Skip to Content

11. நெஞ்சுக்குரிய நினைவுகள்

நெஞ்சுக்குரிய நினைவுகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

Synthesis of Yoga

Part IV Chapter 1, Principle of Integral Yoga (P. 586)

நிஷ்டை – concentration - என்பது ஒரு வழியில் தீவிரமாவது. சமர்ப்பணம் என்பது எல்லா வழிகளிலும் முனைந்து முழுமை பெறுவது என்பதால் சமர்ப்பணத்திற்கே பகவான் கூறும் முழுமையான அம்சம் உண்டு. வேலை என்பது ஒன்றுதான். அது உள்ளே போவது. உள்ளே போய் சமர்ப்பணம் செய்வது. புலன்களைக் கடப்பது. மனதைக் கடப்பது. ஆத்மாவை அடைவது என்பவை இம்முறைகளின் மூலத்தை உட்கொண்டன. புலன்களைக் கடப்பது புறத்தில் இடத்தைக் (Space) கடப்பது. அது ஓடும் எண்ணம் நிற்பது. எண்ணமே நிற்பது காலத்தைக் கடப்பது. காலம், இடத்தைக் கடப்பது மனத்தைக் கடப்பது. மனத்தைக் கடப்பது ஆன்மாவை அடைவது.]

  1. இதை வாழ்வில் மேற்கொள்ள பல விஷயங்கள் உண்டு.
    (உ-ம்)
    1. மணிக்கொரு முறை செய்யும் சமர்ப்பணம்.
    2. 1 மணி நேரம் சோதனையாக சமர்ப்பணத்தை முழுமையாக்குவது.
    3. முழுமையான சமர்ப்பணத்தின் நிலைகள், சிரமங்கள், வாய்ப்புகள், அதன் உள்ளுறை முக்கியத்துவம் போன்றவை.
    4. எண்ணத்தை அடிப்படையில் நல்லெண்ணமாக மாற்ற முடியுமா? அது எப்பொழுது அவசியமாகிறது?
    5. எண்ணத்திற்கும் உணர்ச்சிக்கும் உள்ள வித்தியாசம்.
    6. இதயத்தின் உணர்ச்சி (emotion, feeling) உடல் உணர்ச்சி (sensation) க்குள்ள வித்தியாசம், யோகத்தில் அவற்றின் பங்கு.
    7. சமர்ப்பணத்தின் சிறப்பை அறியும் நேரம்.
    8. சமர்ப்பணம் தவறுமா? எப்பொழுது? ஏன்? அதன் பொருள் என்ன? தவறுவதை எப்படிச் சமர்ப்பணம் செய்வது? தவறுதலால் யோகத்தில் சமர்ப்பணம் எப்படிப் பெரிய கருவியாகிறது?
    9. மௌனத்தின் நிலைகள் - மௌனம்; மௌனத்தின் பின்னுள்ள மௌனம்; எண்ணத்தினால் எழும் மௌனம்; உணர்ச்சியின் மௌனம்; கிளர்ச்சியின் மௌனம் (sensational silence); செயலின் மௌனம்; ஜீவியத்தின் மௌனம்; ஆனந்தத்திற்கு மௌனம் உண்டா? உண்டு எனில் அது என்ன? இல்லையெனில் ஏனில்லை? ஜட மௌனம்; மௌனத்தின் மௌனம்.
    10. யோகத்திற்கு நாம் நம்மைப் புறத்திலும் அகத்திலும் தயார் செய்யும் பொழுது எடுக்க வேண்டிய எச்சரிக்கைகள், இன்றியமையாத பாதுகாப்பு.
    11. தொடர்ந்த கடிதப் போக்குவரத்தின் செயல்.
    12. கடிதம் எழுதுவதைத் தள்ளிப் போடும் நேரம், அவசியம்.
    13. குடும்பத்தின் உறவுகளை எப்படிப் புரிந்து கொள்வது.
    14. வாழ்க்கையில் தீராத சிக்கல்கள் நமக்கு வராததன் பொருள் என்ன? வருவதின் அர்த்தமென்ன? அவை சமர்ப்பணத்தால் தீருமா? தீராத நேரம் என்ன செய்வது? போன்று ஏராளமான topics உள்ளன. அதற்குரிய சந்தர்ப்பம் வரும் நேரம் அதை எடுத்துக் கூறுவது பயன் தரும். இவ்வளவு கருத்துகளுக்கும் அடிப்படையாக உள்ளது உண்டா? நம் மரபில் அது எப்படிச் செயல்பட்டுள்ளது, பகவான் அதை எப்படிக் கையாண்டுள்ளார்? மனிதனுக்கு அது குறிப்பாக என்ன பயன் தரும் என்பனவெல்லாம் ஏராளமாக எழுத உள்ளது. எழுதுவதைத் தவிர்க்கும் நேரம் உண்டு. அந்த நேரம் இவற்றை எப்படிப் புரிந்து கொள்வது?

