Skip to Content

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

தம்பி - சமர்ப்பணம் முக்கியம், சமர்ப்பணம் மட்டுமே முக்கியம். அது முடியவில்லை என்பதால் நாம் சேவை , பக்தர், சாதகர் என்பவற்றைக் கருதுகிறோம்.நாம் இவர்களுடன் அன்னைமூலமே தொடர்பு கொள்ள வேண்டும், நேரடியாகத் தொடர்புகொள்வது தவறு.

அண்ணன் - ஆசிரமம் ஆரம்பித்த காலத்தில் இரு சாதகர்கள் வேலைக்காகத் தவிர, வேறு விஷயமாகச் சந்திக்கக் கூடாது என்று கண்டிப்புச் செய்திருந்தார் என்றபொழுது, நமக்கு ஏன் அன்னை விலக்கிய அத்தொடர்பு? அவர்கள் வாழ்வை நாமறிய வேண்டும், விமர்சிக்க வேண்டும் என்பது நமக்குத் தேவையில்லாதது.இதே சட்டம் மற்ற பக்தர்களுக்கும் பொருந்தும்.

தம்பி - அன்னை சட்டப்படி உள்ள தொடர்பு சரி.மற்றது சரியில்லை அல்லவா?

அண்ணன் - இந்தச் சட்டத்தை பின்பற்றுபவர்களை யாராவது உனக்குத் தெரியுமா?நாமரிவரும் எந்த அளவுக்குத் தேறுவோம்?

தம்பி - பிறரை விடு, நாம் 10% கூட தேறமாட்டோம் என்று தெரிகிறது.அன்னை சட்டத்தைப் பின்பற்றாமல் நாம் பக்தர் எனக் கூறுவது நமக்குச் சரியில்லை.Mother is an organisation of consciousness என்பதை எப்படி விளக்கமுடியும்?

அண்ணன் - Skill, capacity திறமை என்பவை என்ன?நாம் எழுதுகிறோம்.உடை உடுத்துகிறோம், ஆபீஸ் வேலை செய்கிறோம்.இதில் என்ன நடக்கிறது?நம் சக்தி energy செலவாகிறது.லீவு நாளில் நம் சக்தி  energy

 

விரயமாகிறது.வேலை செய்தால் வேலையில் சக்தி பலன் தருகிறது.பலன்தர சக்தியை energy ஐ organise செய்யவேண்டும்.Skill and capacity are organisations of physical energy. செயலுக்குள்ள சக்தியை முறைப்படுத்தினால் திறமை வருகிறது.

அழகாகப் பேசுகிறான் ராமன், பலரும் அவனை விரும்புகிறார்கள்.அவனை நாடி வருகிறார்கள். எரிந்துவிழுந்தால், முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டால், பாராமுகமாக இருந்தால் எவரும் அருகே வருவதில்லை.பலரும் விரும்புவதால் பலர் சேர்ந்து செயல்பட முடிகிறது.ராமனால் காரியத்தைச் சாதிக்கமுடிகிறது.இது என்ன?This is organisation of vital energy.உணர்வின் சக்தியை முறைப்படுத்தினால் காரியம் கூடிவருகிறது.பொதுவாக (physical organisationயை விட vital organisation) செயலுக்குரியதைவிட உணர்வுக்குரியமுறை 10,50 மடங்கு பலன் தரவல்லது.தச்சன் செயலுக்குரியவன். வியாபாரி உணர்வுக்குரியன், தச்சன் என்றும் வியாபாரி போல் சம்பாதிக்க முடியாது.வியாபாரம் பெரியது. உணர்வுக்குரியது.தச்சுவேலை வேலைக்குரியது.ஒரு கம்பனிவைத்து technology டெக்னாலஜி மூலம் சோப்பு, ஷாம்பு, கார்போல பொருள்களை உற்பத்தி செய்து வியாபாரம் செய்வது அறிவுக்குரிய முறை.It is organisation ideas கம்பனி என்பது ஒரு idea கருத்து. டெக்னாலஜி என்பது ஓர் idea கருத்து.கருத்தை எடுத்து முறைப்படுத்தி செயல்படுத்தினால் அது physical vital, vital capacity செயல், உணர்வு போன்றவற்றைவிட ஆயிரம் மடங்கு பெரியது. Organisation என்பது, முறைப்படுத்துவதாகும்.அது செயலிலும், உணர்விலும், அறிவிலும் உண்டு.

