Skip to Content

04. முடியாதது அன்னையை இடைவிடாது அழைத்தால் முடியும்

முடியாதது அன்னையை இடைவிடாது அழைத்தால் முடியும்

கர்மயோகி

முடியாதது அன்னையை இடைவிடாது அழைத்தால் முடியும்.
Calling makes the impossible possible.
அழைப்பே அனைத்தும்.
ஆழத்திலிருந்து அழைப்பதே அழைப்பு.
அழைப்பால் முடியாதது கேள்விப்படாதது.
முடியும்வரை அழைப்பதே அழைப்பு.
அழைப்பு ஒரு குரலில் சாதிக்கும்.
ஒரே குரலில் சாதிப்பதே அழைப்பு.
மனத்தைக் கடந்த குரல் மதருடைய குரல்.
அழைப்பை அறிந்தவர் அறிவதற்கு ஒன்றுமில்லை.
அன்னையை ஏற்றவர்க்குக் கேட்டதெல்லாம் கிடைக்கும்.
அன்னை ஏற்றவர்க்குக் கேட்பதற்கு ஒன்றுமில்லை.
வாயால் அழைத்தால் சொல் பலிக்கும்.
நெஞ்சால் அழைத்தால் உணர்ச்சி பலிக்கும்.
நெஞ்சைக் கடந்து அழைத்தால் அன்னை பலிக்கும்.
அன்னை வருவது, அகிலம் வருவது.
அன்னையே வந்தபின் அடுத்தது ஏது?
அகிலம் முழுவதும் அன்னை என்ற சொல்லினுள்.
அழைப்பின் உயர்வு அன்னை அழைப்பது.
ஆழத்தில் அழைப்பும் மறந்தபின் எழுவதே அழைப்பு.
அது அன்னையே தன்னை அழைப்பது.
அது ஆத்மாவின் அன்னை.
அதைக் கடந்தது கரணங்களின் அன்னை.
முடிவானது செயலின் அழைப்பு.

 

******



book | by Dr. Radut