Skip to Content

யோக வாழ்க்கை விளக்கம் IV

கர்மயோகி

 

611) பெரிய மகான்களை அண்டியிருந்தவர்கள் தங்கள் குறைகளைப்பற்றி, "நான் பெரியவர் திருவடியிலிருந்தேன். ஒன்றிரண்டு கறுப்புப் புள்ளிகள் இருக்கலாம்," என்பார்கள். உண்மை வேறு. அருகிலிருப்பதால் மனிதன் மாறுவதில்லை. அதையே வேறு வகையாகச் சொல்லலாம், "பெரியவர் பாதத்திலேயே இருந்ததால், ஓரிரு துளி ஒளி உற்பத்தியாகியுள்ளது" எனலாம்.

சிறு துளியைப் பெரு வெள்ளமாக்குபவர்கள்.

*************

அன்னையை நாடிவந்த சாதகர்கள், பக்தர் அனைவரும் பூர்வ ஜென்மங்களில் அன்னையுடனிருந்தவர்கள். உலகம் சுவர்க்கமாகும் பொழுது, நாங்களும் உங்களுடனிருக்க வேண்டும் என அந்த ஜன்மங்களில் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தவர்கள். அன்று அன்னை அவர்கட்குக் கொடுத்த வரம் இன்று அவர்கள் வாழ்வில் பலித்தது. அவர்கள் கேட்டதை மறந்துவிட்டார்கள். கிடைத்தது பெரியது என்று இருந்துவிட்டார்கள். அதனால் இந்த ஜன்மத்தில் அன்னையுடனிருந்தால் போதும், வேறெதுவும் வேண்டாம், யோகமும் வேண்டாம் என இருந்துவிட்டார்கள் என அன்னை கூறுகிறார். அன்னையின் அருகிலிருக்க என்ன தவம் செய்ய வேண்டும் என்பதைச் சோதனை செய்துபார்த்தால் தெரியும். அன்னை வசித்த அறையையும் இன்று வருஷத்தில் இருமுறைதான் திறக்கிறார்கள். பகவான் வசித்த அறையை இன்று தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கின்றார்கள். அவர் சமாதியானபின் நெடுநாள்வரை அது போலில்லை. பல வருஷம் கழித்து சிலரை அன்னையே பாஸில் கையெழுத்திட்டு அனுமதிப்பார்கள். பல ஜென்மங்கள் பிரார்த்தனை பலித்து இந்த ஜென்மத்தில் அது கிடைக்க வேண்டும். கிடைத்ததால் நம் நிலையிலிருந்து உயரமுடியும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. உயருவது, நம் முயற்சி, சுபாவம், அம்சம், அதிர்ஷ்டத்தைப் பொருத்தது.

பெரிய இடங்களில் அருகிலிருப்பதன் பலன்கள் என்ன? அதனால் மட்டும் சில பலன்களை ஏன் பெறமுடியாது? என்பதன் சட்டங்களைப் பொதுவாகவும், குறிப்பாகவும் எழுதுகிறேன்.

 1. பெரிய இடத்திற்கு அருகில் வர ஏதாவது ஒரு வகையில் பெரிய அம்சமின்றி முடியாது.
 2. வந்தபின் தானும் பெரியதாக உயர்வது என்பது, வந்ததால் மட்டும் முடியாது.
 3. வந்தபின் முயற்சியாலோ, அம்சத்தாலோ, அதிர்ஷ்டத்தாலோ, சுபாவத்தாலோ, சூழலாலோ உயரமுடியும் என்பது உண்மை என்றாலும், அதற்கு உண்டான பலன் மட்டுமே வரும்.முயற்சியால் முழுப் பலன் வரும், ஓர் அம்சத்தால் எல்லாப் பலன்களுமோ, அடுத்த பலனோ வாராது.
 4. அருகிலிருப்பது வாய்ப்பை அளிக்கிறது.சுபாவம் எந்த அளவுக்கு உயரலாம், முயன்றால் உயரலாம் என்பதை நிர்ணயிக்கும். முயற்சி இருக்கும் வாய்ப்பைப் பூர்த்தி செய்யும். சூழல் இருப்பதை ஆதரிக்கும். அதிர்ஷ்டமிருந்தால் அடுத்த ஜன்மத்தில் பூர்த்தியாக வேண்டியது இப்பொழுதே பூர்த்தியாகும்.
 5. வாய்ப்புக்கு எதிரான குணங்களிருந்து அதை வலியுறுத்தினால் அதுவே மேலே போவதைத் தடுக்கும். இருப்பதையும் அழிக்கும்.
 6. Skill, attitude நோக்கம், motive ஆழ்ந்த நோக்கம், opinion அபிப்பிராயம், values பண்புகள் வாய்ப்பை அனுபவிக்கும் அளவை நிர்ணயிக்கும்.

