Skip to Content

11. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

48. பணமும், அதிகாரமும் நம்மை நாடி வருவது - வலிமை சேர்வது.

  • நாடி வருவது நானிலம் பணிவது.
  • மனிதன் ஜடம்.
  • பணம் ஜீவனுள்ளது. அடுத்த கட்டத்திற்குரியது.
  • நம் லோக சக்திகளை நாம் தேடினால் அவை பலிக்கும்.
  • அடுத்த உயர்ந்த லோக சக்திகளை - பணத்தை - முயன்று பெற வேண்டும்.
  • அது பெரு முயற்சி.
  • அதனால் பணமுடையவனுக்கு மரியாதை.
  • அப்படியிருக்க எப்படி ஒருவனைப் பணம் நாடி வரும்?
  • பதவி அதைவிட சற்று உயர்ந்தது.
  • பணமோ, பதவியோ ஒருவரை நாடி வருவது எப்படி, ஏன்?
  • வலிமை அதற்குரியதைக் கவர்ந்து ஈர்க்கும்.
  • வலிமை என்பது என்ன?
  • செய்த வேலைக்குரிய பலனுக்கு மேல் உபரி எழுந்து சேர்வது வலிமை.
  • வலிமை திறமையிலிருந்து எழுவது.
  • திறமை பல வகைப்படும்.
  • ஒவ்வொரு திறமைக்கும் உள்ள உபரிக்கு வலிமையுண்டு.
  • பல நூறு திறமைகளால், அவற்றின் உபரியால் சேர்ந்தது வலிமை.
  • அந்த வலிமை அடுத்த லோகத்திற்குரியது. ஜட உலகிலுள்ள மனிதனுக்கு உயிரில் வலிமை சேரும்.
  • அவ்வலிமைக்குப் பணம், பதவி பணியும்.
  • வலிமை எல்லா லோகங்கட்கும் உரியது, ஜடம், உயிர், மனம், ஆன்மா.
  • ஆன்மீக வலிமை அரிது.
  • இருந்தால் வெளியில் தெரியாது.
  • தனக்கே தெரியாமலிருக்கும்.
  • பணமோ, பதவியோ நாடி வந்தால் ஆன்மீக வலிமையிருப்ப- தாகப் பொருள்.
  • சீசர், அலெக்ஸாண்டர் 20ஆம் வயதில் தலைமைக்கு வந்தனர்.
  • நெப்போலியன் 29இல் வந்தான்.
  • தலைமை வயதிற்குரியதல்ல, வலிமைக்குரியது.
  • வெளிநாட்டுப் பட்டம் பெற்றவருக்குத் தலைமை வீட்டில், ஆபீசில், கட்சியில் அதுபோல் வருவதுண்டு.
  • தேடிப் போய் கிடைப்பதே பண விஷயத்தில் அரிது.
    அது நாடி வருவது அரியதில் பெரியது.
  • அரியதில் பெரியது ஆன்மா.
    ஆன்மாவை அவை தேடி வருவது யோகம் பலிப்பதாகும்.
  • 1950இல் மத்திய மந்திரி புதுவை பெரியவர்களைக் கூட்டி, சர்க்கரை ஆலை ஆரம்பிக்க அழைத்தார். எவரும் முன் வரவில்லை.
  • 1980இல் ஒரிஸாவில் 5 இலட்சம் பணமுள்ளவரில்லை.
  • பணம் அரிது.
  • அரிதான பணம், அபூர்வமான பதவி ஒருவரைத் தேடி வருவது வாழ்வில் காணக் கிடைக்காதது.
  • அது நடந்தால் அவருக்கு ஆன்மீக விழிப்புண்டு எனப் பொருள்.
  • அவ்விழிப்பிற்கு யோகம் பலிக்கும்.
  • பலிக்கும் வாய்ப்பு அரிது.
  • அது இருந்து நடைமுறையில் பலிப்பது அதனினும் அரிது.
  • நான் அதை பூரணயோக வாயில் என்றேன்.
  • எனக்கு வரும் கடிதங்களில் ஏதோ சிலவற்றுள் அந்த அம்சமிருப்பதை நான் காண்கிறேன்.

தொடரும்.....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சிப்பந்தியின் நாணயம் அதிகாரியின் அதிகாரத்தைப் பொறுத்தது.
 
 
 
********
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அதிகாரியின் அதிகாரமில்லாத நேரமுள்ள நாணயம் நாட்டின் வழக்கிலுள்ள நாணயம். தனிப்பட்டவனுடைய சுபாவமான நாணயம்.
 
அதிகாரமில்லாத இடத்து நாணயமே நாணயம்.
 
 
 
*******



book | by Dr. Radut