Skip to Content

08. பூலோகத்தைச் சொர்க்கமாக்கும் பூரணயோக இரகசியங்களை நிறைவேற்றும் நன்னாள் எந்நாள்?

பூலோகத்தைச் சொர்க்கமாக்கும் பூரணயோக இரகசியங்களை நிறைவேற்றும் நன்னாள் எந்நாள்?

கர்மயோகி

  • நன்னாள் என்பது நல்லுணர்வு ஏற்படும் நாள்.
  • 100 பேர்கள் சத்திய ஜீவியத்தை அடைந்தால், உலகம் சொர்க்கமாகும் என்றார் பகவான்.
  • 12 யோகிகள் சத்திய ஜீவிய சித்தி பெற்றாலும் அது நடக்கலாம் என்றார்.
  • மோட்சம் தனி மனிதனுடைய ஆத்மா விடுதலை பெறுவது.
  • புத்தரும், விவேகானந்தரும் மோட்ச வாயிலில் நின்ற பொழுது, உலகில் ஒரு ஆத்மா இருளில் உள்ளவரை தமக்கு மோட்சம் வேண்டாம் என இருவரும் மறுத்தனர்.
  • விவேகானந்தர் சமாதியடைந்தபின் தம் குறிக்கோள் பூர்த்தி- யடைய பகவான் ஸ்ரீ அரவிந்தரை ஜெயிலில் சந்தித்து, சத்திய ஜீவியத்தைக் காட்டினார்.
  • இலக்கைக் காட்டியவர் பாதையைக் காட்டவில்லை.
  • இலக்கைக் கண்ட மாத்திரம் பகவான் (Supramental Vision) ஜெயிலில் அனைவரையும், அனைத்தையும் நாராயணனாகக் கண்டார்.
  • விஸ்வரூப தரிசனம் பெற்ற அர்ஜுனன் உலகின் அற்புதத்தையும், கோரத்தையும் கண்டான். பகவான் கண்டதில் அற்புதமிருந்தது. கோரமில்லை.
  • காண்பது வேறு, அடைவது வேறு.
  • மோட்சம் ஒருவன் ராஜா ஆவதுபோல். சத்திய ஜீவியம் அனைவருக்கும் ராஜாவாகும் உரிமை கிடைப்பதுபோல். அது மக்களாட்சியாகும். ராஜா பட்டத்திற்கு வந்தால், சாகும்வரை ஆள்வான். அதன்பின் அவன் மகன் ஆட்சிக்கு வருவான். மக்களாட்சியில் ஒருவர் ஜனாதிபதியானால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்தவர் வருவார். அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர், ஜனாதிபதி மகனாகாது.
  • சத்திய ஜீவியத்தை அடையும் மார்க்கம் உலகுக்குப் புதியது. பகவான் பத்து ஆண்டுகளாக அதைத் தேடினார். அது மேல்- மனத்திலில்லை. அடிமனத்திலுள்ளது. அதையடைய தவம் உதவாது. சரணாகதி தேவை. ராஜா போய் மக்களாட்சி வர, ராஜ பீடத்தைப் பிடித்தால் போதாது. மக்கள் தங்கள் உரிமைகளை உணர வேண்டும். அதற்குப் பார்லிமெண்ட் போன்ற பல நூறு பேர்கள் கொண்ட சபை வேண்டும். நூறு பேர்களாவது தலைவர்கள் தேவை. 12 பேருக்குக் குறைந்தால் போதாது. அன்னையைத் தவிர பகவானுக்கு அடுத்தவர் கிடைக்கவில்லை. உடலை நீத்து, சூட்சும லோகம் போய் சக்தியைப் பூவுலகுக்குக் கொண்டு வந்தார்.
  • 1956-இல் வந்துள்ள சத்திய ஜீவிய சக்தியை நம்மவர் நூறு பேர்கள், ஆயிரம் பேர்கள் பெற்றால், பூலோகம் சுவர்க்கமாகும்.
  • அதற்கு ஆயிரம் யோகிகள் தேவை.
  • யோகத்தை நாடுபவருக்கு ஆதாய மனப்பான்மை கூடாது.
  • யோகத்தை ஏற்று எவரும் வராவிட்டால், கோடீஸ்வரனாக, இலட்சாதிபதியாக ஆயிரமாயிரம் பேர் வரலாம்.
  • அப்பணம் நேர்மையாகச் சம்பாதிக்கப்பட்டால் அது முதற்படி.
  • அதன் வழி உலகம் யோகத்தை நாடலாம்.
  • நூறு பேர்கள், ஆயிரம் பேர்கள் தேட வழி இல்லாவிட்டால் நாம் - ஒருவர் - கோடீஸ்வரனாக முன்வரலாம்.
  • கோடீஸ்வரனாக, நேர்மையாக வருவது பூலோகத்திற்கு யோகம்.
  • சம்பளத்திற்கு வேலை செய்பவருக்கு அது இல்லை.
  • வேலையை விட்டு தொழிலை நாடுபவருக்கு அது உண்டு.
  • தொழிலில், லஞ்சம் தராமல், பொய் கணக்கு எழுதாமல், ஏமாற்றாமல் ஏராளமாகச் சம்பாதிப்பது யோகம்.
  • சம்பளக்காரனுக்குக் கோடியில்லை.
  • ஆனால், வேலையை அதிகபட்சம் சிறப்பாகச் செய்தால், சமர்ப்பணத்தால் அதைச் செய்தால், வேலைபோய் தொழில் வரும்.
  • குடும்பத்துப் பெண்களுக்கு வழியில்லையா?
  • செய்யும் வேலைகளைச் சமர்ப்பணத்தால் உண்மையாகச் செய்பவர் எதைச் செய்தாலும் யோகியாவார்.
  • அப்படிச் செய்வதற்கு அடையாளம் எது?
  • அனைவரிடமும் நல்ல பெயரெடுப்பது ஒரு அடையாளம்.
  • அடக்கம் சிறந்த அடையாளம்.
  • Perfect Work சிறப்பான வேலை நல்ல அடையாளம்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சிருஷ்டிக்கப்படாத பிரம்மம், சிருஷ்டிப்பதில்லை. மனம் அறிவால் வளர்வதில்லை, எடுத்தால் குறைவதில்லை. பிரம்மம் மனம் போலும், ஆகாயம் போலும் உள்ளது.
 
The infinitesimal is the frontal part of the Infinite.
 
அணுவும் அனந்தமும் ஒளியும் நெருப்பும் போலும். அகண்டமும் கண்டமும் ஆணும் பெண்ணுமாம். ஜெராக்ஸ் பிரதி எடுத்தால் குறையாது. சிருஷ்டியால் பிரம்மம்
குறையாது. உள்ளும் புறமும் உள்ள பிரம்மம் ஒன்றே என்பது அற்புதம்.
 

*********



book | by Dr. Radut