Skip to Content

05. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  • சூட்சுமம்
    • வாழ்வின் சூட்சுமங்கள் அனந்தம், அவை தர்மத்திற்குக் கட்டுப்பட்டவை அல்ல. நாம் அவற்றை அறிவது ஒரு அற்புதம்.

      எங்கும், எதுவும், எவரும், எந்த நேரமும் சூட்சுமத்தால் சூழப்பட்டுள்ளனர்.

      ஸ்விட்ச்சில் கரண்ட் உள்ளது கண்ணுக்குத் தெரியாது. அறிவுக்குத் தெரியும். கரண்டி சூடாக இருந்தால் சூடு பார்வையில் படாது. "ஏன் இந்த கரண்டி இங்கிருக்கிறது? நெருப்புக்கு அருகில் உள்ளது'' என்ற எண்ணம் ஒருவேளை சூடாக இருக்கும் என அறிவிக்கும். சூட்சுமமானவர்க்கு சூடு கண்ணுக்கு அலை அலையாகத் தெரியும். அன்பர்கள் முகம் பிரகாசமாக இருக்கிறது. அன்னையைப் பற்றிப் பேசும்பொழுது பலர் நெகிழ்ந்துவிடுகின்றனர். விஷயம் என்றால், அன்னை முதலில் நினைவு வருகிறது. போலீஸுக்கு தொலைந்து போன பொருளைச் சொல்வதன் முன் அன்னைக்குச் சொல்கின்றனர். அன்னையிடம் சொல்லியதால் போலீஸுக்குச் சொல்லாமலிருக்கின்றனர். 1960 முதல் அன்னையைத் தரிசிக்கும் ஆபீசருக்கு மாரடைப்பு (heart attack) வந்தபின் 3, 4 நாட்கள் வரை நான் கேட்கும் வரை மதர் (Mother) நினைவு வரவில்லை. அவர் அன்பரிலர். பேராசிரியர் தினமும் 1மணி நேரம் அன்னை முன் உட்கார்ந்து ஒவ்வொரு பூவாக அர்ச்சனை செய்கிறார். அவருக்குப் பிரச்சனை எனில், அன்னை

      • முதலில் நினைவு வரும்.
      • அது அன்னையில்லை, அவர் (personality) "நான்'' என்பது.
      • பேராசிரியருக்கு அன்னையெனில் தான், "நான்'' விலகி அன்னை பிரதிஷ்டை செய்யப்பட்டால், சிரமம் என வந்திருக்காது. அவர் 1968 முதல் 1973 வரை புதுவை வந்தபொழுது அவர் வாழ்வில் நடந்தவை அதற்கு முன்னும் பின்னும் நடக்கவில்லை.
      • "நான்'' தெரிய வேண்டும், நகர வேண்டும், அன்னை அங்கு வர வேண்டும். 
  • தூக்கம்

    தற்சமயம் இதை ஒரு பிரச்சனையாக்க வேண்டாம்.
    இந்தத் தூக்கம் எனக்குப் போக நானும், பிறரும் என்ன செய்ய வேண்டும் என்பதை எளிமையாக அறியலாம். அது பெரிய ஆழம்.

