Skip to Content

அஜெண்டா

Vol 3 - Page 213 Ramakrishna's experiences are in the vital

இராமகிருஷ்ணருடைய ஆன்மீக அனுபவங்கள் உணர்ச்சி பூர்வமானவை

 பணம், பதவியை பெறும் வழிகள் பல. பணத்தைப் பெற்றவுடன், பேர் அளவில் பெற்றபின் உலகம் முழுவதும் அவருடன் தொடர்பு கொள்கிறது. ஆனால் உலகம் அவரை அறியும். வெளிநாடு சென்று பட்டம்பெற்று தொழில் நுணுக்கமறிந்து, இந்தியாவந்து தொழிலாரம்பித்துச் செல்வம் பெற்றவர் இன்ஜினீயர். Stock exchangeஇல், லாட்டரியில் அதிர்ஷ்டத்தால் பெருஞ் செல்வம் பெற்றவர் சிலர். படிப்பு வக்கீல் தொழிலைக் கொடுத்தது. சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமாகச் சம்பாதித்துச் செல்வரானவர் ஒருவர். அரிசி கடை, ரைஸ்மில் மூலம் படிப்பும், பண்புமில்லாதவன் கோடிக்கணக்காகச் சம்பாதித்துவிட்டான். கடத்தலில் சம்பாதித்தவன் அடுத்தவன் என்றால், நாம் தொழிலாலும், படிப்பாலும், வியாபாரத்தாலும், கடத்தலாலும் பணம் பெறலாம் என்றறிகிறோம்.

புத்தர் ஞானம் பெற்றவர். மனத்தின் அறிவால் ஞானோதயம் ஏற்படுகிறது. சங்கரர் பெற்ற ஞானமும் அப்படியே. ஆண்டாளும், மீராவும் பக்தியால் முக்தியடைந்தவர். ஹடயோகம் செய்பவர் உடலைத் தூய்மை செய்து மோட்சம் பெறுபவர். இராமகிருஷ்ணர் படிக்காதவர். ஞானமில்லை. ஆசனம், பிராணாயாமம் அவருக்கு முக்கியமில்லை. அவர் ஆழ்ந்த பக்திமான். பணம் சம்பாதிக்க படிப்பு, தொழில், வியாபாரம் பயன்படுவது போல், மோட்சத்தை எந்த நிலையிலிருந்தும் - உடல், உணர்வு, மனம், ஆன்மா, சைத்தியபுருஷன் - அடையலாம். இராமகிருஷ்ணர் எல்லா யோகங்களையும் செய்தார்; இஸ்லாம், பௌத்தம், கிருத்துவம், ஹனுமான் பெற்ற சித்திகளைப் பெற அந்த முறைகளைக் கையாண்டார். ஹனுமான்போல் இராமன்மீது பக்தி செலுத்தியபொழுது தமக்கு வால் வளர்ந்ததாகவும் கூறுகிறார். பூரண யோகத்தை ஞானத்தால் மட்டுமோ, பக்தியால் மட்டுமோ, உணர்வால் மட்டுமோ, உடலால் மட்டுமோ செய்யமுடியாது. அனைத்தும் விழித்தெழுந்து ஆர்வத்துடன் யோகத்தை மேற்கொண்டால் மட்டுமே பூரணயோகத்தைச் செய்ய முடியும். பூரண யோகத்திற்குரிய அம்சங்கள்,

