Skip to Content

அன்பர் கடிதம்

அன்னைக்கு வணக்கத்துடன் எழுதிக்கொள்ளும் கடிதம்.

சமீபத்தில் என் அண்ணன் மகன் எனக்கு அன்னையின் படம் (calender) அன்புடன் கொடுத்தார். அதை நான் என் திருச்சி வீட்டில் மாட்டிவைத்து அன்னையை வணங்கி வருகிறேன்.

  1. அன்னையின் படம் வந்தவேளை, நானும், விடுமுறைக்கு என் வீட்டிற்கு வந்த மகன், சிறுவயது பேரனுடன் மதியவேளை உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது உத்திரத்திலிருந்து ஒரு கனமான மரக்கட்டை இரும்புக்கொக்கியுடன் என் பேரன் சமீபத்தில் தடாலென்று விழுந்தது. Fan-மேல் பட்டு விழுந்ததால் என் பேரன் உட்கார்ந்து இருக்குமிடத்துக்கு வெகு அருகில் வீழ்ந்தது. அன்னையின் அருளால் என் பேரன் அடிபடாமல் தப்பித்தான். எங்களுக்கும் போன உயிர் திரும்பி வந்தது. இது அன்னையின் அருளேயன்றி வேறில்லை.
  2. என் மனைவி பேரிலும் என் பேரிலும் joint savings account ஆரம்பிக்க என் Indian Bank உத்யோகஸ்தரை கேட்டதற்கு அவர் முடியாது என்று முதல் நாள் சிறிதும் மரியாதை இன்றிச் சொல்லி விட்டார். எனக்கோ அந்த account ஐ எப்படியாவது ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணம். அன்று பூராவும் அன்னையை நினைத்துக்கொண்டு வேண்டிக்கொண்டிருந்தேன்.

மறுநாள் Bankக்கு சென்றபோது அதே அதிகாரி account ஆரம்பிக்க ஒத்துக்கொண்டதுடன் பரிவுடனும் பேசினார்.

அதற்கும் மறுநாள் நானும் என் மனைவியும் சென்று அந்த account ஐ ஆரம்பித்து வந்தோம். அந்த அதிகாரி எங்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்தது, அன்னையின் அருளேயன்றி வேறில்லை.

  1. என் மூத்த சகோதரி உடல்நிலை மிகவும் ஆபத்தாக உள்ளது என்று செய்திவந்து நாங்கள் திருவாரூர் வந்தபோது அவர்கள் உடல்நிலை தேறி வருவது கண்டு மிகவும் மன நிம்மதி அடைந்தோம். இதுவும் அன்னையின் அருள்.
  2. எனது நீண்ட நாள் வேண்டுதல் அதாவது என் மகன் இரண்டு வருடங்களாக வேலையின்றி இருக்கிறான். அவனுக்கு வேலை கிடைக்க நான் தங்களுக்கு வேண்டுதல் அனுப்பியுள்ளேன். அவனுக்கு நல்ல வேலை கிடைக்க அன்னையின் அருளை, மிகவும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

**********

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆசை மனிதனைத் தீவிரப்படுத்தும். அதுவே இறைவனிடமிருந்து மனிதனை எட்டவைத்து உள்ளது. நம் ஆசையை விட்டு, இறைவன் மீது ஆசைப்படுவது மனித சுபாவத்தை தெய்வ சுபாவமாக்குவதாகும். vital பிராணனில் இருந்து சைத்தியப் புருஷனை நோக்கிச் செல்வதாகும். ஆசை இறைவன் மீது எழுந்தால் சுபாவம் தெய்வ சுபாவமாகும்



book | by Dr. Radut