நம் நாட்டு சுதந்திரப் போராட்டத்திலும், அரசியலிலும், பொதுவாழ்விலும் இருந்த சிலர் பெற்ற வாய்ப்புகளையும், அதனால் உயர்ந்ததையும், அதனாலும் உயரமுடியாததையும் மேற்சொன்ன சட்டங்களை விளக்கும் வாயிலாக எழுதுகிறேன்.

 • மோதிலால் நேருவின் மூதாதையர் மொகலாயச் சக்ரவர்த்திகட்குப் துவ்பாஷிகளாக (translators) இருந்து பெரும் செல்வாக்கும், செல்வமும் பெற்றனர். மோதிலால் "இந்தியா சுதந்திரம் பெற்றால் நானே முதல் பிரசிடெண்ட்" என்று அடிக்கடி சொல்வார். Federal court பெடரல் கோர்ட்டிலும், பிரிவீ கௌன்சிலிலும் வக்கீலாக இருந்த பெருஞ்செல்வர். நேர்மைக்கும், திறமைக்கும் அவர் போன்றவரை தாம் பார்த்ததில்லை என நேரு சொல்வார். அவருடைய சந்ததி 3 தலைமுறைகளாகப் பிரதமராக இருந்தார்கள். மகாத்மா காலடியில் நேரு இருந்ததால், அவர் நேருவைத் தலைவராகத் தயார் செய்தார்.
 • முதன்மந்திரி, பிரதம மந்திரி செக்ரடேரியட்டில் குமாஸ்தாவானாலும் செல்வாக்கு அதிகம். ஆனால் குமாஸ்தாவின் சர்வீஸ் நிலை மாறாது.
 • 8-ஆம் வகுப்பு படித்த V.P. மேனன் திறமையாலும், ஆங்கில அறிவாலும், குமாஸ்தாவாகி, மத்திய சர்க்கார் உள்துறை காரியதரிசியாகி, கவர்னராக ரிடையராகி, சுதந்திரத்தைப்பற்றி 10 வால்யூம் எழுதினார்.
 • எவ்வளவு பெரிய நூலகத்திலும் புத்தகங்களைத் துடைத்து வைப்பவருக்கு அறிவு வருவதில்லை.
 • வேப்பூர் திருடர்களை திருத்த அவர்களுக்குத் தறி கற்றுக்கொடுத்து, படிக்க வைத்ததில் ஒரு பையன் M.A. பாஸ் செய்து மத்திய சர்க்கார் அதிகாரியானான்.
 • விதவையாகி இட்லி சுட்டு விற்றவர் மகன் SSLC பாஸ் செய்து தாலுக்காபீஸ் குமாஸ்தாவாகி, திறமை, நேர்மை, ஆங்கில அறிவால் D.R.O. வாக ரிடையரானான்.
 • மத்திய சர்க்கார் மந்திரியாக நெடுநாள் இருந்து, கவர்னராக ஓய்வு பெற்றவருடைய ஒரே மகன், திறமை, பொறுப்பு இல்லாததால் T.V. காபினட் செய்து விற்கமுடியாமல், வீடு கட்டும் காண்ட்ராக்டராக இருக்கிறான்.
 • புத்திசாலியான வேலைக்காரி மகன் தாய் வேலை செய்த வீட்டின் உதவியால் படித்து இன்ஜீனீயரானான்.
 • ரோடு மேஸ்திரி மகன் 60 ஆண்டுக்குமுன் M.A. படித்தும் 10 ஆண்டு வேலையில்லாமலிருந்து பல்கலைக்கழக ஆசிரியராகி, இலட்சியச் சேவையால் பேராசிரியராகி, வேலையை இழந்து, உயிருக்கு ஆபத்து வந்து, நேரிடையாய் MLCஆக அழைக்கப்பட்டும் பயத்தால் இழந்து பேராசிரியராகவே ஓய்வு பெற்றார்.