  • சத் மூன்றாகப் பிரிந்து அவற்றில் ஒன்று பிரம்மம் எனப்படும். இதுவரை செய்த யோகங்கள் அனைத்தும் அந்தப் பிரம்மத்துடன் முடிவடைகின்றன, ஸ்ரீ அரவிந்தர் அதற்கடுத்த சத்புருஷனையும், அதற்கும் ஆதியான பிரம்மத்தையும் அடைந்து, அங்கிருந்து கீழேயிறங்கி சத், சித், ஆனந்தம், சத்திய ஜீவியம், மனம், வாழ்வு வழியாக அவர் அனுபவம் உடலைத் தீண்டியது. மோட்சத்தை நாடுபவர்கள் அவர்கள் ஆன்மா மட்டும் பலன் பெறுவதை நாடுபவர்கள். பூரணயோகம் மேலே போகும் பாதை இதுவரை யோகிகள் சென்ற பாதையன்று. அது ஓர் ஆத்மா உயர்ந்த பாதை. பலன் ஒருவருக்கு மட்டுமேயுண்டு. பூரணயோகம், மனிதகுலத்தின் பிரதிநிதியாக யோகத்தை மேற்கொள்கிறது. ஒரு தொழிலாளி தன் திறமையால் மந்திரியானால் அது அவனுக்குப் பலன் தரும். தொழிற்சங்கப் பிரதியாக மந்திரியானால், தொழிலாளவர்க்கம் முழுவதும் பலன் பெறும்.
  • அன்னையும், ஸ்ரீ அரவிந்தருமே முதன்முறையாக சத்புருஷனைக் கடந்த பிரம்மத்தையடைந்தவர்கள். 1947க்கு முன்னால் சி.பி. இராமசுவாமி, ஏ. இராமசுவாமி போன்றவர் மத்தியசர்க்கார் மந்திரிகளாக இருந்தனர். 1946இல் நேரு பிரதமரானார். அவை பிரிட்டிஷ் சர்க்காரில் வைஸ்ராயால் நியமிக்கப்பட்ட பதவிகள். 1950இல் இந்தியா ஜனநாயக நாடானபின் நேரு இந்தியாவின் சுதந்திரப்பிரதமர் என்பதுபோல் 1947க்கு முன் எந்த உயர்பதவியும் சுதந்திரத்திற்குரியதன்று. ஸ்ரீ அரவிந்தர் யோகம் தொடங்கி சித்திபெறும் வரையில் சத்தியஜீவியத்தால் எவரும் யோகம் செய்யவில்லை என்பதால், ஆதியான பிரம்மத்தை அதுவரை எவரும் எட்ட வழியில்லை.
  • பெண் தானே சம்பாதிக்குமுன் தகப்பனார், கணவன், மகன் ஆதரவிலிருந்தாள். எவ்வளவு பணமிருந்தாலும் அது அவளுடையதன்று. தானே சம்பாதிக்க ஆரம்பித்தபின், தனக்கே சொத்துரிமை வந்த பின்னரே பெண்ணின் பணம் அவளுக்கேயுரியது. அதுபோல் சத்தியஜீவியம் வரும்வரை மனம், உணர்வு, உடலுக்கு ஆத்மானுபவமில்லை. ஆத்மா பெற்ற அனுபவத்தை (பெண் கணவனின் சொத்தை அனுபவிப்பதுபோல்) மனமோ, உணர்வோ, உடலோ பெறுகிறது. சத்தியஜீவியத்தால் பெற்ற ஆத்மானுபவம் கீழிறங்கி வரும்பொழுது மனம் பெற்றால் அது மனத்திற்குரியது. உணர்வு பெற்றால் உணர்வுக்குரியது. உடல்பெற்றால் உடலுக்குரியது. அந்நிலை ஸ்ரீ அரவிந்தர் வருமுன் யோகிகட்கில்லை. இராமகிருஷ்ணர் பெற்றவை உணர்வால் பக்திமார்க்கம் பெறுவதுபோல் பெறப்பட்டவை என்கிறார் அன்னை.

ஸ்ரீ அரவிந்த சுடர்

கல்லூரிப் படிப்பு, மூட நம்பிக்கையை ஒழிக்கும். அறிவால் ஏற்பட்ட உணர்வை, பண்பை மாற்றும்பொழுது அழிக்கலாம். ஜீவியம் மாறி நோக்கம் மாறினால் திருவுருமாற்றம் ஏற்படும்.

கண்ணோட்டம் மாறினால் ஜடமும் திருவுருமாறும்.

Comments

34-தொழிலாü-தொழிலாளி46-ஆதரவி-ர

34-தொழிலாü-தொழிலாளி

46-ஆதரவி-ருந்தாள்-ஆதரவிலிருந்தாள்



book | by Dr. Radut