Skip to Content

01. ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

N. அசோகன்

21.
எதிர்ப்பு:
இறைவனின் திருவுள்ளத்தை எதிர்க்கும் மனநிலையை எதிர்ப்பு என்கிறோம்.
22.
நன்றியறிதல்:
இறை அருளின் செயல்பாட்டை உணர்ந்து, வரவேற்று ஏற்பதை நன்றியறிதல் என்கிறோம்.
23.
நம்பிக்கை:
ஆன்மாவினுடைய உயர்ந்த ஞானம் அறிவின் நிலையில் வெளிப்படும் பொழுது அதை நம்பிக்கை என்கிறோம்.
24.
சரணாகதி:
இறைவனின் திருவுள்ளத்திற்கு அடிபணிவதைச் சரணாகதி என்கிறோம்.
25.
சமர்ப்பணம்:
நம்முடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை இறைவனுக்குத் தெரிவித்து அவரிடம் ஒப்படைப்பதைச் சமர்ப்பணம் என்கிறோம்.
26.
அருள்:
இறைவனுடைய நிபந்தனையற்ற Responseஐ அருள் என்கிறோம்.
27.
அடக்கம்:
இறைவனுக்கு முன்னால் நாம் ஒன்றும் இல்லை என்ற உணர்வை நாம் அடக்கம் என்கிறோம்.
28.
ஜடம்:
ஆன்மாவை நம்முடைய புலன்களின் மூலம் பார்க்கும் பொழுது அது ஜடமாகத் தெரிகிறது என்று பகவான் சொல்கிறார்.
29.
உயிர்:
சித்திலிருக்கின்ற அறிவு சித்திலிருக்கின்ற உறுதியை நகர்த்தும் பொழுது பிறக்கின்ற எனர்ஜியை நாம் உயிர் என்கிறோம்.
30.
ஆர்வம்:
உயர வேண்டும் மற்றும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நாம் ஆர்வம் என்கிறோம்.
 
 
தொடரும்.....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
இதே சட்டப்படி ஒரு காலத்து ஆன்மீகப் பண்புகள் அடுத்த தலைமுறையில் சமூகப் பண்புகளாக மாறுவது சமுதாயத்தின் பண்பின் நிலையைக் காட்டும்.
 
பழைய ரிஷி இன்று குடும்பம் நடத்துகிறான்.
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பரிணாமம் தோற்றத்திற்குரிய உருவங்களைச் சார்ந்தது. பரிணாமம் ஜீவியத்திலும் நடக்கும். மனிதன் முனைந்து முயல்வது பரிணாமம். மேலிருந்து அருள் செயல்பட்டு, மனித பரிணாம முயற்சியைத் துரிதப்படுத்துகிறது. அருளைச் செயல்பட வைக்கும் பரிணாம முயற்சி இடைவிடாத நிலையில், முயற்சி யோகமாகும். அன்னையின் அவதாரம் முயற்சியைச் சுருக்குகிறது. சரணாகதியடைந்த மனிதனின் முயற்சியை முழுவதும் அழித்து அருள் வெளிப்பாடாக்குகிறது.
 
பரிணாமம் அருளை ஈர்க்கும்.
அருள் பரிணாமத்தைத் துரிதப்படுத்தும்.
 
******

 



book | by Dr. Radut