Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 157: Waking and sleep lay locked in mutual arms

விழிப்பும் தூக்கமும் கட்டியணைத்த கருணை

  • ஆனந்தமும், வலியும் விவரமில்லாமல் வேறு வழியில்லாமல் வந்தன
  • பிரபஞ்ச ஆத்மா @லசாக எழுந்து உடலில் புல்லரித்து நடுங்கிற்று
  • அழ முடியாமல், அசையவும் முடியாமல் வாழ்வின் வலிமை எழுந்தது
  • ஆழ்ந்த ஆனந்தம் அழகாகப் பாடிப் பரிமளித்தது
  • பண்பு எழுப்பும் பவித்திரமான உணர்வைச் சொல்ல முடியவில்லை
  • நம்மையறியாத உலகின் இதயம் இன்பமாகத் துடிக்கிறது
  • மந்திர மயக்கத்துள் மறைந்தெழுந்து அசைகிறது
  • புரியாத நிலையற்ற புல்லரிப்பு, தடுமாறிப் போகும் தாளம்
  • மறைந்த நெற்றிக்கண்ணின் மங்கிய மறை பொருள்
  • சிறு குழவி தன்னையறிந்து வளர்ந்தது, ஜனனம் பிறந்தது
  • தெய்வம் விழித்தது, கனவில் லயித்தது
  • தாளிட்ட கதவுகள் திறக்க மறுத்தன
  • பார்க்கும் ஊனக் கண்ணுக்குப் பார்வையற்ற நிலை ஏற்பட்டு
  • உருவமும், செயலும் உணர்த்தின. சிறைப்பட்ட தெய்வம் மறைந்தது
  • வளரும் திறனின் சூட்சும சக்தியுள், அதன் நாடியில் வாழ்வு ஒளிந்தது
  • ஜீவியம் பெற்ற ஒடுங்கிய ஊமைப் புலனின் தாள வரிசை
  • எண்ணத்தை அறிய முடியாத அடங்கிய மனம்
  • ஆத்மா வாழ்வை ஜடமாக ஏற்றது
  • குரலெழுப்ப முடியவில்லை, அசைய அச்சப்பட்டது
  • உலகின் சக்தி உள்ளே ஓடியது, உயிருள்ள சக்தி உணர்ச்சியாயிற்று
  • காலை மண்ணில் ஊன்றி கடுமையாகப் பற்றியது
  • தென்றலென எழுந்த சக்திக் கதிர்களின் ஊமை அதிர்ச்சி புல்லரித்தது
  • அணைக்கும் ஆசையென அன்பாகப் பற்றின
  • சூரிய ஜோதிக்கு ஏங்கும் வலிமையின் எழில்
  • மூச்சும், உயிரும் தழுவும் இனிமையை உணர முடியவில்லை
  • அழகும், வண்ணமும் பொருந்திய சத்தியம் கனவாக வந்து, கவர்ந்து மறைந்தது
  • முடிவாக, மந்திரக் கட்டுண்ட மாபெரும் மலை எட்டிப் பார்த்தது
  • அசைந்து, அதிர்ந்து, ஆசைப்பட்டு அது மனத்தைத் தேடியது
  • அதன்பின் புலப்பட்டது புலன், எண்ணம் எட்டிப் பார்த்தது
  • மறுக்கும் அச்சை ஏற்கப் பணித்தது
  • மந்திரமாயம் செதுக்கப்பட்ட ரூபத்தின் விழிப்பு
  • சமாதியிலிழந்த ஜீவன் சுருதி கூட்டிச் சட்டென எழுந்தது
  • ஒளிமயமான அலையின் அசைவு மூளையையும், நரம்பையும் சுண்டியிழுத்தது
  • ஆன்மாவின் அடையாளம் ஜடத்தில் விழித்தது
  • உடலின் அற்புதம் ஜோதியாக எழுந்தது

*******



book | by Dr. Radut