ஒரு விஷயம் மட்டும் இப்பொழுது எழுதுகிறேன்.
Accomplishment, சாதனை, காரியத்தைப் பூர்த்தி செய்வது யோகத்தில் வகிக்கும் அங்கம் என்ன?

  1. தெளிவாகச் சிந்தித்து, திட்டமிட்டு plan செய்து, அங்கங்களையும், அம்சங்களையும் அவற்றிற்குரிய தொடர்புகளையும் அறிந்து, நினைவுடன், கருத்தாக, பொறுப்பாகச் செயல்பட்டால் எடுத்த காரியம் பூரணமாகப் பலிக்கும். தவறு வராது; அநேகமாகப் பலன் அதிகமாக இருக்கும். இது physical planning of execution. உலகம் ஏற்றவற்றை உத்தமமாகச் செய்து முடிப்பது. ஊரில் பெரு வெற்றி பெற்றவர் பின்பற்றும் முறை இது.
  2. இம்முறையில் நாம் குறை வைக்கக் கூடாது. இது உடலுக்கு (physical) உரிய முறை. இதைக் கடந்து உணர்வுக்கும், அதைக் கடந்து அறிவுக்கும், அதையும் அளவுகடந்து கடந்து ஆத்மாவுக்கும், முடிவாக சத்திய ஜீவியத்திற்கும் உள்ள முறைகள் உண்டு.
    • உதாரணமாக இவற்றை எல்லாம் அறிந்து பயிலுமுன் நம் பெருமுயற்சி முழு முயற்சியாகி, மனம் உண்மையாக (sincere) ஆழத்தில் மகிழ்ந்து மலர்ந்து செயல்படும்படி ஒரு வீடு கட்ட முயன்றால், அத்திட்டம் 90 இலட்சமானால், முதல் முறை ((physical planning) யின் சிறப்பால் 70 இலட்சத்தில் 120 இலட்ச சௌகரியத்துடன் முடியும். உயர்ந்த முறைகளை அறியும்முன் உள்ளபடி முனைந்து முயன்றால் அதற்கு சமர்ப்பணம் எல்லாக் கட்டங்களிலும் தவறாது உறுதுணையானால் 30 இலட்சத்தில், 3 மடங்கு பெரியதாக, 4 மடங்கு சிறப்புடையதாக பாதி நேரத்தில் முடிவதைக் காணலாம். அதாவது அளவுகடந்து உயர்வாகப் பலிக்கும். அதன் இலாபம் பெரியது.
    • இலாபத்தையும், வெற்றியையும், சந்தோஷத்தையும் ஏற்று, பெற்று கொண்டாடிய பின், இதனால் நம் யோக முயற்சி பெற்றதென்ன என சிந்தனை செய்தால், யோகத்தின் பல்வேறு அம்சங்கள் ஆழ்ந்து, கனத்து, சிறந்து, சிறப்பாக மொட்டுவிடுவதைக் காணலாம். பெற்ற ஆதாயம், இலாபம் பெரியது. அதை ஏற்பது சரி. ஆனால் யோகப்பலனை அதைவிட முக்கியமாகக் கருதினால் நல்லது. அது போன்ற நேரம் மேற்கூறிய 14 தலைப்புகள் 140 தலைப்பாக விரியும். யோகம் வாழ்வில் செயலாக ஆரம்பமாகும். அது பெரிய கட்டம்.

முதல் நிலை சாதனை - அனைவரும் செய்வது. நாம் இம்முறையில் குறை வைக்கக் கூடாது என்பது அன்னை கூறுவது.

முதல் நிலையிலேயே மௌனத்திற்குரியவை இருக்கின்றன. உணர்ச்சியின் முறைகளைக் கூறுமுன் முதல் நிலையில் மௌனத்தின் முறைகளைத் தெரிந்து கொள்ளலாம். பயிலுவது ஆரம்பத்தில் கடினம். பயில முயன்று அனுபவம் பெறலாம். வீடு கட்டும் உதாரணத்தையே தொடர்வோம்.

மௌனம் 4 அல்லது 5 நிலைகளில் உள்ளன. அது மௌனத்திற்குரிய விசேஷம். மௌனம் பிரம்மம் எனப்படும். முதல்நிலை மௌனம் வீடு கட்டுவதில் செயல்படுவதைக் காண்போம்.