படிப்படியாக உயரக்கூடியது.படிப்படியாக எனில் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் என்றபடி உயரும் தன்மையுள்ளது. விசேஷம் organisation முறையில் உள்ளது. இதற்கடுத்தாற்போல் முனிவர், ரிஷி, யோகி, தெய்வம், சத்தியஜீவியம் கடந்து consciousness ஜீவியம் உள்ளது. Organisationயை அங்கு பார்த்தால் அது அன்னை யாகும்.Mother is organisation of consciousness. ஒவ்வொரு நிலையாக விளக்கலாம்.படிப்படியாகப் புரியும்.புரிவது விசேஷமில்லை.செய்வதே முக்கியம்.

தம்பி - என்ன செய்ய வேண்டும்?

அண்ணன் - தெய்வங்கள் சக்தி வாய்ந்தவை.அவர்களின் பிறப்பிடம் சத்தியஜீவியம்.தெய்வங்கட்கும் உலகுக்கும் தொடர்பில்லை.மனிதன் தெய்வத்தை துதித்த துதி அவர்கள் காதில் விழுந்தால், அவர்கள் சக்திமூலம் வரம் தருகிறார்கள்.மனிதனைப் பொருத்தவரை தெய்வங்கட்கு கடமையில்லை, தொடர்பும் இல்லை என்று கூறிய பகவான் நாம் அறிந்த வேறு சிலவிஷயங்களையும் சுட்டிக் காட்டுகிறார்.

  • மனிதன் தவம் பலித்து மோட்சம் பெற தெய்வங்கள் தடையாகவுமிருக்கும்.அன்னை சத்திய ஜீவியத்தைக் கடந்த ஜீவியத்தில் உற்பத்தியானவர்கள்.நம்மைத் தேடிவரும் தெய்வம்.நம் நியாயமான பிரார்த்தனைகளை கேட்டவுடன் கொடுப்பவர்கள்.நாம் அன்னையை நிபந்தனையின்றி ஏற்க வேண்டும், அதாவது,
  • நம் சௌகரியத்திற்காக ஏற்பதைவிட, அன்னைக்காகவே ஏற்க வேண்டும்.
  • மனித உறவை அன்னை மூலம் மட்டும் நாடவேண்டும்.
  • மனம் நல்ல எண்ணத்தால் மட்டும் நிரம்பியிருக்க வேண்டும். 
  • அன்னையைப் பிறருக்கு நம் ஆசைக்காகக் கொடுக்க முயலக்கூடாது.
  • சமர்ப்பணத்தை முக்கியமாகக் கருதவேண்டும்.சமர்ப்பணத்தை மட்டும் முக்கியமாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.

தம்பி - நானிதைச் செய்ய விருப்பப்படுகிறேன்.அறிவுக்கடுத்த நிலைகளையும் விளக்கமாக அறிய விரும்புகிறேன்.

அண்ணன் - அவை அறிவைவிடப் பல ஆயிரம், லட்சம் மடங்கு சக்தி வாய்ந்தவை என்று அறிந்தால் போதும். அறிவைவிட உயர்ந்த நிலைகட்கு உதாரணம் தரமுடியாது என்பதால் பொதுவாகவே பேசமுடியும்.

Bill Gates இன்று $100 Billion சம்பாதித்தார் எனில் அது எப்படி?கம்ப்யூட்டர் அறிவை முறைப்படுத்துகிறது organises knowledge.அதைச் செய்தால் மட்டும் ஒருவர் இவ்வளவு சாதிக்க முடியுமென்றால், சாதாரண மனிதன் தனக்குத் தேவையான அறிவை முறைப்படுத்தி பெருஞ் செல்வம் சம்பாதிக்கலாமல்லவா? அது செய்தால் போதும்.

