Skip to Content

06.சாவித்ரி

"சாவித்ரி"

P.43, Life kept no more a dull and meaningless shape.

வாழ்வு ஜீவனற்றதோ, அர்த்தமற்றதோ அன்று.

. உலகப் போராட்டத்தின் நடுவில், அக்கொந்தளிப்பில் இறைவன் ஜனிக்கப்படும் வேதனையைக் கண்டான்.

. ஞானம் அஞ்ஞான முகமூடியுடன் வலம் வந்தது.

. கண்ணுக்குத் தெரியாத அவசியம் விதிக்கு மூடியாயிற்று.

. பிரபஞ்சச் சாதனை சதுரங்க ஆட்டமாயிற்று.

. ஆனந்தம் இதயத்தில் கொலுவீற்றிருந்தது.

. கவர்ச்சியின் பூரிப்புப் பெருமையுடன் பவனிவந்தது.

. உலகின் வேதனை சிறைப்பட்ட ஆனந்தத்தின் கப்பம்.

. இரண்டறக் கலப்பது நடந்து செல்லும் நாட்களுக்கு எல்லை.

. விதியின் பாதைக்கு நாட்கள் வழிப்போக்கன்.

. சிந்தனையிலாழ்ந்த சிறு தேவதைக்கு இரவு துணை.

. நெஞ்சம் விம்மும் சொர்க்கலோக அலைகள்.

. நகரும் நாட்கள் வீரனின் நடையாயிற்று.

. குட்டிச்சாத்தான் எட்டாத சிகரத்தை எட்டினான்.

. விரிந்த அவனது வெற்றிக்குப் பரந்த பூமியும் சிறியது.

. சிறிய மனத்தின் குருட்டு சக்தி.

. வீர நடையை விண்டுரைத்தது.

. வாழ்வு இறைவனை அடையும் பாதையாயிற்று.

. மனித வாழ்வு தெய்வச் சோதனை.

. பிரபஞ்சம் ஆத்மாவுக்கு ஒரு வாய்ப்பு.

. கருத்தரித்துப் பிறந்த உலகம்.

. ஜடத்தின் ஆன்மா ரூபம் பெற்றது.

. இயற்கையின் வயிற்றில் இறைவன் கருவானான்.

. இயற்கை இறைவன் வழி பெறும் அமரத்துவம்.

. சலனமற்ற சாந்தியில் அவன் ஆத்மா இட்ட சட்டம்.

. ஆன்ம ஜோதியின் ஊற்றில் அவன் பெற்ற அபிஷேகம்.

. விவேகத்தின் வீரியத்துள் வெற்றிநடைபோடும் வீரன்.

. சூரிய ஜோதியின் ஒளிக்கதிர்கள் சுடர்விடும் உருவம்.

. உடலின் சூட்சுமம் உள்ளிருந்து எழுகிறது.

. புவியை சொர்க்கத்திற்கு உயர்த்தும் சக்தி.


 

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

கண்மூடித்தனமான திறமையை, தெளிவான ஞானமாக மாற்றினால் அதுவே முதற்கட்டம். இன்று அன்றாட வேலைகளை எதுவும் முடியாததில்லை என்ற நிலையில் கண்மூடித்தனமாகச் செய்வதற்குப் பதிலாக, அவற்றை எதுவும் முடியும் என்று தெளிவாகச் செய்ய முடியுமானால் அதுவே முதற்கட்டம்.

எதுவும் முடியும் என்பதே முதற்கட்டம்.


 


 


 



book | by Dr. Radut