Skip to Content

லைப் டிவைன் - கருத்து

P. 7. An objective method of analysis or a subjective method of synthesis leads to unity

 

விஞ்ஞான ஆராய்ச்சியாலும், நிஷ்டையாலும் பிரம்மத்தைக் காணமுடியும்

இன்று ஜடம் என்பது சக்தி என விஞ்ஞானம் கண்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகட்கு முன் உபநிஷதம் சர்வமும் சக்தி எனக் கண்டது. விஞ்ஞானம் மேற்கொண்ட முறை ஆராய்ச்சி, உபநிஷதம் கைக்கொண்ட முறை நிஷ்டை - முடிவு ஒன்றேயாகும்.

முனிவர் காட்டில் தவம் செய்து பெறும் பலனை, வீட்டில் பெண் கடமையை நிறைவேற்றிப் பெறமுடியும் என்பது நம் மரபு. ஒரே திறமையுள்ள பலர் பல தொழில்களை மேற்கொண்டாலும், முடிவில் பலன் என்று பார்க்கும்பொழுது, முறை வேறுபட்டாலும், பலன் ஒன்றாக இருக்கிறது. பலன் நம் திறமைக்கு வருவது. திறமை சமமானால் பலனும் சமமாக இருக்கும்.

கணவனுக்கும், மனைவிக்கும் ஒரே திறமையுள்ளது உண்மையானால், அவன் வேலை செய்து சம்பாதிப்பதும், மனைவி வீட்டை நிர்வாகம் செய்து பெறும் பலனும் சமமானவையே.

ஆராய்ச்சி மேலும் மேலும் பகுத்துணர்கிறது, (infinitesimal) அணுவைத் தேடி ஆராய்ச்சி செய்கிறது. நிஷ்டை உள்ளே போய் அனந்தனை (infinity) நாடுகிறது. தத்துவப்படி அணுவும், அனந்தனும் ஒன்றேயல்லவா?

Life Divine தத்துவம், Savitri காவியம். ஆனால் அவையிரண்டும் கூறுவது ஒன்றே. உரைநடையான தத்துவமும் வியமான செய்யுளும் நமக்கு முடிவாக அளிப்பது ஸ்ரீ அரவிந்தம். 

ஸ்ரீ அரவிந்தர் பேசவேயில்லை. மிகக் குறைவு. Silent God என்று உடனிருந்தவர் கூறுகிறார். எவரையும் கண்டிப்பதில்லை. எதையும் வேண்டும் எனக் கேட்பதில்லை. வீடு அசுத்தமாகயிருக்கும். அவர் யோகத்திற்கு எந்த முறையும் தேவையில்லை என நிராகரித்து விட்டார். எவரையும் நம்பி எதையும் செய்யவில்லை. பணம் எங்கிருந்து வரும் எனத் தெரியாமல் புதுவைக்கு வந்துவிட்டார்.

அன்னை நாள் முழுவதும் பேசுவார். உடனிருப்பவர்கட்கெல்லாம் உத்தரவிட்டபடியிருப்பார். கேள்விகட்குப் பதிலளித்தபடியிருப்பார். எல்லோருக்கும் கட்டுப்பாடு விதித்தார். விதித்த கட்டுப்பாட்டை நிர்ணயமாகப் பின்பற்றும்படி வற்புறுத்துவார். தனக்குத் தேவையான பொருள்களைப் பல மாதம், சில சமயங்களில் ஒரு வருஷம் முன்னதாகத் தருவித்து வைத்துக்கொள்வார். தம்மைச் சுற்றி ஒரு பெரிய ஸ்தாபனத்தை உருவாக்குகியவர். சுத்தம் என்பதைத் தெய்வமாகக் கருதிப் பின்பற்றினார். ஸ்ரீ அரவிந்தரிடம் வரும்பொழுது பெரும் பணத்துடன் வந்தார்.

  • ஸ்ரீ அரவிந்தருடைய பாதையும், அன்னையின் பாதையும், வேறு வேறு நேர் எதிரானவை.
  • ஆனால் அவை இரண்டும் அளிப்பது ஸ்ரீ அரவிந்தமே.



book | by Dr. Radut