Skip to Content

06. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

 

Consecrations to the Mother!

Dear Mother,

Thanks for being with me!

இது நாள்வரை என்னை வாழ வைத்து என் வாழ்க்கைக்கு அர்த்தம் அளித்த என் இனிய அன்னைக்கு என் சிரம் தாழ்த்தி நன்றியுடன் வணங்குகிறேன். ஒவ்வொரு நிமிடமும் நான் அன்னையிடம் விஷயங்களை சமர்ப்பணம் செய்கிறேன், அன்னை துல்லியமாக அருள் புரிகிறார். நாம்தான் அன்னை Consciousnessலிருந்து சற்று விலகலாம். ஆனால் அன்னை தொடர்ந்து அருளுகிறார். Labக்கு நான் Rs.20,000/- தர வேண்டும் (மாதாந்திர கட்டணம்). நான் கவனக்குறைவாக Rs.24,000/- கொடுத்திருக்கிறேன். ஆனால் கொடுக்கும்போது, அன்னையை அந்த தொகை பெறுபவரின் ஆடையின் நிறத்தில் நினைத்துக் கொண்டேன் (அன்னையிடம் கொடுப்பதாக). இரவு 10.30 மணிக்கு போன் வந்தது, நான் Rs.4,000/- தொகை அதிகம் செலுத்தியதாக. அன்னைக்கு நன்றி! நான் வேறு ஏதும் கூறுவதற்கு இல்லை. என் உதவியாளர் அந்த நபர் தெய்வம் என்று கூறினார் - உண்மையை ஒப்புக்கொண்டு நேர்மையாக நடந்ததால். அவருக்கு நன்றி என்றாலும் பணம் வாங்கியது என் உயிர் அன்னை அன்றோ! அன்னை எப்படி என்னை ஏமாற்றுவார்! மேலும் அன்னையின் ஆன்மீக மற்றும் வாழ்வின் நெறிகளை அன்னையின் கண்ணோட்டத்தில் (in perfect Mother's Consciousness) வாழ எனக்கும் என்னை போன்றோருக்கும் எனது ப்ரார்த்தனைகள்!

நன்றி!

-- Dr. சண்முகப்பிரியா, சென்னை-75.

******



book | by Dr. Radut