Skip to Content

12. உதவி

உதவி

கர்மயோகி

உதவி செய்வது உள்ளம் உயர்வது.
உத்தமனுக்குக் கேட்காமல் செய்வது உதவி.
கேட்காமல் அதமனுக்குச் செய்யும் உதவி அர்த்தநாசம்.
கயவன் கேட்டாலும் உதவக் கூடாது - உதவி உபத்திரவம்.
உதவத் தோன்றுவது உத்தமம்.
மட்டமானவனுக்கு உதவத் தோன்றுவது அழிவுக் காலம்.
தனக்கு உதவுவதால், பிறர் உயர்வதை அறிந்து பொறாமைப்படுவான் கயவன்.
கயவன் கண்ணில்படாமலிருக்க உள்ளே கயமையிருக்கக் கூடாது.
கயவன் தரும் ஞானம் முடிவான கடைசி ஞானம்.
பொதுத்தொண்டு கயவன் பொறியில் மாட்டுவது.
கற்பழிக்க விரும்புபவனைக் காதலிப்பது போன்றது பொதுத் தொண்டு.
பொதுத்தொண்டு பொதுவாக மட்டுமிருக்க வேண்டும்
பொதுத்தொண்டைக் குறிப்பிட்டவர்க்குச் செய்வது தன்னையும் தொண்டையும் அழித்துக் கொண்டு கெட்ட பெயர் வாங்குவது.
உயர்வின் உச்சியிலிருந்து கயவனை முழுவதும் அறிந்து விலகும் பெரிய மனிதனுக்குப் பொதுத்தொண்டு பொருந்தும்.
சிறிய மனிதன் பொதுத்தொண்டில் துண்டாடப்படுவான்.
அறியாதவனுக்கு அவன் அறியாத நல்லதை அளிக்க முயல்வது அறியாமை.
நல்லவன் வல்லவனாக இருப்பதவசியம். அது மட்டுமல்ல.
பிறரை நேரம் வரும் பொழுது அழிக்கத் தயாராகாவிட்டால் அழிக்கப்படுவான்.
மனிதனிலிருந்து விலகுவது மனிதத்தனம்.

******



book | by Dr. Radut