Skip to Content

10. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

97. இலட்சியம் என ஒன்றில்லை.

  • இலட்சியம் அனைவருக்கும் உண்டு. நல்லவருக்குரிய இலட்சியம் நல்லது.
    உயர்ந்தவர்க்குரிய இலட்சியம் உயர்ந்தது.
  • பெயிலான பையன் தற்கொலை செய்து கொள்கிறான்.
    முதல் மார்க் தவறியதால் தற்கொலை செய்தவரும் ஒரிருவர் உண்டு.
  • ஒருவர் இலட்சியம் பாஸ் செய்வது, அடுத்தவர் இலட்சியம் முதல் மார்க்.
  • தவறு செய்ய எவரும் பிரியப்படுவதில்லை, அப்படித் தவறு செய்பவர்கள் மாட்டிக் கொள்ளப் பிரியப்பட மாட்டார்கள்.
    அதனால் மீண்டும் தவறு செய்யாமலிருக்க மாட்டார்கள்.
    ஷேக்ஸ்பியர் அம்மனநிலையை வர்ணிக்கிறார்.
    இலட்சியம் தவறு செய்யாததில்லை, மாட்டிக் கொள்ளாதது.
  • எந்தக் கோயிலிலும் செய்யும் நூறு பிரார்த்தனைகளில் தொண்ணூற்றுக்கு மேற்பட்டது என்னைக் காப்பாற்று என்று தவறு செய்தவன் செய்யும் பிரார்த்தனை.
  • பிரார்த்தனை செய்யாதவனுக்குச் சமர்ப்பணம் உண்டு.
    சமர்ப்பணம் செய்யாதவனுக்கு என்ன உண்டு. அவனுக்கு இலட்சியமுண்டா?
    இலட்சியம் கூடாது என்பது இலட்சியமா?
    கூடாது எனில் மறுப்பால் தொடர்பு ஏற்படுகிறது.
    ஏற்பாலும் மறுப்பாலும் தொடர்பில்லாதது, இலட்சியம் மனதில் இல்லை என்றாகும்.
  • இலட்சியத்தை ஏற்பவன் உயர்ந்தவன்.
  • ஏற்றதைப் பூர்த்தி செய்பவன் சிறந்தவன்.
  • இலட்சியத்தை மறுப்பவன், இலட்சியத்தைவிட உயர்ந்தவன்.
  • இலட்சியம் மனதில் இல்லாத நிலை, மனித நிலையைக் கடந்த நிலை.
  • அது ஒருவர் மனநிலையானால், அவருக்குப் பூரண யோக வாயில் திறக்கும்.
  • இந்தத் தொகுதியில் பெரும்பாலானோர் ஆதரவு ஒருவருக்கு உண்டானால், அவருக்குத் தேர்தலில் ஜெயம் உண்டு.
  • கட்சிக்குப் பலன் கருதாத முறையில் ஒருவர் உழைத்தால், அவருக்குத் தலைமைக்குரிய தகுதியுண்டு.
  • நேரு, மகளுக்கு M.P. பதவியும் தர மறுத்தால், அவர் பெண் அவர் ஆண்ட அளவுக்கு ஆளும் தகுதி பெறுகிறார்.
  • ஆங்கிலம் சரளமாக எழுத வருமானால், எந்தப் பரீட்சையும் பாஸ் செய்யும் வாய்ப்புண்டு.
  • பெண் பொறுப்பானவளானால், குடும்பம் திவாலாக முடியாது.
  • பொய் சொல்ல முடியாதவருக்கு, வாழ்வில் உயர்வு எந்த நிலையிலும் தடையாகாது.
  • பெரியதான இலட்சியமும் ஒருவருக்குப் பொருட்டாகாவிட்டால், அவருக்குப் பூரண யோகம் பலிக்கும்.

********

ஜீவிய மணி
 
வாழ்வு வேகமாகவும், உந்தலுமாகவுமுள்ளது.
வேகத்தை மறுத்தாலும், உந்தல் இருக்கும்.
உந்தலையும் மறுப்பவர்
பெறுவது ஜீவனின் மௌனம்.
மறுப்பது முதல் நிலை.
 

*******



book | by Dr. Radut