Skip to Content

09. அஜெண்டா

அஜெண்டா

Volume IV, Page 90

அன்னையைத் தரிசிக்க வந்த ஒரு ஹிந்தி சாதுவைப் பற்றி அன்னை கூறுவது:

  • நீல ஒளியுடன் ஒருவரைப் பார்த்தேன்.
  • அவர் பயங்கரமானவர்.
  • ஆசிரமம் வந்து, அன்னையைத் தரிசிக்க விரும்பினார்.
  • அவரை டிசம்பர் 9ஆம் தேதி பார்த்ததாக ஞாபகம்.
  • நான் அரியாங்குப்பம் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தேன்.
  • என்னை யாரோ இழுப்பது போலிருந்தது.
  • பலமாக இழுப்பது தெரிந்தது.
  • எவரும் அவரைப் பற்றி எனக்குச் சொல்லவில்லை.
  • அது யார் எனத் தெரியவில்லை.
  • அவர் மரியாதை குறைவாக நடந்ததற்குப் "பதில்' சொன்னேன். இழுப்பு விழுந்தது.
  • ஆசிரமம் வந்த பின் அவர் என்னைப் பார்க்க வந்தார்.
  • அவர் திடமான இரும்பு மனிதர்.
  • எவரிடமும் இது போல் நான் உணர்ந்ததில்லை.
  • கல் போலிருந்தார்.
  • உருண்டு, திரண்ட மலை.
  • தலைப்பாகை கட்டியிருந்தார்.
  • கர்வமாகத் தோன்றினார்.
  • பின்னால் போய் தலைப்பாகையை எடுத்துவிட்டு, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.
  • அப்படியே 15 நிமிஷமிருந்தார்.
  • எழுந்து இந்தியில் பேசினார். மொழிபெயர்த்தார்கள்.
  • அவருக்கு வேண்டிய ஒரு சாதகரைக் கவனித்துக்கொள்ளச் சொன்னார்.
  • "நாழியாகிவிட்டது' என நினைத்தேன்.
  • தலைப்பாகையை எடுத்து வைத்துக் கொண்டு மீண்டும் விறைப்பானார்.
  • போய்விட்டார்.
    • இவர் ஒருவர் மட்டுமே என் வாழ்நாளில்
      இது போன்ற மலை போன்ற உணர்வைக் கொடுத்தது.
  • அவர் ஊருக்குப் போய் அன்னை போல் யாரையும் நான் பார்த்ததில்லை என்று அனைவரிடமும் கூறினார்.
  • "அன்னையை லோகமாதா என நம்பலாம்” என்றார்.
  • என்னைப் பார்க்குமுன் N. என்ற சாதகரைப் பார்த்திருக்கிறார்.

    N. என்னிடம், "இவர் என் அறையுள் வந்ததும்

    என்னை உற்று நோக்கினார்.
    நான் பேச்சிழந்தேன்.
    நான் பேச நினைத்தேன்.
    ஆனால் வாயடைத்துவிட்டது.
    ஒரு பார்வையில் நான் கல்லாகச் சமைந்தேன்.
    ஒரு சொல் வெளிவரவில்லை".

  • அன்னை அவரை a remarkably organised individuality தன்னைத் தான் விரும்பும்படி அமைத்துக் கொண்டவர் என்றார்.
  • "பகவான் ஸ்ரீ அரவிந்தர் சூழலுள் நுழைந்தால் மிருதுவாக இருக்கும்.
    நாம் மலர்ந்து விரிந்து சூழலில் பரவுவோம்.
    அத்துடன் அனந்தத்தைத் தொட்ட உணர்வு எழும்.
    இம்மனிதர் இரும்பைவிடக் கடினமானவர்.

    மிக ஆர்வமாக இருந்தது.
    இவர் நீலமாக இருந்தார்.
    நீல மண்டலம் அவரைச் சூழ்ந்திருந்தது.
    கடல் நீலம்.
    அமைதியானது.
    ஒளிமயமானது.
    அற்புத நீலம்'' என்று அன்னை கூறினார்.

  • எல்லா மனிதர்களுடைய சூட்சும உடலும் சூட்சுமப் பார்வையுள்ளவர்க்குத் தெரியும்.
  • பொதுவாக அன்னை சாதாரணமாகப் பார்ப்பார். சில சமயம் நம் கடந்த பிறப்பையும் காண்பதுண்டு.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நிறைவு செறிந்து வளமான உணர்வு தோன்றும்.
 
 
*******
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சிருஷ்டியில் பரம்பொருளோடு ஐக்கியமானவனுக்கு யோகம் விருப்பமுடையதாக இருக்கும். ஏற்கனவே சொல்லியவை அந்தந்த நிலைக்குரியவனுக்கு விருப்பமுடையதாக இருக்கும்.
 
பூரணயோகம் பரம்பொருளுடன் ஐக்கியமானவனுக்குரியது.
 
 
*******



book | by Dr. Radut