 • ஞானசித்தி பெற்றவருக்குச் சமையல் செய்தவர், சித்திபெற்றவர் இறந்தபின் சமஸ்கிருத ஸ்லோகம் உள்üருந்து எழுந்ததால் நாட்டில் பிரபலமானார்.
 • இங்கிலாந்தில் cable man ரயில்வே கூலியாக இருந்தவர் தென்னிந்திய இரயில்வேயில் ஜெனரல் மானேஜரானார்.
 • அந்தமான் ஜெயில் சூப்ரரெண்ட்டின் மகன் சென்னையில் கல்லூரியில் பயிலும்பொழுது சுதந்திரப் போராட்டத்தில் மாணவர் தலைவனாகி, அந்தமான் M.P.யாகி, மத்திய மந்திரியானார்.
 • ஜமீன்தார் மகன் வக்கீலுக்குப் படித்துவிட்டு முதன்மந்திரி ஆதரவால் M.P. யாகி, பேச்சுத்திறமையால் மத்திய சர்க்கார் மந்திரியாகி, கவர்னரானார்.
 • இன்கம்டாக்ஸ் ஆபீஸ் குமாஸ்தா வேலையை இராஜினாமா செய்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்து ஜெயிலுக்குப்போய், தம் கட்சி சிதறியதால் தம் வாழ்விலும் சிதறி, பணக்காரர் உதவியை வாழ நாடி, சொரணையையும் இழந்து, எந்தப் பதவியும் பெறாமல், போராடி இறந்தார்.
 • கீரீஸில் கவி ஒருவருடைய வேலைக்காரிக்கு ஜுரம் வந்தபொழுது கவியின் செய்யுள்களை மனப்பாடமாக ஒப்பித்தாள்.
 • அபரிமிதமான திறமைசாலி தாம் சேர்ந்த கட்சி முன்னுக்கு வராததால், அதன் அகில இந்தியத் தலைவராகி, M.P.  M.L.A ,எதிர்கட்சித் தலைவராகி, பிறரால் முதன் மந்திரி பதவிக்குரியவர் எனப் போற்றப்பட்டார்
 • நேர்மையான கணக்குப்பிள்ளைக்கு 200 ஏக்கர் முதலாளி தாம் சென்னைக்குப் போவதால், நிலத்தை அவரிடம் கொடுத்து, இதில் சம்பாதித்து, இதன் கிரயத்தை எனக்கு மெதுவாகக் கொடு என்றார்.
 • M.A. பட்டதாரிக்கு 85ரூபாய் சம்பளமுள்ள நாளில் சிலோனில் SSLC படித்து சரளமாக ஆங்கிலம் பேசுபவர் சென்னைவந்து நூல் விற்கும் கம்பனியில் சேல்ஸ் மானேஜராக ரூ.1000/- சம்பளம் பெற்றார்.
 • LMP டாக்டர் இலட்சியத்தால் சிம்ஸன் கம்பனி டாக்டராகி, ஆராய்ச்சியால் industrial medicine தொழிலுக்குரிய வைத்தியத் துறையில் சிறந்து ஆசிய மகாநாட்டுக்குத் தலைவரானார்.
 • சாதுரியமான எஸ்டேட் கணக்குப்பிள்ளை ஊரறியத் திருடினாலும், முதலாளியின் நம்பிக்கையை இழக்காமல் முதலாளியைவிட அதிகம் திருடிச் சேர்த்துவிட்டான்.
 • பிரபலமான முதன் மந்திரிக்கு மனைவி என்பதால் தாமும் கொஞ்சநாள் முதன் மந்திரியானார்.