எளிய மொழியில் சொன்னால் வேலையைச் செய்யும்முன் மனத்தின் எண்ணத்தால் செய்ய வேண்டும். செய்வதை முதலில் நினைப்பது அது. நினைப்பது எண்ணத்தால் செயல்படுவது. மௌனத்தால் செயல்பட மனத்தில் எழும் எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்து பின் மனம் மௌனமாக இருக்கும் பொழுது வேலையைச் செய்வதாக நினைக்கிறோம். நினைவு ஓரளவு மௌனத்துடன் எழும். முழு மௌனம் முதலில் சிரமம். பூசலார் கோயில் மனதில் கட்டிய பொழுது சிவ பெருமான் வந்தது போல. செயலில் மூன்று பகுதிகள் உண்டு. எண்ணம், உணர்ச்சி, ஜடம். நாம் எண்ணத்தை மௌனமாக்கி சமர்ப்பணம் செய்தால் ஓரளவு உணர்ச்சியின் பகுதியும் சிறிது ஜடத்தின் பகுதியும் சமர்ப்பணமாகும். அமைதி ஆழ்ந்து தெரியும். வேலையின் தரம், பக்குவத்தில் இதன் பிரதிபலிப்பு தெரியும். ஒரு வேலை பல கோணங்களில் முடிவில்லாமல் விரிவடையும். அந்த அம்சத்தில் இது ஒன்று.

எண்ணத்தை மௌனமாக்கி மனத்தில் வேலை செய்வது இருவகையான அனுபவம் தரும்.

  1. வெகு விரைவாகச் சில நிமிஷங்களில் முடியும்.
  2. ஒரு நிமிஷம் ஒரு மணி நேரமாக மெதுவாக நகரும்.

இரண்டு பாணிகட்கும் முழுப்பலன் உண்டு. எந்த வகையாக அமைந்தாலும், இரண்டும் கலந்து இருந்தாலும், நேரம் கிடைத்த வரை செய்து, நாம் செய்வது வேலையில் தெரிவதைக் கவனித்தால் சமர்ப்பணத்தின் அம்சம் 1) எண்ணத்திலும் 2) எண்ணத்தின் மௌனத்திலும் தெரியும். நடப்பது விளக்கம் தரும். வேறு விளக்கம் தேவைப்படாது.

  • செலவு குறையும். சிரமம் குறையும். போய்ப் பெறுவது தேடி வரும். செலவு குறைந்து பலன் அதிகமாகும்.
    (இவை இம்முதல் நிலைக்குரிய அளவு. முடிவநிலைக்கு மேலும் உபரியாகும்.)
  • பலனை நன்றியுடன் ஏற்கலாம்.
    பலனைவிட முறையை அறிவது முக்கியம். நம் எண்ணத்திற்கும் விலை குறைவதற்கும் உள்ள தொடர்பு தெரியும்.
  • முறை பலனை விடப் பெரியது.
  • மூலம் அதனினும் பெரியது.

தற்சமயம் மனம் பலனோடு மறந்து விடாமல், முறையைக் கருதி முடிந்தவரை புரிந்து கொண்டால், அடுத்த கட்டத்தில் மூலத்தை அறிய முயல்வோம்.

வாழ்வின் பெரு உண்மைகள், யோகத்தில் மிகப் பெரிய சக்தியை வெளியிடுபவை

  1. உண்மை பெருந்தன்மையால் (Sincerity-Generosity) உலகத்தின் சிறுமை, கயமைகளினின்று காப்பாற்றும். மேலும் வெற்றி, அதிர்ஷ்டம், செல்வம் தரும்.
  2. இன்று முழுவதும் அர்த்தமற்றதாய்விட்ட கட்டுப்பெட்டிப் பழக்கங்களுள் மூலமான சத்தியம் உண்டு. சிலவற்றுள் முழுமையான சத்தியம் உண்டு. அது முழுமையாகப் பாராட்டப்பட்டால், பலன் முழு எதிர்ப்பை மீறி பூரணமாக வரும் - சத்தியத்திற்கு ஜீவனுண்டு.
  3. சமர்ப்பணம் முழுமையானால், சந்தர்ப்பங்களையும், அறியாமையையும் மீறிப் பலிக்கும்.
  4. சிக்கனம் நல்லது கருமித்தனம் நல்லதல்ல.
  5. நம்மால் பிறருக்கு நம் மீது தவறில்லாமல் தண்டனை வந்தாலும் நாள் கழித்து அது நமக்கு வரும்.
  6. அளவுக்கு மீறிய நல்லது, சேவை, பெருந்தன்மை எதிரான பலன் தரும்.
  7. சமர்ப்பணம் சமூக சட்டங்களையும், வாழ்வின் சட்டங்களையும், கர்மத்தையும் மீறிப் பலிக்கும்.
  8. பிரச்சனை உருவான வழியே அதைத் தீர்க்க எதிராகச் சென்றால், பிரச்சினை தீரும்.
  9. சுயநலமி, தன் சுயநலத்தால் உலகம் பலனடைவதாக நினைப்பான்.
  10. எந்த இலட்சியத்தை வளர்க்க ஒரு ஸ்தாபனம் ஏற்பட்டதோ அதே இலட்சியத்தை அதே ஸ்தாபனம் அழிக்கும்.

(தொடரும்)

*********

ஜீவிய மணி

எதிர்பார்க்காதவனை எதிர்காலம் கட்டுப்படுத்தாது.

*********



book | by Dr. Radut