, விவேகம், முடிவு, தீர்மானம், தீர்க்க தரிசனம், பகுத்தறிவு, பிரித்துணரும் நுட்பம், புலன்களைக் கடந்த அறிவு, என்பன மனத்தின் பகுதிகள்.
    மனத்திற்கு மேற்பகுதி ஜீவியம், அடிப்பகுதி வலிமையானது பொருள் (Consciousness, Substance).
    இந்தத் தகுதிகளை ஜீவியத்திலும், பொருளிலும் சேர்த்து மனத்தை முழுமையாக்கி முழுமனத்தை மையமாக்கி யோகம் ராஜ யோகம்.
    ராஜ யோகம் மனிதருள் மாணிக்கமானவர் செய்வது என்பது பதஞ்சலியின் முடிவு.
    கீதை கூறும் யோகம் அதைக் கடந்தது.
    ராஜ யோகம் மனத்தாலும், பிராணனாலும், உடலாலும்ஆசனம், பிராணாயாமம் மூலமாகவும் செய்வதை கீதை சர்வ தர்மங்களையும் சரணம் செய்து பெற அழைக்கிறது.
    பூரண யோகம் கீதை முடியுமிடத்திலிருந்து ஆரம்பிக்கிறது என்கிறார் பகவான்.
    கீதை மனத்தின் நம்பிக்கைகளைச் சரணம் செய்யசொல்கிறது.
    அதைக் கடந்த முழு மனமும் சரணாகதிக்குரியது.
    மனத்தைக் கடந்து உணர்வின் உறைவிடமான இதயமும் சமர்ப்பணத்திற்குரியது.
    அதையும் கடந்து உடலும் சமர்ப்பணத்திற்குரியது.
    இவை மூன்றும் சேர்ந்த ஜீவனையும் சமர்ப்பணம் செய்வது பூரணயோகம்.
    இது மனிதனுக்குரிய யோகமல்ல மனிதனுக்குரியது சரணாகதி மட்டுமே.
    இந்த யோகத்தின் தலைவன் இறைவன்.
    இறைவன் மட்டும் செய்யக் கூடிய யோகமிது என பகவான் கூறுகிறார்.
  • அன்னையை அறிந்தவர் எவருக்கும் இந்த யோகம் செய்யும் தகுதியுண்டு.
  • உரிமையை அன்னை தருகிறார்.
  • உரிமை நம்பிக்கையால் தகுதியாகிறது.
  • செய்ய ஆரம்பித்தால் நடுவில் நிறுத்தக் கூடாது என The Life Divine முதல் அத்தியாயத்தில் பகவான் கூறுகிறார்.
  • கை விடாமல் செய்பவருக்குக் கைமேல் பலன்.
    அன்னையை அறிவது பாக்கியம்.
    அருகிலுள்ளவரும் அறிவதில்லை, ஏற்பதில்லை, நம்புவதில்லை.
    அறிவது நம்புவதால், ஏற்பதால் பூரணம் பெறுகிறது.

தனிப்பட்ட வாழ்வில், கடந்த கால வாழ்வில் நிகழ்ந்தவைகளை நினைத்துப் பார்த்தால் எவராலும் முடியாத காரியங்கள் நம் வாழ்வில் நம்மால் செய்யப்பட்டிருப்பது தெரியும்.

  • சிறப்பான நம்பிக்கை எளிதாக எழுந்து, குதூகலமாக மாறுவதைக் காணலாம்.
  • இயல்பாக மனமும், உணர்வும் அன்னையை நாடுவது தெரியும்.
  • அனைவருக்கும் எழும் பிரச்சனைகள் நம் வாழ்வில் எழுந்திரா.
  • நம் முயற்சிக்கு எதிர்பாராமல் பலரும் உதவ முன்வந்தது தெரியும்.
  • நாம் செய்யும் காரியங்கள் மற்றவர்க்குப் பலிப்பதைவிட அதிகமாகப் பலிக்கும்.
  • மரண பயமிராது.
  • நாம் வாழுமிடங்களில் அடுத்தவர் பிரச்சனை எளிதில் தீர்வதைக் காணலாம்.
  • உலகம் தேடிப் போவது, நம்மை நாடி வருவதைக் காணலாம்.
  • பூரணயோக வாயில்கள் என்ற தலைப்பில் நாற்பதுக்கும் மேற்பட்ட இந்த அம்சங்களை எடுத்து மலர்ந்த ஜீவியத்தில் விளக்கி எழுதியுள்ளேன்.
  • இதர அம்சங்கள் அன்பர் வாழ்வில் எழலாம்.
  • இலட்சியத்தை மேற்கொள்பவர் உடல், பொருள், ஆவியை அர்ப்பணிப்பது வழக்கம். இங்கு ஆத்மாவையும் சேர்த்து அர்ப்பணிக்க வேண்டும்.
  • எவருக்கும் எளிதில் நம்பிக்கை ஏற்படாத விஷயங்களில் நமக்கு நம்பிக்கை ஏற்படுவது தெரியும்.

Past Consecration கடந்த கால சமர்ப்பணம்.

