Skip to Content

04. சாவித்ரி

சாவித்ரி

P.127 As if Life's banner on the roads of Space

காலத்தின் கதியைப் போற்றும் வாழ்வின் வண்ணக் கொடி

  • எண்ணம் ஆத்மாவின் பிரகாசமான நண்பர்கள்;
  • பேச்சு மனத்தின் விளையாட்டு அரங்கம், எண்ணம் அம்பெனும் ஆயுதம்,
  • மனம் பெறும் ஞானம் கருவியின் கடுமையைப் பொறுத்ததல்ல;
  • ஞானம் இயற்கையின் இயல்பு, அனைத்தும் செல்வதும் அவ்வழியாகும்.
  • புது இதயம் பெறும் புது மெருகு அதன் அலங்காரம்,
  • இறையுணர்வு பெற்ற குழந்தையெனும் வாரிசு,
  • காலம் எனும் கதியில் உரிமை பெற்ற குடிமகன்
  • ஆதி சிருஷ்டியின் அற்புத ஆனந்தம் புல்லரிக்கும்,
  • வாழ்வு ஆத்மாவின் இளமையில் மூழ்கித் திளைத்தது.
  • விவரிக்கவொண்ணாத வேகம் நிறை கொடுமை,
  • ஆனந்த நிர்ப்பந்தத்தின் அதிவேகமான கட்டாயம்
  • உலகினூடே சிரித்துக் குலுங்கும் ஓடையென ஒழுகும்.
  • உயர்ந்து ஒதுங்கி நிற்கும் வலிமை பெற்ற திறனாளும் பாங்கு,
  • அமைதியான வெளியில் அதிர்ஷ்டம்,
  • பிரபஞ்சம் அன்பெனும் பிரவாக அமைதி பெறும்.
  • திகட்டாத இனிமை செங்கோல் ஓச்சும் ராஜ்ஜியம்,
  • காலத்தின் உதடு முணுமுணுக்கும் இன்பமான இசை.
  • இயல்பான சட்டம் எழுச்சியால் பெறும் வேகம் தரும் சுதந்தரம்,
  • சூரியோதய விடுதலை ஆத்மாவிற்களித்த ஆனந்தம்,
  • விடுதலை பெற்ற செயலின் பெருமை விரித்த பரப்பு
  • நெருப்பான இதயம் வேகமாகப் பெற்ற பொன்மயமான விடுதலை.
  • ஆத்ம அழிவு எழுப்பும் பொய்யின் ஆதிக்கம் அங்கில்லை,
  • சொல்லோ, செயலோ, எண்ணமோ குதர்க்கத்தை ஏற்க முடியவில்லை
  • அவற்றால் சிருஷ்டியின் சத்தியத்தைக் கவர்ந்தழிக்க இயலவில்லை;
  • இயற்கை சக்தியின் சத்தியம் நிறை உண்மை லோகம்.
  • விடுதலை பெற்ற சுதந்தரம் தர்மமாக ஆளும் லோகம்.
  • தொடர்ந்த மகிழ்வு மூழ்கும் லோகங்கள்:
  • அழகெனும் ஆச்சரியம் விழித்தெழும் அரங்கு,
  • அசுர ஆட்சியின் அற்புத அலங்காரம் மிளிரும் வெளி,
  • பெருந்திறன் பெற்ற ஆசைகள் வாழ்வின் கட்டியக்காரனாய் ஆடின.
  • ஆயிரம் சுவர்க்கம் எழுந்து அமைதியாய் அமையும்;
  • பெருமையும் அருளும் வேலியற்ற எல்லையுள் எழுந்தன
  • அவை பரமண்டலம் வகுத்த பலரக வாழ்வு.
  • எண்ணற்ற ஆத்மாக்கள் எழுந்து எழுப்பும் குரலொலி,
  • ஆழ்ந்த ஆனந்தம் மார்பைக் காட்டும் மகிழ்வு,

********



book | by Dr. Radut