Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 190: In sudden scintillations of the Unknown

தெரியாத பெரியது திடீரென புல்லரித்து பூரிக்கிறது

  • தெளிவில்லாத சப்தம் தெய்வ சத்தியமாயிற்று
  • அர்த்தமற்றதாய் தோன்றியவை சத்தியத்தைக் கக்கின
  • கண்ணுக்குத் தெரியாத காத்திருக்கும் உலகினின்று குரல் எழுந்தது
  • பிரம்மத்தின் சொற்துளிகளை வாய் விட்டுப் பேசின
  • புதிரான சொல்லை உடலின் ஆடையாக்கி
  • சூட்சும சட்டத்தின் விவேகமான யந்திரம்
  • படிக்க முடியாத சுமுகம் தெளிவின் முத்திரையாயிற்று
  • உருவத்தையும் நிறத்தையும் பயன்படுத்திப் புதுப்பித்து
  • காலத்தின் கதிரவனாக எழும் இரகஸ்யங்கள்
  • மறைந்த ஆழத்துள், பசுமையான காட்டுப் புறத்தில்
  • மகிழ்வெனும் காட்டில் ஆனந்தம் ஆபத்தைக் கட்டியணைக்கிறது
  • பாடகரின் நம்பிக்கையெனும் மறைந்த சிறகில்
  • நீல பொன்னிற சிவந்த தழல் பொறியாக எழுந்தது
  • அவளுடைய மறைந்த சந்துகளில், வயல்வெளியின் எல்லையில்
  • இசை எழுப்பும் நீரோடைகள், அமைதியான நீர்ப்பரப்புகள்
  • பொன்னான ஆனந்தப் பலனின் பொறிகளைக் கண்டாள்
  • கனவில் மலர்ந்த சரஸ்வதியின் மலரழகு
  • இதயம் சந்தோஷத்தால் மாறும் அற்புதம் போல
  • அவள் சூரிய ரஸவாதப்பிரகாசத்தைக் கண்ணுற்றாள்
  • நாத்திக மலரின் செவ்வொளி வெடித்தது
  • ஆன்மிக அன்பெனும் தியாக மரத்தில்
  • அவள் தூக்க மகிமையான மதியத்தைக் கண்டாள்
  • மீண்டும் மீண்டும் எழும் நாழிகையின் தொடர்
  • பூதம் பூச்சான எண்ணத்தின் நடனம் புதிரான நதியின் மீது
  • காலை ஊன்றிப் பார்க்காமல் மேலே ஊர்ந்து செல்லும்
  • ஆசையெனும் ரோஜா ஆர்வமெனும் சிரிப்பைத் தந்தது
  • ஆசைப்பட்டவரின் அணைப்பினின்று அகன்று ஓடுவது போல்
  • கற்பனைச் சதங்கையொலி காதில் மகிழ
  • அவள் சூட்சும சக்தியின் உயிருள்ள அடையாளம்
  • நெருங்கிய நிஜ உருவமாக அவற்றை அவன் கண்டான்
  • மனிதர் வாழ்வைவிட மாட்சிமை பொருந்திய அவ்வாழ்வு
  • மறைந்த சத்தியம் இதயமாகத் துடித்தது
  • நம் நினைவும் உணர்வும் அங்கு உயிரோவியமாகி
  • தேடிக் கண்ட ரூபம் அங்குச் சுயமாக உள்ளிருந்து உருவாகி
  • மௌனத்தின் தோழன் அவன் புனித சிகரத்தில் தொட்டு

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனிதன் தன்னை கடவுளாக அறிந்து பிரபஞ்ச சிருஷ்டியில் கடவுள் எண்ணத்தைப் - திருவுருமாற்றத்தை - பூர்த்தி செய்ய முடிவு செய்வது பூரண யோகம்.

*********



book | by Dr. Radut