  • இது தவற்றை விலக்கும், திருத்தும், திருவுருமாற்றும்.
  • நல்லதை மேலும் நல்லதாக உயர்த்தும்.
  • கடந்தகால சமர்ப்பணம் காலத்திற்கும் நம்முடன் வர வேண்டியது.
  • சமர்ப்பணம் சகலத்தையும் அர்ப்பணம் செய்வது.
    கடந்த கால சமர்ப்பணம் காலத்தையும் சமர்ப்பணத்தால் புனிதப்படுத்துகிறது.
  • உயர்ந்தவை, உன்னதமானவை, உடனே சமர்ப்பணத்தால் பலிக்கும்.
  • சமர்ப்பணத்தின் சிகரம்: நாம் உள்ளே உலகம் என அறிவது.
  • யோகம் புனிதமானது.
  • சமர்ப்பணம் யோகத்தைப் புனிதமாக்கும் துறை.
  • சமர்ப்பணத்தால் சொல் அழியும்.
  • சமர்ப்பணம் மனத்தைக் கரைக்க ஆரம்பிக்கும்.
  • கரைந்த மனம் மௌனத்தின் திருவுருவமாகும்.
  • மௌனம் பிரம்மத்தை நோக்கிப் பயணம் செய்யும்.

சமர்ப்பணம்

பகவான் இதை Self-Consecration சமர்ப்பணம் என்று கூறாமல் பிரம்ம-சமர்ப்பணம் எனக் கூறுகிறார்.

Self-(பிரம்மம்) என்பது சச்சிதானந்தத்தைக் குறிக்கும்.

எண்ணம், உணர்ச்சி, செயல், ஜீவன் ஆகியவற்றை இறைவனுக்கு, பிரம்மத்திற்குச் சமர்ப்பணம் செய்வது பிரம்ம சமர்ப்பணம்.

நமக்காக வாழ்வதற்குப் பதிலாக இறைவனுக்காக வாழ முடிவு செய்ததைச் சமர்ப்பணம் பூர்த்தி செய்யும்.

First Fundamental Siddhi முதல் அடிப்படையான சித்தியின் மூன்று அம்சங்கள்

  1. நெஞ்சில் அன்னை தரிசனம் தருவார்.
  2. பிறரில் அன்னை தரிசனம் தருவார்.
  3. அன்னை மேலுலகில் உள்ள இடத்தில் தரிசனம் தருவார்.

பகவான் அலிப்பூர் சிறையில் பெற்ற சித்தி இது.

இது சத்திய ஜீவிய சித்தி.

சமர்ப்பணத்தைப் பல வகைகளாக விவரிக்கலாம்.

  1. ரிஷிகள், நிஷ்டையால் மேல்மனத்திலிருந்து சூட்சுமமான உள்மனம் சென்றனர்.
    நிஷ்டை எண்ணத்தால் செயல்படுவதால் அது பகுதி.
    பூரண யோகத்தில் சமர்ப்பணத்தால் உள்மனம் செல்கிறோம்.
    சமர்ப்பணம் முழுமன உறுதியைச் சமர்ப்பணம் செய்வதால் முழுமை. ரிஷிகள் கண்டது புருஷன்.
    பூரண யோக சமர்ப்பணம் காண்பது இறைவனின் முழு நிலையான மூன்று அம்சங்கள்.
  2. ஒரு முறை சமர்ப்பணம் செய்தால் மோட்சம் கிடைக்கும்.
    மோட்சத்தை ஏற்றால் பூரண யோகம் பலிக்காது.
  3. சமர்ப்பணம் நேரடியாக அகந்தையைக் கரைக்கும்.
  4. வாழ்வில் சமர்ப்பணம் பிரச்சனைகளைத் தீர்க்கும்.
    அன்பர் முழுமையான யோக சமர்ப்பணம் செய்ய முடியாவிட்டால் அன்னையிடம் கூறுவதே அவர் சமர்ப்பணம்.
    அதுவே பிரச்சனையைத் தீர்க்கும்.
  5. பிரச்சனையைத் தீர்க்கும் சமர்ப்பணம் (அன்னையிடம் கூறுவது) ஓட்டுப் போடும் உரிமை போன்றது. யோக சமர்ப்பணத்திற்கு முதல் நிலையில் அகந்தை கரையும்.
    இரண்டாம் நிலையில் ஜீவன் பிரபஞ்ச ஜீவனாகும். முடிவான நிலையில் ஈஸ்வரனாகும்.

முதல் நிலை - அகந்தை கரைந்தால் மனிதனுக்கு அஞ்ஞானம் கரைகிறது.
முழுமையாக அகந்தை கரைந்தால் பிரபஞ்ச ஆத்மாவாகி (ஜீவன்) பின் மூன்றாம் நிலை முடிவான நிலையில் ஆத்ம, புருஷ, ஈஸ்வர அம்சங்களை உட்கொண்ட (மனிதன், பிரபஞ்சம், காலத்தைக் கடந்த நிலை) முழு ஈஸ்வரனாவான்.

எளிய சமர்ப்பணம் ஓட்டுரிமை.