    • அதைப் புறக்கணித்து நடப்பது போதும்.
    • அதை ஏற்றுச் செயல்படுவது முடிவான பெரியது.
    • பல வழிகளில் பல முறை நாள் கணக்கில், வருஷக் கணக்கில் தூக்கம் போய் வந்துள்ளது.
    • இதை ஏற்க மூலத்தின் Originஇல் Sincerity தேவை.
    • வக்கீல்கள், ஆடிட்டர்களுக்கு ஒரு இங்கிலீஷ் பத்திரிகை பிடிக்கவில்லை. ஆனால் அடுத்ததை அவர்கள் வாங்குவதில்லை.
    • தன்னையறிய வேண்டும், நல்லெண்ணம் (Selfawareness, GOODNESS)* அவசியம்.
      (* நம்மைக் கரித்துக் கொட்டியவர் நாம் மாறியதைக் கூற வேண்டும்.)
    • நல்லெண்ணம் Good Will என்பது பொருள் தருவது மட்டுமல்ல. நமக்கு நல்லெண்ணம் உண்டு என நாம் அறியும் வரை அது நல்லெண்ணமாகாது. நமக்கு பலியானவர் மூலம் வரும் life response நல்லெண்ணத்தை நிரூபிக்கும்.
    • ஊழலுக்குப் பேர்போனவரை ஊழலை ஒழிக்கச் சொல்வது போன்ற முயற்சி.
  • ஒரு பிடி தான்யத்தை விட்டுக்கொடுக்க முடியாமல் இராஜ்யத்தை இழந்தவர் ஆயிரமாயிரம் பேர்.
    • ஒரு பெரிய அருளை நாம் கொடுக்க ஏற்பாடு செய்தால் அதிலிருந்து மெனக்கெட்டு விலகுபவர் மனம் இதைக் காட்டும்.
    • 25 வருஷத்தில் ரூ. 2500/- வசூல் செய்த பொது ஊழியருக்கு வருஷம் 85,000 வருமானம் வரும் வழி ஆச்சரியமாக இருந்தது. அவரிடம் வேலை செய்பவர் அதைச் சொல்லியதால் அந்த எண்ணத்தை அவரால் ஏற்பது மரியாதையில்லை என மறுத்துவிட்டார்.
    • நமக்குள்ளது சில கோடி சொத்து. காத்திருப்பது பல ஆயிரம் கோடி. இதை விடாமல் அது வாராது.
    • 27,000க்குப் பதிலாக 81,000க்கு நிலத்தை விற்றுக் கொடுத்தவரை படையாச்சி புண்படும்படிப் பேசினார். மகன் தருவதாகக் கூறிய 4500 ரூபாயைத் தரவில்லை.
    • பையன் அமெரிக்காவிலிருக்கிறான். தாயார் தங்க இடமில்லாமல் தவிக்கிறாள். தாயாரை நிரந்தரமாக அமெரிக்கா அனுப்ப முடியும். அம்முயற்சியை ஒருவர் மேற்கொண்டால் பெறுபவர் செய்யும் வக்ரம் புரியும்.
    • நகைக்குப் பெட்டி செய்து கொடுத்த நகைக் கடைக்காரர் கடை 100 மடங்கு பெரியதாயிற்று. அப்பெட்டி அன்னைக்குப் போயிற்று.
    • 10 வருஷமாகத் தான் சாப்பிடும் வீட்டில் 1 கிலோ சர்க்கரை வாங்கிக் கொடுத்துவிட்டு அதன் விலை 1½ ரூபாயைப் பெறுபவர் நாகரிகத்தை எப்படி விளக்குவது?
  • அன்னை சித்தம், என் பாக்கியம்
    • விஷயம் முறையிலில்லை. சொல்லும் மனநிலையில் உள்ளது. அன்னை சித்தம், என் பாக்கியம் என்பதை சொல்ல வேண்டிய முறையில் சொன்னால், மனித சுபாவத்தின் ஆழத்தில் மறைந்துள்ள வாய்ப்புகள் எழும்.
    • உள்ளபடி உண்மையாக இதைச் சொல்லும்பொழுது "நாம்'' வந்துவிடும். அது வருவது நமக்குத் தெரியாது. நமது மனம் நமக்குத் திருவுள்ளம் எனத் தெரியும்.
    • உண்மை முழுமையாக இருந்து சொல்லும்பொழுது Mother நம் இஷ்டப்படி நடப்பார்கள். அன்னை சித்தம் செயல்படாது. விபத்தில் மாட்டிய பெண்ணின் சகோதரி பம்பாய் போனது போல் அமையும். அதையும் கடந்தது நமது உண்மை Sincerity. Mother அதை ஏற்றுச் செயல்படுவதானால் மகனைப் பள்ளி (school)யை விட்டு நிறுத்து, பெண்ணுக்குக் கல்யாணம் செய்யாதே, ஹாஸ்டலில் (hostel) உள்ள பையனுக்குப் பணம் அனுப்பாதே, ஜுரமான மகளைப் போய்ப் பார்க்காதே என்று உத்தரவு "Sanction'' உள்ளிருந்து எழும்.
    • இன்று ஒரு நல்ல விஷயத்தில் அதைச் சோதனை (test)ஆகச் செய்ய முடியுமா என நடப்பது பெரிய காரியம். 1 லட்சம் சம்பாதிப்பவருக்கு 12 லட்சம் சம்பளம் வந்த பிறகு அவர் போகவில்லை. போகச் சொன்னால் அவரால் முடியாது. போகாதே என்றால் எவரால் முடியும்?

      சாஸ்திரிக்குப் பிரமதர் பதவியை ஏற்காதே என அன்னை சித்தம் சொன்னால் ஏற்க முடியுமா? எந்தச் சிறிய காரியத்திலும் இதைச் செய்ய முடியாது.

      காரியம் போன் பேசுவதானாலும், "பேசாதே” என "அன்னை சித்தம்' கூறினால் பேசாமலிருக்க முடியாது எனப் பார்ப்பது ஞானம், அன்னை சித்தம் வாராது. வந்தால் ஏற்க முடியாது.

    • மிகவும் "எளிமையான கடினம்'. "(Simple and profound)''.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பொறுமையில்லை என்பதை இழந்ததால் என்னால் தாமதிக்க முடியாது.
 
பொறுக்க முடியாதவன் அவசரத்தால் துடிப்பான்.
பொறுமையுள்ளவன் அவசரமில்லாமல் துடிப்பான்.
  • பொறுமைசாலிக்கும் பொறுமையில்லாதவனுக்கும் வேகம் ஒன்றே.

 

******



book | by Dr. Radut