Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

April 12-13, 1962-இல் அன்பு அலை மேலிருந்து வந்து அன்னையிடம் சேர்ந்தது.

அனைத்தும் personal not individual.

  • நாம் அன்பை மனதில் ஒரு கருத்தாக அறிவோம்.
  • ஒருவர் மீது எழும் அன்பு உணர்வாக வெளிப்படும்.
  • அன்பான ஊரையடைந்தவுடன் எவரும் அன்பாகப் பழகுவதைக் காணலாம்.
  • பிரபஞ்சத்தின் அன்பு அலையாக அதிர்வாக பிரபஞ்சத்தில் பரவியதை அன்னை personal-ஆக அறிந்தார். T.V.-யில் வரும் news அனைவருக்கும் உண்டு. T.V. set-க்கு அது individual-ஆக வருகிறது. செல்போன் செய்தி personal-ஆக வருகிறது.
  • இந்த அனுபவம் உலகத்திற்குப் புதியது. அன்னை பலமுறை அஜெண்டாவில் எழுதுகிறார்.
  • ரயில், கார், விமானம், தபால், தந்தி முதலில் வந்தது உலகுக்கே புதியது போல் அன்பு 12-13 தேதிகளில் உலகுக்கே புதியதாய் வந்தது. எவருமே ரயில் வந்ததை அறியாமல், அதில் ஏறாமலிருப்பது போல் வெள்ளமாக அன்பு உலகுக்கு வந்த பின்னும் எவரும் அதை அறியவில்லை என அன்னை கூறுகிறார்.
  • ரயில் வந்தது எவருக்கும் தெரியாவிட்டாலும், சரக்கு டெல்லியிலிருந்து 3 மாதத்தில் வருவது 3 நாளில் வருவதை அனைவரும் அனுபவிப்பது போல் அன்பு சூழலில் வந்ததால் கொடுமைக்காரன் கடுமையிழந்து பழகுகிறான். ஒரு சொல் தெரியாததால் பிரம்பால் 10 அடி வாங்கிய மாணவன் அன்பு வந்தபின் ஒரு அடி பெறுகிறான். வராத சொல்லும் அவனுக்கு வருகிறது. இது சூழல் தரும் பலன்.
  • 1956 February 29-இல் சத்திய ஜீவியம் வந்ததை எவரும் அறியவில்லை. ஆனால் உலகில் மரணத்தருவாயில் உள்ளவர் பலர் அதிசயமாகப் பிழைக்கிறார்கள். மலைச்சரிவின் பாதையில் வந்த கார் தடம் மாறி கவிழப்போகும் பொழுது உள்ளே இருந்தவர் அன்பரானதால், கவிழாமல் தப்பிக்கிறது.
  • ரோடில் டிராபிக் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு ஆண்டில் 30 சாவு உள்ள இடத்தில் சாவு 3 ஆகிறது. அஜெண்டா முழுவழும் அன்னை இது போன்ற நிகழ்ச்சி-- களைக் கூறுகிறார். மலேரியா, பெரிய அம்மை, காலரா போன்ற வியாதிகள் சர்க்கார் முயற்சியாலும், எதுவுமின்றியும் பெரும்பாலும் மறைகின்றன. கிராமத்தில் ஆண்டில் 70 பிள்ளைகள் பள்ளிக்குப் போனது 170 எனவும் 700-ஆகவும் மாறுகிறது. மாமியார் கொடுமை கடுமையை இழக்கிறது. தடம் மாறி மருமகள் கொடுமையாகிறது. கேட்காமல் பல நாடுகள் சுதந்திரம் பெறுகின்றன. சுதந்திரம் வந்தபின் சுபீட்சம் வருகிறது. 1940-இல் கொசு நிறைந்த ஊரில் வெளியில் போய் உள்ளே வந்தால் 4 அல்லது 5 பேர் யானைக்காலைக் காண வேண்டும். இப்பொழுது அதே ஊரில் அவர் கண்ணில் யானைக்கால் 4 அல்லது 5 ஒரு மாதத்தில் படுகிறது. கிராமங்களில் மரம் நிறைந்த இடங்களில் ஆண்டுதோறும் ஒன்று அல்லது இரண்டு இளம் பெண் தூக்குப் போடுவதுண்டு. காலம் மாறியபின் 5 அல்லது 6 வருஷத்தில் அது போன்ற நிகழ்ச்சி ஒன்று எனக் காண்கிறோம். வீதியில் போனால் காரசாரமான கடினச்-செõற்கள், அவச்சொற்கள், கெட்ட சொற்கள் கேட்ட ஊரில் அது பெரும்பாலும் மறைந்து விடுகிறது. இவை நாகரிகத்தின் சின்னங்கள். அன்று விதவை மொட்டையடித்து வெள்ளை சீலைகட்டி அபசகுனமாக ஊரில் வெளிவரத் தயங்குவாள். மொட்டை வெள்ளை சேலை போய் குங்குமப் பொட்டும் நிலைப்பதை நாம் சமூகம் மாறுகிறது, காலம் மாறுகிறது, புதிய சட்டங்கள் வருகின்றன, கல்வி பரவுகிறது என நினைப்பது சரியானாலும் சத்திய ஜீவிய சூழல் ஏற்படுத்திய மாறுதல்களில் இவற்றையே கூற முடிகிறது. சைனாக்காரன் திரும்பிப்போனதும், க்யூபாவில் நெருக்கடி விலகியதும், கொரியா அமைதியானதும், சைனா உலகை ஆள முயலாததும், பெர்லின் சுவர் இடிந்து, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் விடுதலை பெற்று சோவியத் எதேச்சாதிகாரம் தற்கொலை செய்து கொண்டதும், சட்டம் அழித்த அடிமை 100 ஆண்டிருந்தது ஒரே ஆண்டில் நடைமுறையில் மறைந்ததும் சத்திய ஜீவியம் செயல்படுவதால் என நம்மால் அறிய முடிவதில்லை. பணம் ஏழைநாடுகள் உட்பட எல்லா நாடுகளிலும் பெருவாரியாகப் பெருகுவது எப்படி என யாராவது விளக்கிக் கூறியிருக்கிறார்களா?

