Skip to Content

சாவித்திரி

P. 9. But knew not why it was there not whence it came

ஏன் அது அங்கிருக்கிறது, எப்படி அங்கு வந்தது எனத் தெரியவில்லை

மேல் லோக ஜோதியைப் புவியின் இருளாக மாற்றிய லீலை மலர்ந்து மீண்டும் ஜோதி வெளிவருவதை அனுபவிக்க இறைவன் முயலும் நேரம் அது. ஒளிப்பொறி தன்னை உணராத நேரம். உணரவைப்பது அருள். அருளின் தீண்டுதலை அறியமுடியாத நிலை. அதைச் சாதிக்க ஜன்மமெடுத்தவள் சாவித்திரி. அவள் சூர்யபுத்ரி. இருளில் மறைந்த ஆத்மா சத்யவான். சத்யவானை இருளிலிருந்து மீட்க சாவித்திரி அவதரிக்கிறாள்.

அவள் வேதனை பெரியது. அவள் வேதனையே வாளாக மாறி அவளை வதைக்கிறது. மனித வாழ்வு இருளால் நிறைந்தது. மனிதன், சத்தியவான்போல், அவ்விருளில் மூழ்கியுள்ளான். அன்னை அருள் அவனைக் காப்பாற்ற முனைகிறது. அன்பன் அன்னை அருள் ஏற்று வேதனையான வாழ்வை ஆனந்தமாக மாற்ற முன்வந்தால், சாவித்திரி உலகில் அவதரித்த காரியம் பூர்த்தியாகும். உலகவாழ்வில் பொய்க்கு வலிமையுண்டு. பொய்யைப் பயன்படுத்தி பலன் பெறுவது இருள். பொய்யை வாழ்விலிருந்து விலக்கி அருளை நாடினால், அன்னையின் கை வலுப்படும்.

பொய் சொல்ல மறுப்பதும், பிறர் குறை கூற முடியாத நிலையும், தந்திரயுக்தியால் பலனை நாடவில்லை என உறுதி பூண்பதும், அருளை ஏற்கும் பாங்காகும். வேலைக்கு விண்ணப்பம் செய்தால், லஞ்சம், சிபார்சை நாடமுடியாதவன், அருளை மட்டும் நம்புபவன் அன்பன். அருளால் மட்டும் வேலை பெறுபவன் அன்னை உலகில் வளர உதவுபவன். வியாதி வந்தபொழுது அருளால் மட்டும் குணத்தை நாட மனம் விழையுமானால், அம்மனம் அன்னைக்குரியது. 

அன்னையின் அருள் வித்து பூவுலகில் பூத்தது என்றாகும். அதுவே சாவித்திரியின் பாரம், வேதனை.

  • தன் வேதனையை வாளாக மாற்றினாள்
  • தனிமையை நாடும் மனம் உலகத்தைத் தழுவும் இதயம்
  • தனிமையான தெய்வத்தின் கடமையைப் பகிர்ந்தாள்
  • பாரமான நெஞ்சை வேதனைக்குள்ளாக்கவில்லை
  • பூமாதேவியின் உணர்வற்ற தூக்கத்தின் மடி
  • மறதியில் மறைந்த ஜடம்
  • மனத்தின் எல்லையில் தன்னை மறந்து இழந்தாள்
  • கற்போல, நட்சத்திரம்போல கோணலான அமைதி
  • இரு லோகப் பிளவின் இடைப்பட்ட அமைதி
  • கவலை எட்டமுடியாத, பொறுப்பு தீண்ட முடியாத நிலை
  • நிழல் போன்ற நினைவின் அசைவு
  • பெருமூச்சிட்டு நெஞ்சைத் தீண்டினாள்
  • வலியின் சுவடு வலிய வந்து தீண்டியது
  • ஆழ்ந்து அமைதியுற்று நெடுநாளாகப் பழகியது
  • மனத்தைத் தூண்டும் சக்தி விலகியது
  • வாழ்வின் சேவகன் விருப்பமின்றி நின்றான்

**********



book | by Dr. Radut