Skip to Content

04.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

                                                லைப் டிவைன்

                                                            (சென்ற இதழின் தொடர்ச்சி....)                        கர்மயோகி
 

XII. Delight of Existence : The Solution

Page No.105, Para No.12

12. ஆனந்தம் - விளக்கம்

This is a universal truth.

இது பிரபஞ்ச உண்மை.

It is difficult to see it in pain or pleasure.

இவ்வுண்மையை வலியிலோ, சந்தோஷத்திலோ காண்பது கடினம்.

It is so because the nerves dominate here.

நரம்பின் ஆட்சியிருப்பதால் அது முடியாது.

They are dominated by external pressure.

புற வற்புறுத்தல் அவை.

It is that centre and seat.

அதுவே மையம், உயிர்நாடி.

Still, we can see the truth.

இருப்பினும் உண்மை தெரியும்.

We see it as a fact.

நாம் அதை உண்மையாகக் காண்கிறோம்.

The same physical contact can be pleasurable or painful.

ஒரே அனுபவம் சந்தோஷமாகவோ, வலியாகவோ இருக்கலாம்.

This is according to habit.

இது பழக்கம்.

It is not in different individuals.

மற்றவர் அனுபவத்தில்லை.

It is in the same individual.

ஒருவர் அனுபவத்திலே இதைக் காணலாம்.

But the conditions are different.

ஆனால் சந்தர்ப்பம் மாறும்.

Maybe they are different stages of development.

சந்தர்ப்பம் வெவ்வேறு நிலைகளைக் குறிக்கும்.

There are conditions of torture.

அவை நல்ல சந்தர்ப்பங்களாக இருக்கும்.

Maybe they are conditions of suffering.

துன்பமான சந்தர்ப்பங்களாக அவையிருக்கலாம்.

In great excitement this torture is not felt.

சித்ரவதையையறியாத தீவிரம் உண்டு.

Highly exalted conditions achieve that.

உணர்வின் உயர்ந்த நிலைக்குரியது அம்மனநிலை.

They are physically indifferent to pain.

அந்நிலையில் வலிஎன்பதை உடல் உணராது.

They are unconscious of pain.

வலி எடுப்பதையே அவர் அறியார்.

Sometimes the nerves are able to reassert themselves.

சில சமயங்களில் நரம்பு வலியை அறிய வற்புறுத்தும்.

They remind the mentality of its habit.

உணர்வு அறிவுக்கு வலியை

நினைவூட்டும்.

Then the suffering returns.

அப்பொழுது வலி வரும்.

This is a return to the habit.

இது பழக்கத்தை மீண்டும் நாடுவது.

This is not inevitable.

இது தவிர்க்க முடியாததில்லை.

It is only habitual.

இது பழக்கம்.

Hypnosis explains this.

மந்திரவாதியின் மயக்கம் இதை விளக்கும்.

The hypnotised subject is prevented from feeling the pain.

மயக்கமுற்றவன் வலியை

உணர்வதை மந்திரம் தடுக்கும்.

He does not feel the pain of a wound or puncture.

காயம், அறுத்த தசையின் வலியை

அவன் உணர்வதில்லை.

That is so in the hypnotised abnormal state.

மயக்கமுற்ற நேரத்தில் இது நடக்கும்.

He can be free from pain even when awakened.

எழுந்தபிறகும் வலிதெரியாமலிருக்கும்.

This too can be prevented.

அதையும் தடுக்கலாம்.

The reason for this is simple.

காரணம் எளிது.

The hypnotiser suspends the waking consciousness.

விழிப்பை மயக்கம் ரத்து செய்கிறது.

It is habitual.

அது பழக்கம்.

It is a slave of nervous habits.

உணர்வின் அடிமை மனிதன்.

He appeals to the mental being in the subliminal.

மந்திரவாதி அடிமனத்தை அழைக்கிறான்.

It is in the depths.

அடிமனம் ஆழத்திலுள்ளது.

The inner mental being is the master of the nerves and body.

உள்மனம் உணர்வின் அதிகாரி.

This freedom is abnormal and is by hypnosis.

அது உண்மையான சுதந்திரமில்லை. மந்திரத்தில் அறியாத வலிஇல்லாதது,

This is not a true possession.

அது மந்திர சக்தி.

It is by an alien will

புறச் சக்தி செயல்படுவது அது.

It can be won by one's own will.

நாமே அதைப் பெறலாம்.

The victory can be complete or partial.

வெற்றி முழுமையாகவோ, பகுதியாகவோ இருக்கும்.