முடிவான சமர்ப்பணம் MLA, MP, மந்திரி, முதன் மந்திரி, பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆகிய கட்டங்களை எட்டும்.
சமர்ப்பணம் அகந்தையைக் கரைக்கும்.
ஆனால் அகந்தை ஆழ நம்முள் வேரூன்றியது.
ரிஷிகள் அகந்தைக்கும், சத் புருஷனுக்கும் உள்ள வேறுபாட்டை அறிய சிரமப்பட்டனர் அகந்தையின் கபடு எவரையும் ஏமாற்றவல்லது.
அகந்தையைக் கரைக்க நாம் எந்த முறையைக் கையாண்டாலும் அகந்தை முன்வந்து தானே அதைச் செய்ய விழையும்.
ஏமாறாமலிருக்க முடியாது.
ஏமாந்தால் முடிவில் அகந்தை தன்னை வலுப்படுத்திக் கொள்ளும்.
இதிலிருந்து தப்ப பகவான் கூறும் வழி.
அகந்தையை விட்டு, அன்னையை நாடி, அன்னையை வலுப்படுத்தினால் அன்னை நம்மை (அகந்தையை) நோக்கி வருவார்.
அன்னை நெருங்கி வந்தால், அகந்தை சுருங்கும்.
அன்னை நம்மையடையும் பொழுது அகந்தை இராது.

அகந்தை கரைய அன்னை கூறும் வழி

நாம் சமர்ப்பணம் செய்தால், சமர்ப்பணம் செய்பவர் ஒருவர் இருப்பதால் அகந்தை அந்த உருவில் கரைய மறுக்கும்.

அதனால் அன்னை இறைவனை நோக்கி, ‘நீ, நீ, நீ, நீ மட்டும் வேண்டும்’ என்று கூறுகிறார். அதனால் அகந்தைக்கு இடம் இருப்பதில்லை.

  • எல்லாச் செயல்களையும் சமர்ப்பணம் செய்யாமல், சமர்ப்பணம் பூர்த்தியாகாது.
  • மூச்சு விடுவது நடுவில் தடைப்படக் கூடாது.
  • அதுபோல் சமர்ப்பணம் பலிக்க ஆரம்பித்தால், அது முழுமையடையும்வரை நிறுத்தக் கூடாது.
    முழுமையானபின் அவ்வுயர்ந்த கட்டத்திலேயே நிலைக்க வேண்டும்.
  • விமானம் பறக்கும்பொழுது, சில நிமிடம் பறப்பதை நிறுத்த முடியாது.
  • ஒருவருக்கு இது பலிக்க அவர் அந்த உச்சிக்குப் போய் அங்கேயே 30 வருஷமிருக்க வேண்டும் என்கிறார் அன்னை.
    அன்னை சூழலில் சமர்ப்பணம் பயின்றால், இந்த உயரத்திற்குப் போய் 3 மாதம் இருந்தால் சமர்ப்பணம் பூர்த்தியாகும்.
    இது சூழலுக்குரிய ஆன்மீகத் திறன்.
  • சமர்ப்பணம் முதல் நிபந்தனை.
    சமர்ப்பணம் பூர்த்தியாவது யோகம் ஆரம்பிக்க அவசியம்.
  • சமர்ப்பணத்தின் சில அம்சங்கள்:
    • சிந்தனை நின்று விடும்.
    • நினைவு அழியும்.
    • எச்சரிக்கை (censor) - மனம் பேசும் திறன் - அழியும்.
    • வாழ்வில் பிரச்சனைகள் இரா.
    • நேரம் போவது தெரியாது.
    • எரிச்சல் மூட்டும் விஷயங்கள் எரிச்சலைக் கிளப்பாது.
    • அமைதி உள்ளே சேர்ந்து வளரும்.
    • கடுமையான வெய்யில் குளிர்ந்த தென்றலாகத் தோன்றும்.
    • நம் முயற்சியின்றி வாழ்வு நிலை (status) உயரும்.
    • நம் வயது, படிப்பு, தொழிலுக்கு மேற்பட்ட மரியாதை எழும்.
    • எவரைச் சந்தித்தாலும் அவர்மீது அபரிமிதமாகப் பிரியம் எழும்.

********

ஜீவிய மணி
 
கர்மத்தை நம்பாமல், அருளை நம்பினால் கர்மம் அழியும். அடுத்த கட்டத்தில் திறமையை நம்பாமல், அருளை நம்பினால் அருள் பேரருளாகும். கர்மம் அழிந்து, திறமையால் முன்னேற அருள் உதவும். கர்மம் அழிந்து, திறமை விலகி, அருள் நேரடியாக, அது மட்டும் நம் வாழ்வில் செயல்படும்பொழுது பேரருளாகும். கர்மத்தால் காரியம் தடைப்படும். கர்மம் அழிந்தால், அருள் மூலம் திறமை குறைந்த காலத்தில் பலன் தரும். கர்மம் அழிந்து, திறமையில் நம்பிக்கை அழிந்தால், பேரருள் முதலிலேயே பலனைத் தரும்.
 

********



book | by Dr. Radut