Skip to Content

11.அஜெண்டா

“Agenda”

Exact replica of Mother's father in Japan.

இரட்டைக் குழந்தைகள் ஒரே வயிற்றில் பிறப்பதுபோல் வெவ்வேறு இடங்களிலும் பிறப்பதுண்டு. அன்னை ஜப்பானிலிருந்த பொழுது தன் தகப்பனாரைப்போலவே அச்சில் வார்த்தாற்போல் ஒருவரைக் கண்டார். ஆச்சரியப்பட்டார். இது சம்பந்தப்பட்டவை,

. Overmind தெய்வீக மனம் சத்தியஜீவியத்தின் பிரதிநிதியாக பிரபஞ்சத்தில் செயல்படும்பொழுது எந்த ஒரு விஷயத்தையும் முடிவுவரை எடுத்துச் செல்லும்.

உதாரணமாகக் கல்வி என்பதை தாய்மொழி, கணக்கு என நம் நாட்டில் ஆரம்பித்தனர்.

கிரேக்க நாட்டில் கல்வி என்பது செய்யுள் எனப்பட்டது.

தத்துவம் அதனினின்று பிரிந்தது.

சரித்திரம் தத்துவத்திலிருந்து பிரிந்தது.

பூகோளம் சரித்திரத்திலிருந்து வெளியேறியது.

அரசியல் தனி இயலாகச் சரித்திரத்திருந்து புறப்பட்டது.

இப்படிப் பிரியும்பொழுது ஏராளமான பிரிவுகள் ஏற்படுகின்றன.

இனிப் பிரிக்கமுடியாது என்ற நிலை வரும்வரை பிரிவது வழக்கம்.

நம் விரலில் உள்ள ரேகைகள் நமக்கேயுரியன. மற்றவர்களுடன் ஒன்றாது என்பதை 100 ஆண்டுகளாகவே நாம் அறிவோம்.

இலைகளில் உள்ள ரேகைகளும் அப்படியே.

. அதனால் தோற்றம் ஒன்றுபோல் இருப்பதும், வேறுபடுவதும் இயற்கையின் அமைப்பு.

. ஒரு 100 அல்லது 1000 புத்தகங்கள் அச்சடித்தால் 10ஆம் பக்கத்திலுள்ள 4ஆம் வரியில் "" என்ற எழுத்தை 100 புத்தகங்களில் பார்த்தாலும் ஒன்றுபோல இருக்கும்.

பூதக்கண்ணாடிமூலம் பார்த்தால் 100இல் இரண்டு "" ஒன்றாக இருக்காது.

. பிரிந்து நிற்பது இயற்கை. சேர்ந்து தோன்றுவது சிருஷ்டி.

. ஒருமை சிருஷ்டிக்கு அடிப்படையானதால் சேர்ந்து ஒன்றுபோல் தோன்றுகின்றது.

. தனக்குத் தனித்தன்மை உள்ளது என்பதை நிலைநிறுத்தும்வரை பிரிவது இயற்கை.

. பிரான்ஸ்ஸைவிட்டுப் புதுவையை நோக்கி வந்த அன்னை ஜப்பானில் 4 ஆண்டுகள் தங்கினார். திரும்ப பாரிஸ் போகும் எண்ணம் மனத்தில்லை.

. அதனால் தகப்பனார், தாயாரைப் பார்க்க முடியாது எனத் தெரியும்.

. தகப்பனாரைப் பார்க்கும் ஆவலைப் பூர்த்தி செய்யும்வகையில் தகப்பனார் போன்ற ஒருவரைக் கண்டார்.

. அன்னை புதுவை வந்தபின் தம் ஒரே மகனை 40 ஆண்டுகள் பார்க்கவில்லை.

. 1960க்கு மேல்தான் அவர் மகன் முதல் புதுவை வந்து அன்னையைச் சந்தித்தார்.

. அது முதல் ஆண்டுதோறும் புதுவையில் ஆறு மாதம், பாரிசில் ஆறு மாதம் அவரிருந்தார்.

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

அன்னை பக்தர் ஒரு காரியத்தைச் செய்வதால் அந்த நேரம் சுபமுகூர்த்தமாகிறது. பக்தரின் செயல் நேரத்தைப் புனிதப்படுத்துகிறது.

நேரத்தைப் புனிதப்படுத்தும் செயல்.

 

****

 

 

சொசைட்டியின் வெளியீடுகள்

ஆங்கில நூல்கள்:


 

1

Mental Peace of the Industrialist

ரூ. 30

2

Sri Aravindam

ரூ. 40

3

Luck

ரூ. 50

4

A Discussion on the Life Divine

ரூ.100

5

Life & Teachings of Sri.Aurobindo and The Mother

ரூ.120

6

Spirituality and Prosperity - I

ரூ.150

7

Spirituality and Prosperity - II

ரூ.200


 

மற்ற வெளியீடுகள்:


 

1

தொழிலின் ஜீவன்

N. கண்ணன்

ரூ. 30

2

தேடிவரும் யோகம்

பிரித்திவ்

ரூ. 50

3

திருவருளே தீராத செல்வம்

N. அசோகன்

ரூ. 75

4

திருவடி தரிசனம்

N. அசோகன்

ரூ. 75

5

அருளோவியம்

N. அசோகன்

ரூ. 80

6

பக்தியும் சேவையும்

N. அசோகன்

ரூ.100

7

சத் பிரம்மம்

விசாலம்

ரூ. 20

8

சத் புருஷன்

விஜயா & விசாலம்*

ரூ. 20


 

 

*சென்னையில் மட்டுமே கிடைக்கும்.

தபாலில் பெற புத்தக விலையுடன் பதிவுத் தபால் கட்டணம் ரூ.20/- சேர்த்து M.O.. செய்யவும்.


 


 



book | by Dr. Radut