It is a victory of the mental being over the nervous reactions.

உணர்ச்சியை மனம் வெல்வது அந்நிலை.

Page No.107 , Para No.13


 

Pain of mind and body is a device of Nature.

மனத்திற்கும் உடலுக்கும் உள்ள வலிஇயற்கையின் உபாயம்.

It is a device of Force in her works.

இயற்கை தன் வேலையைச் செய்ய சக்தியைப் பயன்படுத்தும் உபாயமிது.

Hers is an upward evolution.

இது மேல் நோக்கிப் போகும் பரிணாமம்.

This device is to subserve an end.

இந்த உபாயம் ஓர் இலட்சியத்தைப் பூர்த்தி செய்யும்.

It is an end in a definite transition.

இது நிலையான மாற்றத்தின் முடிவு.

The world is a play.

உலகம் ஒரு நாடகம்.

It is a play from the view of the individual.

அது மனித நோக்கத்திற்குரிய நாடகம்.

It is a play and complex shock.

அது நாடகம், சிக்கலான அதிர்ச்சி.

It is a complex shock of multitudinous forces.

பல்வேறு சக்திகளின் மோதலால் ஏற்படும் சிக்கலான அதிர்ச்சி.

The individual is a limited constructed being.

மனிதன் சிறியவன், தன்னைத் தானே சீர் செய்தவன்.

He has a limited amount of force.

அவனுடைய சக்திக்கு அளவுண்டு.

It is exposed to numberless shocks.

அச்சக்தி பல மோதல்களைச் சந்திக்கும்.

They may wound, maim, break up or disintegrate.

அவை எலும்பை முறிக்கும், காயப்படுத்தும், உறுப்புகளை வெட்டும் அல்லது அழிக்கும்.

They do so to the construction which he calls himself.

எல்லாம் தன் சுபாவத்திற்கேற்ப அவன் செய்துகொள்கிறான்.

Pain is a recoil.

வலி என்பது பின்வாங்குவது.

It is in the nature of a nervous recoil.

உணர்வு தாங்கமுடியாமல் ஓடிப்போவது வலி.

It is also a physical recoil.

உடலே அதுபோல் ஓடும்.

It recoils from a dangerous or harmful contact.

பயங்கரத்தை விலக்க, தொந்தரவை விலக்க மனிதன் ஓடி ஒளிவான்.

The Upanishad calls it Jugupsa.

உபநிஷதம் அதை ஜுகூப்ஸா என்கிறது.

It means shrinking of the limited being.

சிறிய ஜந்து பயந்து ஒளிவது எனப் பொருள்.

It shrinks from what is not itself.

தன்னிலிருந்து மாறுபட்டதிலிருந்து

அது விலகுகிறது.

It does so from what is not sympathetic.

தன்மீது அனுதாபமற்றவரைவிட்டு விலகுகிறது.

It shrinks from what is not in harmony with itself.

தன்னுடன் சுமுகமற்றவரைவிட்டு விலகுகிறது.

It is its impulse of self-defence against 'others'.

தன்னைப் பிறரிடமிருந்து காப்பாற்றும் சுபாவமது.

It is an indication by Nature.

அது இயற்கை சுட்டிக்காட்டுவதாகும்.

It indicates what is to be avoided.

எதை விலக்கவேண்டும் என அது கூறுகிறது.

It is to be avoided only from its point of view.

இக்கண்ணோட்டத்தினின்றே அதை விலக்க வேண்டும்.

It must be remedied, if it cannot avoid.

விலக்க முடியாவிட்டால், அதை மாற்றவேண்டும்.

Ours is a purely physical world.

நாம் வாழும் உலகம் ஜட உலகம்.

It does not come into being in our world.

அது உலகினுள் வருவதில்லை.

For that to enter, life must enter into it.

அது உள்ளே வர, வாழ்வு அதனுள் நுழையவேண்டும்.

Till then mechanical methods are sufficient.

அதுவரை ஜடமான முறைகள் போதும்.

The office of suffering begins with life.

வலிவாழ்வில் ஆரம்பிக்கிறது.

Life is frail.

வாழ்வு எளியது.

It imperfectly possesses Matter.

அதனால் ஜடத்தை வலுவாகப் பற்ற முடியவில்லை.

When life enters, suffering begins.

வாழ்வு வந்தால், வலி வருகிறது.

Suffering grows with the growth of Mind in life.

வாழ்வில் மனம் வளர்ந்தால் வலி வளரும்.

Suffering continues as long as Mind is bound.

