Skip to Content

பகவானுடைய இதர நூல்கள்

Life Divine, Concordance

கம்ப்யூட்டர் செய்யும் வித்தைகள், வினோதங்களை நாம் அறிவோம். Life Divine நூலை கம்ப்யூட்டரில் எடுத்து அதன் சொற்களை எண்ணச் சொன்னார்கள். எந்தச் சொல் எத்தனை முறை எந்த எந்தப் பக்கங்களில் வருகிறது என கம்ப்யூட்டர் கணக்கிட்டு சொல்லியது. அதை நூலாக Life Divine, Concordance, என வெளியிட்டிருக்கிறார்கள். இதைப் பார்த்தவர்கள் இந்தப் புத்தகம் எப்படிப் பயன்படும் என்று நினைக்கிறார்கள். எனக்குப் பயன்பட்ட முறைகளை எழுதுகிறேன். Index இல் கருத்துகளிருக்கும், சொற்களிருக்கா. Comprehensive preciseness என்ற சொல் எப்பொழுதோ படித்தது, எங்கு என நினைவில்லை. இது ஒரு முக்கியமான கருத்து. Precision என்றால் குறிப்பிட்ட இடத்தின் சிறப்பு, Comprehensive எனில் அனைத்தையும் உட்கொள்வது. இரண்டும் முரணான கருத்து.

முரணான கருத்து இணைந்து முழு முதற்கடவுளாகிறார்

என்பது ஸ்ரீ அரவிந்தம். கருத்து முக்கியமானது.Life Divine இல் படித்தது தெளிவாக நினைவிருக்கிறது. இக்கருத்தை விவாதிக்கும்பொழுது இச்சொற்கள் நினைவுக்கு வந்தன. சொன்னேன். கேட்டவர் அப்பக்கத்தைப் படிக்கப் பிரியப்பட்டார். எனக்குப் பக்கம் நினைவில்லை. எனது குறிப்புகளில்லை. Indexல் பார்க்க முடியாது. எப்பொழுதாவது படிக்கும்பொழுது அச்சொல் கண்ணில் பட்டால் உண்டு. இப்புத்தகத்தில் பார்த்தால் கிடைக்கும் என ஒருவர் கூறினார். அவரே புத்தகத்தை எடுத்து comprehensive என்ற சொல் 40 பக்கங்களில் வருகிறது என்றார். எனவே இந்த 40 பக்கங்களில் தேடினால், கிடைக்காது என்ற சொற்றொடர் கிடைத்துவிடும் என்பது முடியும் என்று தெரிந்தது. மேலும் preciseness என்ற சொல்லைப் பார்த்தார். அது ஒரே ஒருமுறை நூலில் வருகிறது. 324ஆம் பக்கத்திலுள்ளது. 324ஆம் பக்கத்தை மட்டும் பார்த்தால் தேடிய சொல் கிடைத்துவிட்டது. இதுவரை இப்படி ஒரு வழியுண்டு என்றறியாத நமக்கு இன்னூல் அளித்த வரம் இது.

கம்ப்யூட்டரில் அக்கரையுள்ளவர்க்கும், Life Divineஇல் ஆசையுள்ளவர்க்கும் இந்நூல் பெரிதும் பயன்படும். நான் பெற்ற பலன்கள் அதிகம், மேலே கூறியது முக்கியமான பலனாகும். இந்நூல் தரும் சில தகவல்கள்:-

  1. 4638 சொற்கள் நூலில் ஒரே ஒரு முறை பயன்பட்டுள்ளது. (அதில்preciseness என்பதும் ஒன்று!)
  2. ஒரே சொல் 31463 முறை பயன்பட்டுள்ளது.
  3. நூலில் 12,032 சொற்கள் பயன்படுகின்றன.
  4. நூலின் எல்லாப் பக்கங்களிலும் உள்ள மொத்த சொற்கள் 4,15,238 ஆகும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

உயர்ந்தது உனக்கு இனிமையானது என்று புரிந்துவிட்டால், இதுவரை நீ ஆர்வமாகத் தேடியவற்றைத் தேடியதுபோல் இன்று உயர்ந்ததைத் தேடினால் உன் மனம் இறைவனை அடையும்.

ஆர்வம் முழுமையானால் ஆண்டவன் எதிர் கொள்வான்.

 



book | by Dr. Radut