Skip to Content

04. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XX. Death, Desire, and Incapacity
20. மரணம், ஆசை, இயலாமை
There are of course necessities.
Page No.193
Para No.8
இவை அத்தியாவசியமானவையே.
There is a fundamental necessity.
இவை தவிர அடிப்படையான தேவையொன்றுண்டு.
It is of the nature.
அது இயற்கைக்குரியது.
It is an object of embodied life itself.
உலக வாழ்வின் இலட்சியமாகும்.
It is to seek infinite experience on a finite basis.
சிறிய அடிப்படையில் பெரிய அனுபவங்களை நாடுவது அது.
Form is the basis of the very organisation.
ரூபம் செயலமைப்பின் அடிப்படை.
Form limits the possibility of experience.
அனுபவம் பெறும் வாய்ப்பை ரூபம் அளவுக்குட்படுத்துகிறது.
This can only be done by dissolving form.
ரூபத்தை அழித்தே இதைச் செய்ய முடியும்.
Further it has to seek a new form.
மேலும் அது புது ரூபத்தை நாட வேண்டும்.
The soul limits itself.
ஆத்மா தன்னை அளவுக்குட்படுத்திக் கொள்கிறது.
It does so by concentrating on the moment and the field.
காலம், இடத்தால் ஆத்மா தன்னை வரையறைப்படுத்திக் கொள்கிறது.
It is driven back to seek its infinity.
மீண்டும் ஆத்மா தன் அனந்தத்தை நாடுகிறது.
Now it is by the principle of succession.
தொடர் நிகழ்ச்சியால் அது அனந்தத்தை நாடுகிறது.
It does so by adding moment to moment.
நிமிஷத்தை நிமிஷத்துடன் சேர்த்து அதை சாதிக்கிறது.
And thus it stores up a Time-experience.
காலத்தின் அனுபவத்தைக் கட்டிச் சேர்க்கிறது.
It calls it its past.
அதைக் கடந்த காலம் எனக் கூறுகிறது.
It is the field of Time.
அது காலம் எனும் அரங்கு.
It moves through successive fields.
தொடர்ந்த அரங்கங்களில் அது உலவுகிறது.
It moves through successive experiences or lives.
தொடர்ந்த அனுபவங்கள், தொடர்ந்த பிறவிகள் மூலம் அது சஞ்சரிக்கிறது.
It accumulates successive knowledge, capacity, enjoyment.
அதன் வழி தொடர்ந்த ஞானம், திறமை, அனுபவானந்தம் பெறுகிறது.
All this it holds in the subconscious.
இவற்றை ஆழ்மனத்தில் சேகரம் செய்கிறது.
Or in the superconscient it is held.
அல்லது பரமாத்மாவில் வைக்கிறது.
It is the fund of past acquisition in Time.
இவை காலத்தில் சேகரம் செய்த பொக்கிஷம்.
To this process change of form is essential.
இதுபோல் அனுபவம் சேர ரூபங்கள் மாறுவது அவசியம்.
The soul is involved in the body.
ஆத்மா உடலுள் பொதிந்துள்ளது.
Change of form means for it dissolution of the body.
ரூபம் மாறுதல் எனில் உடல் அழிதல் எனப் பொருள்.
It is subjection to the law.
அது சட்டத்திற்குட்படுவதாகும்.
It is compulsion of the All-Life in the material universe.
ஜடலோகத்தில் பிரபஞ்ச வாழ்வின் கட்டுப்பாடு அது.
It is a law of supply and demand.
தேவைக்குரிய சப்ளை என்பது அந்தச் சட்டம்.
Supply is the supply of the material of the form.
ரூபத்தின் பொருளை சப்ளை செய்வது சப்ளை.
Demand is the demand of the material.
தேவை என்பது அப்பொருள் தேவைப்படுவது.
Constant intershock is the principle.
தொடர்ந்த மோதல் அதன் தத்துவம்.
The struggle of the embodied life is also the principle.
பிறவி எடுத்த வாழ்வின் போராட்டமும் அதன் தத்துவம்.
It is a struggle to exist in this world.
இவ்வுலகில் உயிர் வாழும் போராட்டம் அது.
It is a world of mutual devouring.
ஒன்றையொன்று விழுங்கும் உலகமிது.
This is the law of Death.
இது மரணத்தின் சட்டம்.
This is the necessity of Death.
Page No.193
Para No.9
மரணத்திற்கு இது அவசியம்.
It is its justification.
மரணத்திற்கு இது நியாயம் கற்பிக்கிறது.
Not as a denial of Life.
மரணம் வாழ்வை மறுப்பதல்ல.
But as a process of Life.
மரணம் வாழ்வுக்கு வழி வகுப்பது.
Death is necessary.
மரணம் அவசியம்.
