Skip to Content

03. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

நாங்கள் அன்னையிடம் வந்ததில் இருந்து எங்களுக்கு அவர் செய்த நன்மைகளை எழுத வார்த்தைகளே இல்லை. எங்கள் சின்ன மகள் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகின்றது. எங்கள் மாப்பிள்ளை திரு.சாயிராம் அவர்கள் மதர் டிவோட்டி. அவர் வந்தது முதல் நாங்களும் மதரை கும்பிட ஆரம்பித்துவிட்டோம். மாப்பிள்ளை சாய்ராம் அவர்களுக்காக தியான ரூம் ஒன்று அமைத்துக் கொடுத்தோம். அந்த ரூமின் சுத்தம், அமைதி, அதற்குள் நுழைந்தவர்கள் அப்படியே உடல் சிலிர்க்கின்றது என்பார்கள். நான் தியான மையம் செல்லும் போது அடைந்த உணர்வை தினம் தினம் அடைவேன். எனக்கும் என் குடும்பத்திற்கும் செய்த நன்மைகள் கோடி கோடி. பல ஆபத்துகளிலிருந்து இருந்து காப்பாற்றி உள்ளார்கள். அதில் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எங்கள் குடும்பம் நான், என் கணவர், மாப்பிள்ளைகள் சாயிராம், நந்தகுமார், பெண்கள் கனிமொழி, சித்ரா, அவர்களின் குழந்தைகள். ஒரு நாள் வாக்கிங் செல்லும் போது லேசாக நெஞ்சில் அழுத்தமும், கைகளில் வலி, தோள்பட்டையில் அளவிட முடியாத வலியும் ஏற்பட்டது. ஐந்து நிமிடங்களில் சரியாகிவிட்டது. நான் காஸ்டிக் டிரபுல் என்று நினைத்து இருந்துவிட்டேன். மறுநாளும் அதே போல் வலி ஏற்பட்டது. பிறகு பல முறை வலி வர ஆரம்பித்துவிட்டது. ஒரு நாள் இரவில் வலி வரும்போது என் பெண் பார்த்துவிட்டு உடன் ஆஸ்பத்திரி சென்றோம். அன்றுதான் என் குடும்பத்தாருக்குத் தெரிந்தது. டாக்டர் ECG எடுத்தார். அதில் கொஞ்சம் டிரபுல் உள்ளதாகவும், ஹார்ட் டாக்டரை பார்க்கும்படியும் கூறினார். அன்று முதல் மதர் என்னுடன் இருந்து அவரின் கருணையின் அருளால் இன்று இக்கடிதத்தை எழுதுகிறேன். பெரிய பிரபல ஹார்ட் டாக்டரை பார்க்க மதர் அனுப்பினார்கள். அவரை வீட்டில் போய்ப் பார்க்க முடியாது. அன்று உடனே வரச் சொன்னார். போய்ப் பார்த்ததும் ஊஈஏல் அடைப்பு இருப்பதாக, உடன் ஆஞ்சியோ எடுக்கும்படி கூறினார். பிரபல ஆஸ்பிட்டல் பெயர்களை என் குடும்பத்தார் கூறினார்கள். நான் காமாட்சி ஆஸ்பத்திரியில் சேர்ந்து கொள்கிறேன் என்றேன். உடன் அங்குச் சென்றோம். ஆஞ்சியோ எடுத்தார்கள். என்னை ICUவில் சேர்த்து பைபாஸ் பண்ண வேண்டும் என்று கூறினார்கள். அடைப்பு மிக அதிகமாக உள்ளது. எந்த நேரத்திலும் அட்டாக் வரும் என்றார்கள். உடனே சேர்ந்தேன். என் நினைவு முழுவதும் மதர், மதர்தான். நான் மிகவும் பயந்த சுபாவம். ஆனால் எனக்கு எந்த பயமும் இல்லை. தைரியத்துடன் அமைதியாக மதர் என்னை வைத்திருந்தார்கள். இதில் என் குடும்பத்தார் மதர் நினைவாகவே இருந்தார்கள். எனக்கு ஆப்பரேஷன் செய்த டாக்டர் பாண்டிச்சேரி ஒருவர், லண்டன் ஒருவர். ஆப்பரேஷன் செய்தார்கள். எனக்கு ரத்தம் 8 பாட்டில் தேவைப்பட்டது. நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் கொடுத்தார்கள். அதில் இரண்டு பேர் மதர் டிவோட்டி. ஆப்பரேஷன் அன்று "மலர் போன்ற மனம் வேண்டும்” என்ற பாடல் என் குடும்பத்தார் காலை 6 மணிக்கு பதில் ஏதோ ஓர் சானலில் 5 மணிக்குப் பார்த்துவிட்டு உடன் கிளம்பினார்களாம். மதர் போட்டோ ஒன்று நான் சமையல் அறையில் மாட்டி வைப்பேன். அதில் காமாட்சி ஆஸ்பிட்டல் நேம் இருந்தது. எனக்கு குலுக்காமீட்டர் (சுகர் டெஸ்ட்) ஒன்று வாங்கினோம். அது ஆரோவில்லில் தயாரானது. இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் மதர் இருந்து என்னைக் காப்பாற்றினார்கள். ஆப்பரேஷன் நல்லபடியாக நடந்தது. ஒரு சமயத்தில் விலாவில் மிக அதிகமாக வலி ஏற்பட்டது. அப்போது மதர் போட்டோ கொண்டு வந்து என் மகள் கொடுத்ததும் அதை வாங்கி நெஞ்சில் வைத்துக் கொண்டேன். வலி உடனே குறைந்துவிட்டது. மதர் அருளால் சீக்கிரம் குணம் அடைந்து 7ஆவது நாள் வீடு வந்துவிட்டேன். மதர் மிக நல்ல ஆஸ்பிட்டல், நல்ல அருமையான டாக்டர்கள் ஏற்பாடு பண்ணி என்னை சீக்கிரமே குணப்படுத்தினார்கள். வீட்டுக்கு வந்து 3 மாதங்கள் ஆகின்றன. என் உயிர் அன்னை காப்பாற்றிய உயிர். அன்னைக்கு அநேக கோடி நமஸ்காரங்களையும் என் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

-- ஏ.வேணுகுஜாம்பாள்

*******



book | by Dr. Radut