Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/35. அடிமன எண்ணம் சமர்ப்பணமானால் மனம் முனிவர் மனமாகும்.

சிந்தனையின்றி புரியும்

  • சிந்தனையின்றி புரியும் நேரம் அனைவர்க்கும் உண்டு. அந்த நேரமுள்ள மௌனம் இது.
  • அடி மனம் பிரபஞ்சத்தைத் தழுவும். அது மௌனமாக செயல்படும்.
  • மனித சுபாவ அம்சங்கள் செயல்படும் மனமிது.
  • மருமகள் மரியாதையில்லாமல் பேசுகிறாள். மருமகன் நிலையில்லாமல் பேச்சை மாற்றிப் பேசுகின்றான். ஓட்டர் பணம் வாங்கிக் கொண்டு எதிர்கட்சிக்கு ஓட்டுப் போடுகிறார் போன்றவை மனித சுபாவம் வெளிப்படும் இடங்கள்.
  • அடி மனம் மனித சுபாவம் ஆழ்ந்து செயல்படுமிடம். அதன் வேர் அதைக் கடந்த பாதாளம், ஜட இருளில் உள்ளது.
  • சிந்தனை எழுவது எண்ணம் உருவாவது.
  • உருவாகும் எண்ணம் நம்மைச் சத்தியத்திலிருந்து பிரிக்கிறது.
  • அஞ்ஞானம், தமஸ், பிரிவினை என்பனவற்றால் ஜடம் உருவாயிருக்கிறது.
  • அஞ்ஞானம் ஞானத்தால் கரையும்.
  • தமஸ் செயல்பட விரும்பாத மனநிலை.
  • அன்றாட செயலில் பாக்கியான வேலையுண்டு, ஒத்திப் போடுபவையுண்டு. அவை தலையெடுக்கும் நேரம் க்ஷணம் தாமதிக்காமல் செயல்பட்டால், தமஸ் கரைய ஆரம்பிக்கும்.
  • கடைசியாக இருப்பது பிரிவினை. சிந்தனை பிரிவினை.
  • சிந்திக்காது மறுத்தால் பிரிவினை முதல் நிலையில் கரைந்து மௌனம் எழும்.
  • மௌனம் ஐக்கியத்தின் முதல் நிலை.
  • ஜோதி அடுத்த நிலை.
  • நேரடி ஞானம் (intuition) அதற்கடுத்த நிலை.
  • ஞானமும், அஞ்ஞானமும் கலந்த நிலை - Overmind, கடவுள் நிலை - அடுத்தது.
  • அஞ்ஞானக் கலப்பற்ற ஞானம் சூன்யத்தையும் மௌனத்தையும் கடந்த பூரண ஞானம் பெறும். அது சத்திய ஜீவிய நிலை.
  • இதனுள் நுழைய மௌனம் நிலைக்க வேண்டும்.
  • நிலைத்த மௌனம் விலகி, அல்லது முதிர்ந்து ஜோதியாகும்.
  • ஜோதியை விட்டகன்றால் ஞானம் நேரடியாக உதயமாகும்.
  • நேரடியான ஞானம் ஓரளவு ஞானமாகும். அஞ்ஞானம் உடனிருக்கும்.
  • சொத்துக்கான வழக்கில் நம் பக்கம் நியாயமிருந்தால் மனம் நியாயத்தைக் கருதும்.
  • நியாயம் சிந்தனையாகவோ நினைவாகவோ இருந்தால் நம்மை வெற்றியிலிருந்து பிரிக்கும்.
  • நியாயத்தை நினைக்காத மனம் பளிச்சென ஜோதியைக் காணும். ஜோதி காட்சியாகும், சொத்து நம்மிடம் வருவது காட்சியாகத் தெரியும்.
  • காட்சியைக் கருதாத பொறுமை “கேஸ் ஜெயித்து விட்டது” எனக் கூறும். அது நேரடியான ஞானம்.
  • இந்தக் கட்டங்களில் பொறுமை சிரமம்.
  • பொறுமை இருந்தால் எதிராளி வீட்டிற்கு வருவான். கேஸ் வாபசாகும். உடன் அஞ்ஞானமிருக்கும்.
  • நம் வக்கீல் “விடக்கூடாது” என்பார். உடன் பிறந்தவர் “நம்பாதே” என்பார்.
  • அஞ்ஞானக் கூற்றுகளை நம்பாவிட்டால் கேஸ் முடிந்து சொத்து வரும்.
  • மனத்திலிருந்து Spiritual range of Mind - முனிவர், ரிஷி, யோகி, தெய்வம் - வழியாக உயரும் வழியை உதாரணம் மூலம் கூறினேன்.
  • இவை பெரு நிலைகள். தொடர்ந்து போகலாம். அதிக சிரமமான கட்டங்கள் எழும்.
  • இதற்கடுத்த நிலை பொன்மூடி.
  • வழக்கில் பொன் மூடி என்பது நாட்டிலுள்ள சொத்துரிமை சட்டம். உதாரணமாக பெண்ணுக்குச் சொத்துரிமை வருவது பொன்மூடியை ஓர் அம்சத்தில் கடப்பதாகும். ஓராயிரம் அம்சங்களில் கடந்தாலும் பொன் மூடி விரிசல் விடுமே தவிர விலகாது.

**********

ஜீவிய மணி

ஊரே உலகம் எனும் சிறுவன் நாட்டைச் சுற்றிப் பார்த்தால் மனம் விரிவடையும். கல்விச் செல்வம் அவன் அறியாமையைக் கரைக்கும். குறுகிய, சிறிய அகந்தை மேல்மனத்தில் மனத்தாலும், காலத்தாலும், சிறியதாலும் கட்டுண்டு ஜடமான வாழ்வை தாவர, விலங்கினத்திற்கு உயர்த்தி மனிதனை இன்றுவரை வாழ உதவியது. பள்ளிப் படிப்பு அஸ்திவாரம். அதையே முடிவாகக் கொள்வது அறியாமை. அகந்தையின் காலம் முடிந்து, ஆத்மாவின் காலம் பிறந்தபின் சுயநலமான மனிதன், தன் பரநலத்தைப் பிரபஞ்ச முழுவதும் வியாபிக்கச் செய்தால், அகந்தையின் ஒரு நிலை அழியும்.

*********



book | by Dr. Radut