Skip to Content

10. அன்னை இலக்கியம் - பெருமாள் டைலர்

அன்னை இலக்கியம்

பெருமாள் டைலர்

P. நடராஜன், சிதம்பரம்

இரவு 10 மணி, சனிக்கிழமை. அழைப்பு மணி ஒலிக்க, கதையைப் படிக்கத் தொடங்கிய சந்துரு புத்தகத்தை மடித்து வைத்துவிட்டு கதவைத் திறந்தான்.

" Hey! பாபு! வா, வா. யப்பா எவ்வளோ வருஷமாயிடுத்து உன்ன பார்த்து'' என வீட்டிற்கு வந்த பள்ளிக்கூடத் தோழனான பாபுவை வரவேற்றான் சந்துரு.

"ம்... வரேன்... வரேன்... தூங்கலயா? எழ்ங்ள்ட்ஆ இருக்க?''

"இப்பத்தான் Prayer முடிச்சுட்டு, அன்னை இலக்கியத்தை படிக்கலாமென்று உட்கார்ந்தேன். என்னடா தொந்தியும் தொப்பையுமா! முகத்தை பார்த்துதான் அடையாளம் கண்டுபிடித்தேன்'' என்று பாபுவின் உருவத்தை விமர்சனம் செய்தான் சந்துரு.

"தொந்தி, தொப்பை தனித்தனியாகவா இருக்கு? ஒரே sizeஆ six packupsப் பதிலாக single bagஆ இருக்கு. உட்கார்ந்தே செய்கிற வேலை, மேலும் நேரம் சென்று சாப்பாடு சாப்பிட்டா இப்படிதான்'' என்று காரணம் சொன்னான் பாபு.

" Joke எல்லாம் இருக்கட்டும். வேலையெல்லாம் எப்படி இருக்கு?''

"சொல்லும்படியா என்ன, machine life, computer machine கூட. ரெட்டியார் மெஸ் ஆட்டுகல்ல நகர்த்தர வேலையா இருந்தா பட்டணம் பொடி விளம்பரத்துக்கு மாடலா ஆகியிருப்பேன். Mouse நகர்த்தர வேலை, animation work, நேரம் தவறி சாப்பிடறது, தூங்கிறது, இதான் ரொட்டின்''.

"சரி, சாப்பாடு ஆச்சா? கேட்க மறந்துவிட்டேன்''.

"ஆச்சு, அடுத்து என்ன? தூங்க வேண்டியதுதான். ஆபீஸ்ல (promotion) பிரமோஷன் பிரச்சனை. எனக்குக் கீழ் இருக்கறவன் மேல போகப் போறான். SSLC சர்டிபிகேட் Xerox எடுத்தேன். உன் ஞாபகம் வந்தது. அதான் relaxஆ உன்ன பார்க்கலாம் என்று Monday leave போட்டுட்டு வந்தேன். காலையில பேசுவோம்''.

"சரி, சரி, தூங்கப் போகும் போது அதிருப்தி வேண்டாம்'' என்று அமைதிப்படுத்தினார் சந்துரு.

"சந்துரு, என்ன ஏதாவது home facial? ராத்திரி 10 மணிக்கும் பளிச்சென்று இருக்க?''

"அதெல்லாம் ஒன்னும் இல்ல. தினமும் 9.30 மணிக்கு Sri Aurobindo's Life Divine ஓரிரு பக்கங்கள் படிப்பேன். சத்தான விஷயம் படிச்சா முகத்துல களை வருமாம். அதான்.... Function எதுக்கோ attend பண்ண வந்துருக்கன்னு நினைச்சேன். என்னப் பார்க்கத்தான் வந்திருக்கன்னு தெரிஞ்சதும் சந்தோஷமாக இருக்கு'' என்று கூறி தூங்கப் போயினர் நண்பர்கள் இருவரும்.

ஞாயிறு காலை உணவு அருந்திக்கொண்டே பேச்சைத் தொடர்ந்தனர்.

"உன் வேலைகள் பாதிக்காம உன்கூட இருக்கணும் என்று நினைக்கிறேன் சந்துரு'' என்றான் பாபு.

"சரி பாபு. காலை 9 மணியிலிருந்து 10.30 வரை அன்னை தியான மையத்துல தியானக் கூடல். விருப்பம் இருந்தா வா, இல்ல ஊர சுற்றி பார்த்துட்டு 11 மணிக்கு வீட்டிற்கு வந்துடு. என்ன சொல்ற?''

"நானும் வரேனே. வரலாமா இல்ல Members மட்டுமா? என்னுடைய single bag குறைய யோகப் பயிற்சி இருக்குமா?'' என்று கேள்விகளை அடுக்கினான் பாபு.

"தாராளமா வா பாபு. ஆர்வமிருந்தா யார் வேண்டுமானாலும் கலந்துக்கலாம். நினைவால அன்னையை வழிபடுவோம். சொற்பொழிவு இருக்கும். பின்னர் தியானம் ணீ மணிநேரம்''.