தம்பி - என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.

அண்ணன் - நான் கூறுவதில் இரண்டு பாகம் உண்டு.ஒன்று கீழிருந்து நாம் செய்ய வேண்டியது organise knowledge from below அறிவை முறைசெய்ய வேண்டும். அடுத்தது மேலிருந்து அன்னை செய்ய வேண்டியது. அதற்கு அன்னையைக் கூப்பிட்டால் போதும்.நம் பாஷையில் சொன்னால்,

  • நம் அறிவுக்கெட்டியவற்றை எல்லாம் முழுவதும் செய்து முடித்துவிட்டு அன்னையை அழைக்க வேண்டும்.அப்படிச் செய்தால் செய்பவர் வருமானம் 10 அல்லது 100 மடங்கு உயரும்.அதைச் செய்தவர் செய்தபின் கேட்டால் விளக்கங்களை ஏராளமாகக் கூறலாம்.

தம்பி - இதை நாம் பல முறையில்லாவிட்டாலும், சில முறை கண்டிருக்கிறோம்.பலன் பெற்றவர் சொல்லாமல் நம்மை விட்டு விலகிவிடுகிறார் என்றும் பார்க்கிறோம்.நான் இதை ஏற்றுக் கொள்கிறேன்.முடிந்தவரை அடுத்த நிலைகளையும் விளக்கவேண்டும்.

அண்ணன் - மனிதனுடைய அதிர்ஷ்டத்திற்கு mental organisation அறிவின் முறையை விட மேலேபோக வேண்டிய அவசியமில்லை.அதன்மூலம் செய்த சாதனை Bill Gatesனுடையது.நம் அறிவுக்குரியனவெல்லாம் நாம் செய்து முடித்தவுடன் அன்னை செயல்பட ஆரம்பிப்பதால், நமக்கு இந்த நிலை என்ன அதிகபட்சம் கிடைக்குமோ அது கிடைத்து விடுகிறது. முனிவருக்குடையது மௌனம்.Silentwill மௌனசக்தி அதற்குரியது.அதுவே அதன்முறை.It is the organisation of silence.நம் மனதிலுள்ளதைப் பிறரிடம் கூறாவிட்டால் அவரே அதை நமக்குச் சாதகமாகத் தெரிவிக்கின்றார் என்பதே.இதை ஒருவர் சாதித்தால், உலகில் அவரால் முடியாதது என்றுண்டோ?அது எவ்வளவு பெரிய திறமை.இன்று உலகில் எவரும் பெற்றில்லாத திறமை அது.

அடுத்தது ரிஷியின் நிலை.மௌனத்தைக் கடந்த ஜோதி நிலை.இந்த நிலையில் we organise light. ஜோதியின் முறை மௌனத்தின் முறையை உட்கொண்டது.உலகின் நிகழ்காலம், கடந்த காலம், எதிர்காலம் திருஷ்டியாகத் தெரியும் நிலையிது.

அடுத்தது யோகி.Here man organises direct knowledge. மனம் அறிவால் செய்வதை, முனிவர் மௌனத்தாலும், ரிஷி ஒளியாலும் செய்கிறார்.யோகி அறிவு, மௌனம், ஒளி என்ற intermediate instrument கருவிகளின் உதவியின்றி நேரடியாக உலகத்தை ஞானத்தால் அறிகிறார்.

தெய்வநிலை அடுத்தது.தெய்வங்களுக்குள்ள சக்திகளை நாம் அறிவோம்.They have the knowledge,need not seek it.யோகி ஞானத்தை நாடவேண்டும்.தெய்வம் அதை நாட வேண்டாம். தனக்கே ஞானமுடையது தெய்வம்.ஆனால் அறியாமை இங்கும் தொடரும்.Gods organise knowledge.They possess it,but it is accompanied by ignorance.யோகி எதை முறையாகப் பெற வேண்டுமோ அதை தெய்வம் இயல்பாகப் பெற்றுள்ளது.

