Skip to Content

12. அஜெண்டா

அஜெண்டா

Sri Aurobindo's story of the 4 clocks stopping (Volume V, 1964, Page 145)

பகவானுடைய 4 கடிகாரம் நின்ற கதை

1938இல் பகவான் தொடை எலும்பு முறிந்துவிட்டது. இரவில் பாத்ரூம் போய் வந்தவர் அவர் அறையில் உள்ள புலித்தோலிலிருந்த புலித்தலையின் மீது இடறி விழுந்து எலும்பு முறிந்தது. அவருக்கு நடக்காது, நடக்க முடியாது. அன்னை தீய சக்திகட்கு எப்பொழுதும் பலியாகக் கூடியவர். அதனால் பகவானுடைய கவனம் (concentration) முழுவதும் அன்னையின் தலையைச் சுற்றியிருக்கும். அந்த நிலையில் அவர் தாக்குதலுக்குட்பட்டார். அந்த நாளில் அன்னை மாலையில் காரில் வெளியில் போவார். கடலூர், விழுப்புரம், சிதம்பரம் வரை போவதுண்டு. ஒரு முறை மாயவரம் போய் ஆதீனத்தைக் கண்டார். அவரை அசுரனாகக் கண்டார். சிதம்பரம் கோயிலுக்கு ஒரு முறை வந்திருக்கிறார். கடலூரில் கார் ரிப்பேர் ஆனதால் ஆலம்பூண்டி பாஷியம் ரெட்டியார் வீட்டில் 3 மணி நேரம் தங்கியிருந்தார். வீராம்பட்டினம் திருவிழாக் கூட்டத்தில் கார் நின்றபொழுது வீராம்பட்டினம் காளி அன்னையிடம் வந்து, "இன்று நீங்கள் வந்ததால் எனக்கு வழக்கமாக வரும் கோழிப் பலி அதிகமாயிற்று. அடிக்கடி நீங்கள் வர வேண்டும்'' என்று விண்ணப்பித்தார். தன்னைப் பகவானுக்கு முழுமையாகச் சரணடைந்தாலும், அன்னையின் சுபாவம் எதற்கும் கட்டுப்பட்டதல்ல. பகவான் கூறியதை எதையும் மீறும் எண்ணமில்லாவிட்டாலும், அவர் சுபாவம் இயல்பாக அனைத்தையும் மீறும். ஒரு முறை கார் நின்றுவிட்டது. அன்னை காரிலிருந்து இறங்கி பகவானை நோக்கினார். கார் புறப்பட்டது. பகவான் சூழல் புதுவையிலிருந்து 7½ மைல் வரையிருப்பதாக பகவான் கூறியது அன்னைக்கு நினைவு வந்தது. பகவானை, சூழலைக் கடந்து போக முயன்ற பொழுது கார் நின்றுவிட்டது. உதார் என்ஜினைப் பரிசோதனை செய்தார். எந்தக் கோளாறும் இந்த இன்ஜீனியருக்குப் புலப்படவில்லை. அதன் பிறகே அன்னை பகவானை நாடினார்.

6.30 மணிக்கு அன்னை திரும்புவது வழக்கம். 6.30 மணிக்கு அன்னை திரும்பாவிட்டால் பகவான் ஜன்னலிடம் வந்து கார் வந்துவிட்டதா எனப் பார்ப்பதுண்டு என அங்கு வேவு பார்க்கும் CID வக்கீலிடம் கூறினான்.

அன்னை லோக மாதா. அவரைத் தீய சக்திகள், ஆபத்திலிருந்து காப்பாற்றுவதைத் தன் முதற் கடமையாகக் கொண்டவர் பகவான். அதனால் ஏற்பட்டதே இந்த விபத்து.

சென்னையிலிருந்து முதன் மந்திரி இராஜாஜி 6 டாக்டர்களை அனுப்பியிருந்தார். எலும்பு கூடியபின் நடப்பது அவசியம் என டாக்டர்கள் கூறியதால், பகவான் நடக்க ஆரம்பித்து தினமும் 10 மணி நேரம் வரை நடந்தார். அவருடைய அறையிலிருந்து பவித்ரா அறை - கார் நிற்பதற்கு மேல் - வரை நடப்பது வழக்கம். அப்பொழுது இரு முனைகளிலும் இரு கடிகாரமும், இடையே இரண்டு கடிகாரங்களையும் வைத்திருந்தார்.

சந்திரநாகூரிலிருந்து நளினி, சீனுவாச அய்யருடன் புதுவை வந்து 1910இல் சங்கர செட்டியார் வீட்டிலும், பிறகு guest house கெஸ்ட் அவுஸ் என்ற வீட்டிலும், முடிவாக தற்போதைய ஆசிரமம் கட்டிடத்திலும் தங்கியிருந்தார். அன்னை 1914இல் வந்தபொழுது கெஸ்ட் அவுஸில் சந்தித்தார். 1920இல் தற்சமயம் ஆசிரம கட்டிடத்திற்கு வந்துவிட்டார். அன்னை வந்தபொழுது பகவான் அறை பெருக்கப்படுவதில்லை. குப்பை, தூசி, பேப்பர், சுருட்டுத் துண்டு சிதறிக் கிடக்கும். அன்னையே பெருக்க ஆரம்பித்தார். சுத்தத்தை முக்கியமாகக் கடைபிடிக்கும் கொள்கைக்கு இது நேர் எதிரானது. நடக்கும் பொழுது அது போல் ஒரு கொள்கையைக் கடைபிடித்தார். நடக்கும் தூரத்தை 4 பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரே நேரம் தேவை என்பது கொள்கை. இந்த (precision) துல்லியமான முறை Supramental perfection சத்திய ஜீவிய சிறப்பை எட்ட உதவும் என்பது அவர் கொள்கை. இக்கொள்கையின் இரகஸ்யத்தை அறிந்தவரால் சிறு காரியம் செய்து மலை போன்ற பெரிய பலனை அடைய முடியும். நவம்பரில் வாஷிங்டனில் உள்ள கூட்டத்திற்குப் போக விசா ஆகஸ்ட் மாதம் கேட்டவருக்கு இன்டர்வியூ ஜனவரியில் வந்தது. அவர் அந்த சமயம் ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருந்தார். மேற்சொன்ன தத்துவ இரகஸ்யம் அறிந்த அன்பர் "இக்கட்டுரையை குறித்த நேரத்தில் எழுதி முடித்தால் விசா கிடைக்கும்' என்றார். அப்படியே நடந்தது.

தீய சக்திகட்கு இந்த இரகஸ்யம் தெரியும். அவை 4 கடிகாரங்களையும் நிறுத்திவிட்டன. பகவான் ஒரு நிமிஷம் நடப்பதை நிறுத்தி, "இது என்ன தவறான விளையாட்டு?'' என்றார்.

  • சுபாவத்தின் இந்த இரகஸ்யத்தை அறிந்தவர் பேராபத்துகளின்று மயிரிழையில் தப்பிப்பார்.
  • அப்படிப்பட்டவருடைய சிறு முயற்சிக்கு மலை போன்ற மகத்தான பெரும்பலன் தேடி வருவது உலக அனுபவம்.
  • இடைவிடாது மனத்தின் ஆழம் அன்னையில் லயித்திருப்பவர்க்கு இந்த அம்சம் இயல்பாக எழும்.

*******

 



book | by Dr. Radut