**********

ஜீவிய மணி

ஷெர்லக் ஹோம்ஸ் 100 ஆண்டிற்கு முன் பிரபலமானது. அதை உலகம் துப்பறியும் கதையாக அறியும். பகுத்தறிவு ஞானமாக உலகில் மாறுவதை (reason matures into intuition)) உலகுக்கு அறிவிக்கும் இலக்கியமாக நான் அதை அறிவேன். 56 சிறுகதைகளும் 4 நாவல்களும் அடங்கிய நூல் அது. குற்றத்தை போலீஸ், மக்கள், பலியானவர் அனைவரும் அறிவால் புரிந்து கொள்கிறார்கள். ஷெர்லக் ஹோம்ஸ் பகுத்தறிவு ஞானமாகும் தெளிவால் புரிந்து கொள்கிறான். குற்றவாளிக்குத் திறமை அதிகம் சூட்சுமம் நுணுக்கம் அதிகம், ஆனால் அறிவு குறைவு. ஒரு அறிவாளி குற்றவாளிக்கு யோசனை கூறினால் அவனால் 100 பேருக்குத் திருடும் வழியை உயர்ந்த முறையில் கூற முடியும். ஒரு பேராசிரியர் அதுபோல் ஏராளமான குற்றவாளிகட்கு மறைமுகமாக யோசனை கூறி அவன் கோடிக்கணக்காகச் சம்பாதிக்கிறான். அவர் சம்பந்தப்பட்ட குற்றங்களை எளிதில் கண்டு-பி டிக்க முடியாது. கண்டுபிடித்தால் நிரூபிக்க முடியாது. ஷெர்லக் ஹோம்ஸ் இதையறிந்தும் அவர்களைப் பிடித்து தண்டிக்க முடியவில்லை. ஓரிரு சமயம் தண்டனை கொடுக்க முடிந்தாலும் மூலகர்த்தாவை எட்ட முடியவில்லை. 20 ஆண்டுகளின் முயற்சியால் ஒரு திங்கட்கிழமை 1000 பேரையும் மூலகர்த்தாவையும் கைது செய்து தண்டிக்க ஏற்பாடானபின் மூலகர்த்தா ஹோம்ஸை அழிக்க முயன்று இருவரும் இங்கிலாந்திலிருந்து ஓடி சுவிச்சர்லாந்தில் ஒரு நீர் வீழ்ச்சி எழும் மலை ஓரத்தில் சந்தித்து இருவரும் வீழ்ந்து இறந்து விடுகின்றனர். மூலம் தப்பித்தது. மற்ற அனைவரும் கைதானார்கள். வாசகர்கள் செய்த பெரிய புரட்சியில் கதாசிரியர் ஷெர்லக் ஹோம்ஸை “உயிர் பிழைக்கச் செய்து” கதைகளைத் தொடர்ந்து எழுதினார் என்பது வரலாறு. இது 1901 வாக்கில் கதாசிரியரின் கற்பனையில் எழுந்தது. இக்கதாசிரியர் பெயர் Conon Doyle கானன் டாயல்.

குற்றமும், குற்ற மனப்பான்மையும் அழியும் காலம்

பகவான் பிறந்த பின் எழுந்தது.

**********



book | by Dr. Radut