அடுத்தது சத்தியஜீவியம்.Supermind organises nothing. It determines.சத்திய ஜீவியம் எந்த முறையையும் தேடவேண்டாம்.அதுவே முடிவு செய்கிறது.மனிதனும், தவசியும் எந்த முடிவைப் பல்வேறு முறைகளால் தேடுகிறார்களோ, அந்த முடிவை நிர்ணயிப்பது சத்தியஜீவியம்.Supermind organises determinism

முடிவை முறை செய்வது சத்தியஜீவியம் எனலாம்.

அடுத்த நிலை ஜீவியம் Consciousness.முடிவை நிர்ணயம் செய்யும் சத்திய ஜீவியத்தை உற்பத்தி செய்வது "சித்' என்றும் consciousness எனவும் நாம் கூறும் ஜீவியம்.Mother is the organisation of this original consciousness.இந்த ஜீவியத்தின் முறை அன்னை என்பது. நாம் இதைச் செய்ய முடியாது.இதன் பலனைப் பெறமுடியும்.

 மனிதன் ஜீவியத்தை முறைப்படுத்தினால் அன்னையாகிறான்.அது தத்துவரீதியாக முடியும். இன்று பிரச்சினை அதில்லை.நாம் செய்யும் காரியங்கள் அன்னை செய்வதுபோல் பூர்த்தியாக நாம், நம்மால் முடிந்ததை முடித்துவிட்டு, அன்னையை அழைக்கவேண்டும்.

தம்பி - இந்த விளக்கம் திருப்தியாக இருக்கிறது.நம் நிலையில் என்ன வேண்டும் என்று தெரிகிறது.

அண்ணன் - இதை அறிந்தவர் - செய்பவரில்லை - உண்டா! எனக்குத் தெரியாது.எனக்குத் தெரிந்தவரை நான் அறியேன்.இதை அறிவதும், செய்வதும், நல்லது.

தொடரும்

யோக வாழ்க்கை

Life Divine இல் உள்ள கருத்துகளை வாழ்க்கையில் பொருத்தி எழுதிய 6000 கருத்துகளில் முதல் 2000 கருத்துகள் அடங்கிய நூல், "யோக வாழ்க்கை''

 

சிங்கம் - பாதுகாப்பு சின்னம்

அன்னை நமக்கு அளிப்பன அநேகம்.அவற்றுள் பாதுகாப்பு ஒன்று.நம்மைச் சுற்றி இயல்பாகக் காற்றிருப்பதைப்போல் பாதுகாப்புச் சூழலை அன்னை நினைவு நமக்குத் தருகிறது.வீட்டைவிட்டு வெளியே போனவர் பத்திரமாகத் திரும்ப வரவேண்டும் என பயப்படுபவருண்டு.அவரிடம் மற்றவர்கள், "தினமும் வெளியில் போனவர் திரும்புகிறார்.இப்படிப் பயந்தால் என்ன செய்ய முடியும்? நல்ல காலம் உள்ளவரை நல்லது நடக்கும்.இதெல்லாம் நம் கையில் இல்லை.பயப்படக்கூடாது'' என்பார்கள்.பயம் பல வகையின.வீட்டில் பெண்குழந்தைகளைத் தனியாக விட்டுவிட்டுப் பல நாள் யாரும் வெளியில் போகமாட்டார்கள்.அது நிஜமாகப் பயப்பட வேண்டியது. சிலருக்கு வீட்டில் எத்தனை பேரிருந்தாலும் பயம் பிடுங்கித் தின்னும். அது வேறு வகை.