மனம் கட்டுண்டவரை வலி தொடரும்.

Mind is bound in the life and body which it uses.

தான் பயன்படுத்தும் உடலுக்கும், வாழ்வுக்கும் மனம் கட்டுப்பட்டது.

Mind depends on them.

மனம் அவற்றை நம்பி வாழ்கிறது.

It depends on them for its knowledge and action.

அறிவுக்கும் செயலுக்கும் மனம் அவற்றை நம்புகிறது.

It is subjected to their limitations.

மனம் அவற்றின் சுருக்கத்திற்குட்பட்டது.

It is subject to the egoistic impulses and aims.

அவை அகந்தையின் நோக்கத்திற்கும் உணர்வுக்கும் உட்பட்டது.

They are born out of those limitations.

இந்த வரையறைக்குள் அவை கட்டுப்பட்டுப் பிறந்தவை.

Mind is capable of being free.

மனம் சுதந்திரமாக இருக்கவல்லது.

It can be unegoistic.

மனத்தால் அகந்தையில்லாமலிருக்க

முடியும்.

It can be in harmony with all other beings.

மனம் மற்றவற்றுடன் சுமுகமாக இருக்கவல்லது.

It can be in harmony with universal forces.

மனம் பிரபஞ்ச சக்திகளுடன் சுமுகமாக இருக்கும்.

Then the use of suffering diminishes.

அப்பொழுது வலிக்குப் பயனில்லை.

Its rationale must then finally cease to be.

வலி இருப்பதற்கு அதன்பின் காரணமில்லை.

After that it can continue as atavism of Nature.

இயற்கையில் எஞ்சியதாக வலிஇருக்கலாம்.

It is an atavism that has survived its use.

தன் கடமை முடிந்தபின் ஜீவனற்று வாழலாம்.

It is the persistence of the lower in the higher.

சிறியது பெரியதில் தொடர்ந்திருப்பதாகும்.

It does so because the higher organisation is imperfect.

பெரியதின் குறையால் சிறியது வாழ்கிறது.

It will be eventually eliminated.

நாளடைவில் அது விலக்கப்படும்.

It will be eliminated by a conquest.

வலி விலக்கப்படுவது வெற்றி.

It is destined.

விலக்கப்படுவது உறுதி.

It is a conquest of the soul over Matter.

ஜடத்தை ஆத்மா வென்றதின் அடையாளமிது.

It is a conquest over the egoistic limitation in Mind.

மனம் அகந்தைக்குட்பட்டதிலிருந்து

விடுபட்ட வெற்றியிது.

                                            Contd...

தொடரும்....


 

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

வாழ்விலிருந்து யோகத்திற்குப் போனதற்குச் சில அறிகுறிகளுண்டு.

1. இறைவனை நினைப்பது இன்பமாக இருக்கவேண்டும். இதுவரை வாழ்வில் அனுபவித்த இன்பங்களைவிட அதிகமானதாக இருக்கவேண்டும்.

2. ஆர்வம் இறைவன் நினைவைத் தானே நாடவேண்டும்.

3. வாழ்வின் நிகழ்ச்சிகளை மனம் யோகத்தின்படி அறிய முனையவேண்டும்.

4. பழக்கத்தால் செயல்பட உடல் தயங்கவேண்டும்.

இறைவன் நினைவு இன்ப நினைவு.

இறைவனைத் தானே நாடும் ஆர்வம்.

யோக நியதிப்படி வாழ்வின் சிந்தனை.

பழக்கம் விரிசல் விடும்.

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

அருள் அழைப்பை ஏற்கிறது. மனிதனைப் பொறுத்தவரை அழைப்பே அருள்

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

நம் சரணாகதியைப் பூர்த்தி செய்ய நாம் பிரார்த்திக்கிறோம். அது தம் கடமையா என அன்னை கேட்கிறார்.பொதுவாக மனித ஆன்மா தன் சரணாகதியையும் அன்னைக்குச் சமர்ப்பிப்பது உன்னதமான நோக்கமாகும். நாமே இறைவன் என்ற நிலையை அன்னை நமக்களிப்பதால் சரணாகதி அதன் பகுதியாகிறது.அதன்பின் பழைய தன்னை அறியாத நிலைக்குச் சென்று அதன்படி நடக்க முயன்றால் அந்த இடைவெளியில் நாமழிக்க முயலும் அகந்தை எழுகிறது.

சரணாகதி நம் பங்கு. அருள் அன்னைக்குரியது.

 

****


 


 


 


 


 


 



book | by Dr. Radut