Skip to Content

15. மௌனம்

மௌனம்

கர்மயோகி

மௌனம் மனிதன் அறியாதது.
மௌனம் செயலை உச்சக்கட்டத்திற்கு உயர்த்தும்.
உச்சக்கட்டத்திற்கு உயர்ந்தும், செயல்பட முடியாத நிலை செயலுக்குகந்தது.
செயல்படுத்தாத செயலைப் போல் சிறப்பது எதுவுமில்லை.
மௌனமே மனிதன் அறியாதது. அதன் பின்னுள்ள மௌனத்தை அவன் கேட்டும் அறியான்.
அதுவும் அவனை அவன் உள்ள இடத்தில் வந்து அடையும்.
அந்நிலையிலும் செயல்படாதது சிறப்பு.
அடுத்த கட்டத்தில் செயல்பட்டால் அது தெய்வச் செயல்.
மனிதச் செயல் தெய்வச் செயலாவது, வாழ்வு தெய்வீக வாழ்வாவது.
மனிதச் செயல் வாழ்வுக்குரியது.
தெய்வச் செயல் பரிணாமத்திற்குரியது.
பரிணாமம் வாழ்வு தெய்வீகப் புனிதமாகப் பூரிப்பது.
அது வாழ்வு தெய்வமாகும் பாதை.
வாழ்வு தெய்வமானால் யோகம் வாழ்வாகும்.
எந்த நிலையிலும் உலகம் அவனைக் கண்காணிக்கும்.
புறம் மறந்தால் அகம் நிலையாகும்.
நிலையான அகம் நிரந்தரமான புறமாவது, வாழ்வு யோக வாழ்வாவது.

******



book | by Dr. Radut