மையம் மெல்லிய நறுமணம் கமழ அழுத்தமான பேரமைதி அவர்களை அரவணைத்து வரவேற்றது. மையமாய் ஸ்ரீஅரவிந்தர் அன்னை திருவுருவப்படங்கள் மேடையில் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.

நண்பர்கள் அமைதியாய் அகத்தில் ஆழ்ந்தவர்களாய் தனித்தனியே பிரிந்து அமர்ந்தனர்.

மணி 9.00. அன்னை மற்றும் ஸ்ரீ அரவிந்தரின் நூல்களிலிருந்து வாசித்தார் ஒருவர். பின்பு கூட்டத்தின் மத்தியிலிருந்து ஒருவர் எழுந்தார். அழகாய் கை தட்டினார்.

"ஸ்ரீ அன்னையையும் பகவான் ஸ்ரீ அரவிந்தரையும் நினைவால் ஏற்று வழிபட கூடியுள்ளோம். அன்னை வழிபாடு அக வழிபாடு. இங்கு அகம் மட்டுமே பூஜைப் பொருள் நிவேதனம். Motherஎன்றால் இனிமை. Sweet... Sweet Mother... இனிப்பு உங்கள் அகத்தில் செய்ய காரம் (காரப்பொடி) தேவையில்லை இந்த அரங்கில் அகம் மட்டுமே குடிகொள்ளட்டும். அகங்காரம், அதிகாரம் ஆகிய இரண்டு காரங்களையும் வெளியே அனுப்பி, கரைத்துவிடுவோம். கொஞ்ச நஞ்ச காரத்தையும் இனிப்பில், அன்னையெனும் இனிப்பில் கரைத்துவிடுவோம். காரங்கள் களைந்து, இனிமையான அகத்திற்கு மட்டுமே இங்கு வேலை; அனுமதி.

நாம் எல்லோரும் தொழில் புரிகிறோம், எதற்காக? பணத்திற்காக, உலகில் வேண்டியதை பணத்தால் பெறுவதற்காக. நினைத்தது எல்லாம் பெறக்கூடிய வகையில் பணம் சம்பாதிக்கிறோமா? பற்றாக்குறை. Part-time job செய்யலாமா? Company jump over, business change என்றெல்லாம் தெரிந்து, அறிந்து, முறைகளில் முயல்கிறோம். உண்மையில் பற்றாக்குறையாக இருப்பது நம் குணம், சுபாவம். உதாரணமாக tailor கடையை 10 வருடமாக வைத்திருக்கார் ஒருவர் என்றால், இன்று அவரது கடை எப்படி இருக்க வேண்டும்? வேலைக்கு 50 tailors, 5 branches, readymade showroom என விரிந்து பரவியிருக்க வேண்டும்.

முன்பெல்லாம் பண்டிகை வந்தால் வேலை அதிகமாக இருக்கும். இப்பொழுது நிலைமை என்ன? Market என்ன?

New year, school uniform, company uniform, gas company, petrol bunk, security services என uniform தைக்க வேண்டியுள்ளது. கட்சிகாரர்கள் வெள்ளை ஆடை என பரந்து விரிந்துள்ளது tailorக்கான வேலை, தேவைகள்.

இவ்வாறாக demand இருக்க, 10 வருடக் கடை இன்னும் வேலைக்கு ஆளில்லாமல் குடும்பக் கடையாக, jacket பீஸ் தைப்பதிலேயே அடங்கியுள்ளது என்றால் என்ன அர்த்தம்...'' என்று யதார்த்தமாக பேசத் தொடங்கினார் சொற்பொழிவாளர்.

தியானம் முடிந்து நண்பர்கள் தியான அரங்கிற்கு வெளியே இணைந்தனர்.

" Thanks சந்துரு. நிம்மதியாக இருக்க நடந்தே போலாமா வீட்டுக்கு. வரப்போதான் autoல வந்தோம்'' என்றான் பாபு.

"சந்துரு, சொற்பொழிவுல tailor உதாரணம் சொன்னப்போ எனக்கு நம்ம school பக்கத்துல பெருமாள் டைலர்னு கடை வைச்சிருந்தாரே, அவர் ஞாபகம் வந்தது. அப்பவே அவருக்கு 35 வயதுக்கு மேல இருக்கும். கடை இன்னும் இருக்கா?''

"ம், இருக்கு பாபு. இடம் மாறிவிட்டார் பக்கத்து தெருவுல''.

" Develop ஆயிட்டாரா?''

"இல்ல. நம்ம 30 வருடத்திற்கு முன்னால எப்படி பார்த்தோமோ அதே setupதான். ஓட்டுக் கட்டிடத்துல வாடகை இடம், குறுகிய இடம், இரண்டு மெஷின்களோட''.

"அவருக்கே இரண்டு பையன்களாச்சே, develop ஆகலன்னு சொல்லறது ஆச்சரியமா இருக்கு சந்துரு''.

