Skip to Content

08.லைப் டிவைன் -கருத்து

The Life Divine-கருத்து

Realising it cannot possess without being possessed it feels fulfilled.

தன்னை ஆட்கொள்ளாமல் தான் ஆட்கொள்ள முடியாது என்பது ஞானசித்தி.

மனிதன் உடலால் வாழ்பவன். அவனை ஒருவன் எதிர்த்தால் அழிப்பான், கொலை செய்வான். எதிரியைக் கொலை செய்வது அந்த நாளில் பெருமை, தர்மம், மானம். உடலைவிட்டு மனிதன் உயிருக்கு வந்தபொழுது கொலையைக் கைவிட்டான். கொலையைக் கைவிட்டவன் உயிரை எடுத்தான். மானமே உயிர் என்பதால் மானத்தை எடுத்து எதிரியை அவமானப்படுத்தினான். இவை மனிதன் வாழ்ந்த வகைகள்.

னம் சூட்சுமமானதால், தன் ஆட்சிக்குத் தான் எதையும் விழுங்கவேண்டாம் என அறியும்.
மனம் பிறரை ஆளவேண்டுமானால்,

அவனைக் கொலை செய்யவேண்டாம்.

அவனை அவமானப்படுத்தவேண்டாம்.

நம் எண்ணத்தை அவன் ஏற்றால் போதும்.

நமது எண்ணத்தை ஒருவன் ஏற்றால், அவனை நாம் ஆளுவதாகப் பொருள். கிருஷ்ண தேவராயர் சபைக்கு வடநாட்டுப் பண்டிதர் ஒருவர் வந்தார். சபையில் பண்டிதரைச் சந்தித்து விவாதிக்கப் பிரியப்பட்டார். அரசன் குறும்பாகத் தன் ஒன்றரைக் கண் சமையல்காரனைப் பண்டிதராக ஜோடித்து அனுப்பினான். வந்தவர் சங்கேத பாஷையில் பேச விரும்பினார்.அவர் உலகம் ஒன்று, "ஏகன்' என்று கூற ஆள்காட்டி விரலைக் காட்டினார்.சமையல்காரன் இரு விரல்களைக் காட்டினான்.பண்டிதர் மூன்று விரல்களைக் காட்டினார்.சமையல்காரன் முஷ்டியைக் காட்டினான்.பண்டிதர் எழுந்து அவனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.

"உலகம் ஒன்று என்றேன். அவர் - சமையல்காரன் - துவிதம் இரண்டு என்றார். நான் இறைவன், பிரபஞ்சம், மனிதன் என்ற மூன்று என்றேன். மூன்றும் ஒன்றே என முஷ்டியைக் காட்டினார். நான் தோற்றேன்'' என்று பண்டிதர் கூறிப்போனார்.

ஒருவருடைய எண்ணத்தை அடுத்தவர் ஏற்பது அவருக்கு வெற்றி, ஏற்பவருக்குத் தோல்வி என்பது மனத்தின் சட்டம், கொலை இல்லை, அவமானமில்லை.

பண்டிதர் போனபின் அரசன் சமையல்காரனை விசாரித்தான். "அந்த ஆள் எனக்கு ஒரு கண் என்றான். எனக்குக் கோபம் வந்தது. உன் இரு கண்ணும் என் ஒரு கண்ணுக்குக் சமம் என்றேன். மீண்டும் "நம் இருவருக்கும் மூன்று கண்' என்றான். ஒரே குத்தாகக் குத்திவிடுவேன் என முஷ்டியைக் காட்டினேன்'' என்று சமையல்காரன் விளக்கமளித்தான்

. மனம் உடலையும், உயிரையும்விடப் பெரியது.

. பெரிய மனமும் மடையனுக்குப் புரியும்வகை நகைச்சுவையாகும்.

****
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

இடைவிடாத அழைப்பு, எண்ணத்தை விலக்கி, நம்மை மேலிருந்து உள்ளே அழைத்துச்செல்ல வல்லது.

எண்ணத்தை விலக்கி உள்ளே செல்லும் இடைவிடாத அழைப்பு.

****


 


 



book | by Dr. Radut