Skip to Content

05. சாவித்ரி

சாவித்ரி

P.117 Careless of suffering, heedless of sin and fall

         வலியும் பொருட்டல்ல, பாவமும், இழப்பும் பதட்டம் தாராது

  • ஆபத்தைச் சந்தித்து அற்புதத்தைத் தேடுகிறாள்
  • அகமும் புறமும் பரவெளியான ஆத்ம லோகம் சுவடுபடாத லோகம்
  • நீண்ட சோதனையாக அமைந்த நிரந்தரம்
  • அறிவுத்தாகம் நிறைந்த சக்தியின் முன்னுள்ள ஆபத்து
  • சத்தியத்தையெல்லாம் சந்தித்து, பலனற்ற முயற்சியாகி
  • திருப்தியில்லாமல் அசைந்து, தெரியாத முடிவை நாடி
  • உள்மனம் கண்டபடி புறவாழ்வை அமைத்து
  • நினைத்து நெகிழ்ந்து, உணர்ந்து மகிழ்ந்து
  • வேகமே வேதனையாகி, பெற்ற பேற்றின் பெருமை நினைந்து
  • தலைவனாகி, கருவியாகி, அடிமையாகி
  • சட்டப்படி செயல்பட்டு அர்த்தமற்ற முடிவு பெற்று
  • முடிந்ததை முடிந்தவரை செய்து முடித்து
  • வேதனை மூலம் ஆனந்தத்தைத் தேடி இதயம் போக்கியபொழுது
  • இடியென ஒலிக்கும் ஏறியிறங்கும் துள்ளல்
  • சந்தர்ப்பம் என்ற ஓட்டப்பந்தயத்தைப் புயலென ஊடுருவி
  • மலையையும் மடுவையும் ஆட்டி அசைத்து
  • காலமெனும் சக்கரம் உயர்த்தி உடைக்கும் சுழற்சி
  • வாடிய ஆசை நாடியையிழந்து ஊர்ந்து
  • புழுவாக உழன்று இயற்கையெனும் சகதியில்
  • அசுரனை அணைத்து, புவியை விழுங்கி
  • நட்சத்திரம் முடியாகி, கடலாடையாகி
  • உச்சியினின்று உயர் உச்சிக்கு ஆர்ப்பாட்டமாகச் சென்று
  • லோகங்களைத் தேடி, வென்று, வென்றதை ஆண்டு
  • சோகத்தின் எழிலில் சொக்கி விரும்பி மயங்கி
  • வேதனையின் ஆழத்தில் வேரூன்ற முயன்று
  • உழல்பவள் உள்ளத்தின் இருட்டைப் பற்றினாள்
  • விரயமான ஆத்மாவின் வீணான உரையாடல்
  • இழந்ததை எண்ணி எழுதி எடுத்து
  • நீண்டநாள் நட்புடன் துக்கத்தில் மூழ்கி அமைந்து
  • வீறுகொண்ட வேகம் எளிதில் களைத்து
  • சொச்சமான மகிழ்ச்சி தொக்கி நின்ற முடிச்சு
  • விதியிடம் தப்பி, வாழ்வின் இலக்கையிழந்து
  • ஆயிரம் குணம் அவிழ்ந்து விரியும் திரை
  • எவரும் எதுவும் சட்டமாகும் வாழ்வின் பாணி
  • தூய ஆனந்தம் பெற்றவர் ஒருவருமிலர்

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஆசையால் உந்தப்படுபவன், ஆசையை வென்ற நிலை, அவன் செயலே நம் செயலாகக் கொண்ட நிலை.
 
அவன் செயலே நம் செயல்.

*******



book | by Dr. Radut