"ஒரு பையன் சண்டை போட்டுகிட்டு அடுத்த தெருவுல அப்பா மாதிரியே setupல கடை வைச்சிருக்கான். வாசல்ல செங்கல்லு வச்சு, அதுக்கு மேல வளையல் பெட்டி, கைக்குட்டை விற்க தோரணம், வாரத்தில ஒரு சண்டை வாடிக்கைகாரர்களோட, newspaper படிச்சிட்டு, வெட்டிக்கதை கூட்டம், ஓட்டை சைக்கிள், கடைக்கு நுழையுமுன் கால் கழுவுவாரே டைலர் அதே இரும்பு வாளி, அளவு எடுக்கற வேலை இல்ல, jacket தைக்கிற வேலை, கடைக்கு வெளியிலேருந்துதான் தைக்க கொடுக்கனும், எதுவும் மாறலை'' என்று விவரித்தான் சந்துரு.

"கண்ணாடி கதவு, air-conditioned இருக்கிற இந்த காலத்துல 30 வருஷமா அதே வறுமைல இருக்கிற பெருமாள் டைலர் மாதிரிதான் நானும் இருக்கேன் சந்துரு. Office timeல பக்கத்துல இருக்கிறவன்கூட விடுதலைப்புலி பிரபாகரன் உயிரோட இருக்காரா, இல்லையான்னு அரட்டை அடிக்கறது, break timeலயும் அரட்டை, superiorsகூட சண்டை, teamல misunderstanding, பிரமோஷன் மட்டும் service year வச்சி எதிர்பார்க்கிறேன். என்கிட்டதான் குறை. அப்பறம் ஏன் எனக்கப்புறம் வேலையில சேர்ந்தவனுக்கு பிரமோஷன் தரமாட்டாங்களா என்ன?'' என்று உணர்ந்தவனாக பேசினான் பாபு.

"பாபு, எனக்கும் நான் செய்யற தவற்றை உணர்த்தியது சொற்பொழிவு. காலேஜ்ல tutorஆக இருக்கேன். Tea கடையில போய் மசால்வடை சாப்பிட்டு, tea குடிச்சிட்டு, classஎடுக்கறத hobby மாதிரி செய்தா பலன் எப்படி இருக்கும்?'' என்று தானும் உணர்ந்தவனாய் பதிலுக்குப் பேசினான் சந்துரு.

" Sincereஆ இருக்கனும் வேலையில அப்படின்னு தீர்மானம் செய்திருக்கிறேன் சந்துரு. சாப்பிடற சாப்பாடு உடம்பதான் வளர்த்திருக்கு. சொற்பொழிவு என்னோட மனதை வளப்படுத்திருக்கு. தேங்ஸ் சந்துரு''.

"எனக்கும்தான் தெளிவு கிடைச்சிருக்கு பாபு''.

" Cell phone ஒலிக்க, பாபு எடுத்து தன் cell phoneல பேசினான். முகம் மலர்ந்தான். நன்றி கூறினான்''.

"சந்துரு, good news! என்னோட ம் managerதான் call பண்ணினார். என்னை வேற teamக்கு seniorஆக promote செஞ்சிருக்காங்களாம். என்னோட communication problem, சண்டை எல்லாம் industryல சகஜம். பொறுப்பு கொடுத்தா சரியாகிவிடுவார். Experienced staff demotivate ஆகிட கூடாதுன்னு managementல தீர்மானிச்சு இந்த promotion எனக்கு கொடுத்திருக்காங்கலாம்'' என்று மலர்ந்து கூறினான் பாபு.

"ரொம்ப happyடா பாபு. வாழ்த்துகள்'' என்றான் சந்துரு. இடம் மாறிய பெருமாள் டைலர் கடையை நண்பர்கள் பார்த்தனர். ஞாயிற்றுக்கிழமை கடை திறந்திருந்தது. வாசலில் ஒரு பெண்மணி சண்டை போட்டுக்கொண்டிருந்தார். பெருமாள் டைலரிடம், "கல்யாணத்துக்கு போட்டுட்டு போகணுன்னு உங்ககிட்ட ஜாக்கெட் தைக்க கொடுத்தா, கடை வாசல்ல நின்னுதான் தைச்சு வாங்கிட்டு போகணுமா, வெள்ளிக்கிழமை கொடுக்கிறதா சொன்னீங்க இல்ல''.

பதில் ஏதும் பேசாமல் நரைத்த தலையுடன் தைய்த்துக் கொண்டிருந்தார் பெருமாள் டைலர். இடம் மாறினாலும் நடத்துபவர் சுபாவம் மாறவில்லை என்ற தெளிவு மனத்தில் பட நடந்தனர் நண்பர்களிருவரும்.

முற்றும்.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அதிவேகமான செயலை ஆதரிக்கும் மௌனத்தில் காத்திருப்பது பொறுமை.
 

******



book | by Dr. Radut