Because eternal change of form is the sole immortality.
தொடர்ந்து மாறும் ரூபமே அமர வாழ்வு.
The finite living substance can aspire only to it.
கண்டமான ஜீவனுள்ள பொருள் அதற்கே எட்ட முடியும்.
Eternal change of experience is the sole infinity.
அனந்தம் என்பது இடையறாது மாறும் அனுபவம்.
The finite mind is involved in the living body.
கண்டமான மனம் உயிருள்ள உடம்பிலிருந்து சிக்கியுள்ளது.
It can attain to it.
மனம் அதையே அடைய முடியும்.
The change of form cannot be allowed to remain.
மாறும் ரூபம் அப்படியேயிருக்க அனுமதிக்க முடியாது.
It cannot be merely a constant renewal.
புதுப்பிப்பது மட்டுமல்ல.
Renewal is the renewal of the same form-type.
அதே உடலை மீண்டும் புதுப்பிப்பது மட்டும் புதுப்பிப்பது ஆகாது.
Between birth and death our bodily life constitutes it.
பிறப்புக்கும் இறப்பிற்கும் இடையே உடல் அப்படியேயிருக்கிறது.
The form-type must be changed.
உடலமைப்பு மாற வேண்டும்.
The experiencing Mind must be thrown into new circumstances.
அனுபவிக்கும் மனம் புதிய சூழ்நிலைக்கு வர வேண்டும்.
It is new time, place, environment.
அது புதிய காலம், இடம், சூழ்நிலை.
Variation of experience is necessary.
அனுபவம் மாறுவது அவசியம்.
It is the nature of existence.
அது வாழ்வின் இயல்பு.
Time and Space demand it.
காலமும் இடமும் அதை நிர்ப்பந்தமாக்குகின்றன.
Only then it can be effectuated.
அதைச் சாதிக்க, இது அவசியம்.
Our mentality is mortal.
நம் மனப்பான்மை அநித்யமானது.
The change needed is salutary.
இது விரும்பத்தக்க மாறுதல்.
It is a necessary change.
இம்மாறுதல் அவசியம்.
It appears to be subjection to Not-Self.
அசத்திற்கு அடங்குவதாக இது தெரிகிறது.
It is absence of freedom.
சுதந்திரமில்லை.
There is struggle, pain.
போராட்டமும், வலியும் உண்டு.
It is a process of Death by dissolution.
இது அழிவால் ஏற்படும் மரணம்.
It is devouring of life by Life.
பிரபஞ்ச வாழ்வு வாழ்வை விழுங்குகிறது.
This change appears terrible and undesirable.
இந்த மாற்றம் பயங்கரமாகவும் வேண்டாததாகவும் தெரிகிறது.
It is the sense of being devoured.
விழுங்கப்படும் உணர்வு தெரிகிறது.
Broken up, destroyed or forced away.
உடைத்து, அழித்து, தூரத் தள்ளுவது.
Man believes in personal survival of death.
மரணத்திற்குப் பின் வாழ்வதை மனிதன் நம்புகிறான்.
Even that it cannot wholly abrogate.
அதுவும் விழுங்கப்படும் உணர்வை அழிக்க முடியாது.
But the process is necessary of that mutual devouring.
Page No.194
Para No.10
ஒருவரையொருவர் விழுங்கும் முறை அவசியமானது.
We see this to be the initial law of Life in Matter.
ஜடத்தின் வாழ்வில் இதுவே முதற் சட்டம் எனக் கண்டோம்.
Life says the Upanishad is Hunger which is Death.
வாழ்வு எனில் பசி, பசி என்பது மரணம் என உபநிஷதம் கூறுகிறது.
This Hunger is Death, asanayamrtyuh.
பசி என்பது மரணம், அஸனாயமிருத்தியு.
By this Hunger, the material world has been created.
இந்தப் பசியின் மூலம் இந்த ஜட உலகம் சிருஷ்டிக்கப்பட்டது.
For Life here assumes as its mould material substance.
வாழ்வு ஜடப் பொருளை இங்குத் தன் அச்சாகக் கொள்கிறது.
Material substance is Being infinitely divided.
ஜடப்பொருள் என்பது அளவு கடந்து துண்டாடப்பட்ட ஜீவன்.
It is seeking infinitely to aggregate itself.
பிரிந்த ஜீவன் எல்லா வழிகளிலும் சேர முயல்கிறது.
These are two impulses.
இந்த இரண்டு பாதைகள் உள்ளன.
They are infinite division and infinite aggregation.
அளவு கடந்து பிரிவதும், அளவு கடந்து சேர்வதும் அப்பாதைகள்.
Between them the material existence of the universe is
constituted.
ஜட உலகின் வாழ்வு இம்முறைகளிடையே உறைகிறது.
The living atom is the individual.
ஜீவனுள்ள அணு தனி மனிதன்.
