Skip to Content

07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைத் தேடாதே.
    • இருப்பது போகும்வரை எதுவும் வாராது.
  2. கையிலுள்ள கிளாக்காய், மரத்திலுள்ள பலாக்காயைவிட சிறப்பு.
    • கிளாக்காயை நாடாவிட்டால் பலாக்காய் நம்மை நாடி வரும்.
  3. புறங்கையை சுவைக்காதவனில்லை.
    • கொட்டையையும் சுவைக்காதது புறத்தின் கட்டுப்பாடு.
  4. அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி.
    • யோகம் செயல்வழிச் செல்லும்.
  5. ஆடையில்லாதவன் அரை மனிதன்.
    • அன்பில்லாதவன் அரை மனிதன்.

தொடரும்....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தனக்குத் தெரிந்ததையும், முடிந்ததையும் செய்து முடிக்க முன்வருபவனுக்கு முன்னேற்றம் உற்பத்தியானால் அது நிற்பதில்லை.
 
அறிவுடை முயற்சிக்கு முன்னேற்றம் முடிவில்லை.

*******



book | by Dr. Radut