Skip to Content

13.சமூகம் ஏற்றுக்கொண்ட யோகம்

சமூகம் ஏற்றுக்கொண்ட யோகம்

*சமூகத்தைப் பொருத்தவரை யோகம் என்பது சுயநலத்தை அழிக்கும் பரநலம் என்று கூறலாம்.

*சமூகத்தைப் பீடித்த மூன்று பேய்கள்: ஏழ்மை, நோய், பசி.

*இவை மூன்றையும் அழிப்பது கல்வி. எனவே கல்வி சமூகம் செய்யும் யோகம்.

*மனிதனின் சுயநலத்தைப் பரவலாக அழிக்கும் பரநலம் மார்க்கட், வியாபாரம். பிறர் தேவையைப் பூர்த்தி செய்வதே மார்க்கட் இலட்சியம்.

*இரயில், பஸ், விமானம், ஆகியவை காலத்தைக் கடக்கும் சாதனங்கள். அவை இடத்தையும் சுருக்குகின்றன.

*குடும்பம் மனிதனைக் குடும்பத்திற்காக வாழச் செய்வதால், சமூகத்தின் சிறு உருவம், miniature குடும்பம்.

*தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் மனிதன் நல்ல குடும்பஸ்தன்.

*வீட்டில் எந்தச் சௌகரியமும் எனக்குக் கடைசியாக வரட்டும் என்று கூறும் தகப்பனார் யோகத்தை குடும்பத்தின் அளவில் செய்கிறார்.

*குடும்பத்தில் தனக்குள்ள அதிகாரத்தை அணுவளவும் செலுத்தாத தாயார், தகப்பனார் அன்பராகும் தகுதியுள்ளவர்.

*குடும்பத்தின் அளவில் சத்தியத்தை 100க்கு 100 பங்கு கடைப்பிடிப்பது சமூகத்தின் யோகத்தைக் குடும்பத்தில் செய்வதாகும்.

****



book | by Dr. Radut