It attempts to maintain itself.
அது தன்னை நிர்வாகம் செய்ய முயல்கிறது.
It also tries to aggrandise itself.
தான் வளரவும் முனைகிறது.
It is the whole sense of Desire.
ஆசைக்கு அதுவே அர்த்தம்.
A physical, vital, moral, mental increase is its secret unity.
அதன் இரகஸ்யமான ஐக்கியம், அதன் ஜட, பிராண, தார்மீக, மன வளர்ச்சி.
It is by a more and more all embracing experience.
அனைத்தையும் மேன்மேலும் தழுவும் அனுபவத்தால் அதை சாதிக்கிறது.
By a more and more all embracing possession.
அனைத்தையும் தழுவி சொந்தமாக்கிக் கொள்வதாலும் அதை சாதிக்கிறது.
Absorption, assimilation, enjoyment are inevitable.
கிரகித்து, ஐக்கியமாகி அனுபவிப்பது தவிர்க்க முடியாது.
It is a fundamental, ineradicable impulse of Existence.
இது அடிப்படையான, விலக்க முடியாத, வாழ்வின் உந்துதல்.
Once divided and individualised.
பிரித்துத் தனியாக்கப்பட்டது.
It has an all embracing, all-possessing infinity.
அதற்கு அனைத்தையும் தழுவும், அனைத்தையும் தனதாகப் பெறும் அனந்தமுண்டு.
It is secretly conscious of it.
இரகஸ்யமாக அது அதை உணர்கிறது.
There is an impulse to realise that secret consciousness.
அந்த இரகஸ்ய ஜீவியத்தை அடையும் உந்துதல் உண்டு.
It is the spur of the cosmic Divine.
பிரபஞ்ச பிரம்மத்தின் போக்கு அது.
There is a lust of the embodied Self within.
உள்ளுறை பிரம்மத்தின் காம வேகம் எழுகிறது.
It is within every individual creating.
தனித்தன்மை வாய்ந்த எந்தப் பிராணிக்கும் அது உண்டு.
It is inevitable, just, salutary.
இது தவிர்க்க முடியாதது, நியாயமானது, உயர்ந்தது.
It first realises it in terms of life.
முதலில் அதை வாழ்வில் சாதிக்கிறது.
It does so by an increasing growth and expansion.
வளர்ந்து பெருகுவதால் அதைச் சாதிக்கிறது.
In the physical world this can be only done by feeding on the environment.
ஜட உலகில் சூழ்நிலையை விழுங்கியே இதைச் சாதிக்க முடியும்.
It is done by aggrandizing oneself.
தன்னை வளர்ப்பதன் மூலம் இதைச் செய்யலாம்.
It is by the absorption of others.
மற்றவரை கிரகித்துக் கொள்வதன் மூலம் செய்யலாம்.
Or of what is possessed by the other.
பிறர் பொருளை அபகரித்துச் செய்யலாம்.
There is Hunger in all its forms.
எல்லா ரூபங்களிலும் பசியிருக்கிறது.
This necessity is the universal justification of Hunger.
இந்த அவசியம் பசியைப் பிரபஞ்சத்தில் நியாயப்படுத்துகிறது.
Still what devours must also be devoured.
விழுங்குவதையும் விழுங்கப்பட வேண்டும்.
The law of interchange governs all life in the physical world.
பரிமாறும் சட்டம் ஜட உலகில் எல்லா வாழ்வையும் கட்டுப்படுத்துகிறது.
It is an interchange of action and reaction.
இந்தச் சட்டம் பரிமாறுவது செயல்களையும், எதிர்ச்செயல்களையுமாகும்.
It is an interchange of limited capacity.
இப்பரிமாறுதல் அளவோடுள்ள திறனாகும்.
Therefore it is of a final exhaustion and succumbing.
முடிவாக தன்னைக் காலி செய்து உட்படும் சட்டமாகும் இது.
Contd....
தொடரும்....
********
*******
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மனத்தைப் பிடித்து உலுக்கும் எண்ணத்தை (preoccupation) விடாமல், ஒரு நிலைப்படுதல், சமர்ப்பணம், சரணாகதி, ஆர்வம் ஆகியவை நிரந்தரமாக நில்லா. நாமே உவந்து அதை விடுவது கடினம்.
 
உயர்ந்த எண்ணத்தை ஏற்று, அங்கு மனம் நிலைத்தால், உலுக்கும் பேயின் ஆட்டம் குறையும்.
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
தன் நிலைக்கேற்ற உந்துதலை மனிதன் விரும்பி நாடுகிறான். யோகம் பரிணாமத்திற்குரிய ஆர்வம், மனித குலத்தால் விரும்பி ஏற்க இயலாத ஒன்றாகும்.
 
மனிதன் ஏற்பது மனத்தின் உந்துதல். இறைவனின் ஆர்வமான பூரணயோகத்தை
மனிதன் விரும்புவதில்லை.
 
*******
*********



book | by Dr. Radut