அன்னை பாதுகாப்பை நேடிரயாகவும், பாதுகாப்பு மலர் மூலமாகவும் கொடுக்கிறார்கள்.மாநிலத் தலைநகரம்.வாடகை வீடு.தெருக் கதவு சரியில்லை.வேகமாகத் தள்ளினால் உடைந்து வழிவிடும்.தகப்பனார் பலநாள் வெளியூர் போகின்றவர்.தாயும் பெண் குழந்தைகளும் பயப்படுவது இயல்பு.அன்னையை அறிந்தபின் ஒரு பெண் அன்னையைப் பாதுகாப்பு கேட்டாள்.அவள் கனவில் அன்னை சிறு சிங்கக் குட்டிகள் பல எடுத்து வருவதாகக் கண்டாள். அது அந்த காலனி முழுவதும் சிங்கக்குட்டிகளால் நிரம்பப்பட்டதாகத் தெரிந்தது.அதுமுதல் வீட்டில் எவருக்கும் பழைய பயமில்லை.பயம் போய்விட்டது.

ஒரு பிரெஞ்சுச் சாதகரிடம் அன்னை, "உங்களுக்கு என்ன வேண்டும், இங்கு - அன்னை அறையில் - இல்லாதது இல்லை. சிங்கம் தவிர மற்ற அனைத்தும் உள'' என்றவர், வேறொரு சமயம் தம் அறையில் பல சிங்கங்கள் இருப்பதாகவும், அவை சிறுகுழந்தைகள் போல் சிரிப்பதாகவும் கூறினார் என்பது வாசகர் அறிந்தது.

சிங்கம் பாதுகாப்புச் சின்னம்.அது அன்னையின் பாதுகாப்புக்கு அடையாளம்.  

தரிசனம்

Life Divine நூலைப் படித்த பெண் தன் தலைவழியாக ஒளிப்பிரவாகம் புகுந்து உடலெல்லாம் பரவி, அணுக்களை அடைந்து தங்குவதைக் கண்டார்.அங்கு தங்கிய ஜோதி அவ்வணுக்களைக் கரைக்க ஆரம்பித்தபொழுது, உடலும், ஜீவனும் புல்லரித்தன.

அன்னை காலில் தங்கக் கொலுசு போட்டிருந்தார்.மேல் நாட்டுக்காரரானதால் அன்னையை ஏற்றுக்கொள்ள பலரால் முடியவில்லை.அப்படிப்பட்டவர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது அன்னை தம் பாதங்களை ஒரு ஸ்டூல் மீது எடுத்துவைத்தார்.கொலுசுகள் தெரியும்படி உட்கார்ந்தார்.பாதங்கள் பொன்மயமாக மாறின.பக்தர் சந்தேகம் தீர்ந்தது.பாதங்களை சிக்கெனப் பிடித்துக்கொண்டார்.இதுபோன்ற அனுபவங்கள் ஏராளம். அவற்றுள் ஒன்று.

"இன்று அன்னை ரூம் தரிசனம் சென்ற முறையைவிட அதிக powerful ஆக இருந்தது.உள்ளே நுழைந்தவுடன் force என்னுள்ளே மிகமிக வேகமாக நுழைந்ததை நன்றாகவே உணர முடிந்தது. அறையைவிட்டு வெளியே வரும்பொழுது ஏதோ கனவுலகத்தில் நடப்பதுபோல் தானாகவே நடந்து செல்லும் உணர்ச்சி ஏற்பட்டது. அன்னையின் sweet love யை இம்முறை உணர முடிந்தது. அவரறையில் couchல் அன்னை உட்கார்ந்திருப்பதை, கால்களை நீட்டி வெண்ணிற உடையில் இருப்பதைப்போன்ற நிதர்சனமான காட்சி இம்முறை கிடைத்தது.காலை 8மணிக்கு உள்ளிறங்கிய force இன்னும் தலையை அழுத்திக் கொண்டேயிருப்பதை உணரமுடிகிறது''.அன்னை பிறந்ததினத் தரிசனத்தின்போது அன்பர் பெற்ற அனுபவம் இது.

இதே அன்பருக்கு ஆபரேஷன் நடக்கும்பொழுது அன்னை அருகில் வெள்ளைப்புடவையுடுத்தி ஆபரேஷன் முடியும்வரை உட்கார்ந்திருந்ததைக் கண்டார்.book | by Dr. Radut