 • பெரிய குடும்பத்துப் பையன் அட்டண்டர் வேலைக்குப் போனாலும் பெரிய முதலாளிகளால் அவர் இனிமைக்காக ஆதரிக்கப்பட்டு, துரோகத்திற்காக விலக்கப்பட்டு அரை அங்குல முன்னேற்றமில்லாமல் ஓய்வு பெற்றார்.
 • அளவுகடந்த உழைப்பு, திறமையும் உள்ளவர்களுக்கு வாய்ப்பு என்று வந்தபொழுது அவர்கள் தொழிலில் 30 வருஷமாக இழந்த அனைத்தையும் 5,6 வருஷங்களில் பெற்று தலைமைப் பதவிக்கு வந்து, முதன்மையாக முன்னணிக்கு வந்தனர்.
 • வண்டிக்காரன் மகன், பள்ளிக்கூடம் போகாதவன், தேசபக்தருடனிருந்ததால் தவறாக ஜெயிலுக்குப் போய், அங்குப் படிக்கக் கற்றுக்கொண்டு, பேச்சாளனாகி, தமிழ்நாடு முழுவதும் பிரபலமாகி, MLCயாகி, பெரிய தொழிலதிபர்களும் நாடி வரும் நிலைமை ஏற்பட்டு சாஸ்திரி, இந்திராவையும் சந்தித்துப் பேசும் அளவுக்கு உயர்ந்து நின்றான். திறமையும், உழைப்பும், வாய்ப்பால் பலன் தந்தன
 • நெடுநாள் தொண்டு பலன் தந்து கட்சியின் இரண்டாம் நிலைத் தலைமையிலேயே இருந்து, படிப்பின் சிறப்பாலும், அனுபவ முதிர்ச்சியாலும், இனி தமக்கு எதிர்காலமில்லை, M.P. எலக்ஷன் ஜெயிக்க முடியாது என்று நிற்காதவருக்கு பிரதமமந்திரி பதவி மெஜாரிட்டி கட்சித் தலைமைக்கு வந்து, பிரதமராக இருந்தார் ராவ்.
 • தகப்பனாரின் முழுத் திறமையுடன், பரம்பரையின் முழுப் பலத்துடன், M.P. பதவியும் நாடாமலிருந்தவருக்குப் பிரதமமந்திரி பதவி தேடிவந்தது.
 • பிரதமர் பதவி வேண்டியதில்லை, விமானம் ஓட்டுகிறேன் என்றவர் மீது பிரதமர் பதவி திணிக்கப்படும் அளவு பரம்பரைத் திறமை நிறைந்திருந்தது.
 • ஜமீன் கணக்குப்பிள்ளை மகன் வக்கீலாகி தேசசேவை செய்து ஜமீன்தார் பெற்ற முதல் மந்திரி பதவியைப் பெற்று, கவர்னர் ஜெனரலாக உயர முடிந்தது.
 • வேதம், உபநிஷதங்களை ஊன்றிப் பயின்றால், ஆன்மீகப் பலன் உண்டு.ஆன்மீகப் பலன் பெறமுடியாதவர்க்கு ஆங்கிலம் அற்பு தமாகத் தெரிந்ததால் உலகப் புகழ் வந்து, ஜனாதிபதியாக்கியது.
 • இளம்விதவை பெற்ற பிள்ளைகள் அறிவாலும், அருளாலும் உலகப்புகழ் பெற வந்த வாய்ப்பை வெறுத்து ஒதுக்கி பிறப்புக்குரிய துரோகத்தைப் பாராட்டி, துரோகத்தின் பரிசைப்பெற்று தங்கள் பெரும் ஸ்தாபனங்களில் தலைமைப் பதவி பெறும் வாய்ப்பையும் பொறுப்பற்ற வெறுப்பால் தவறவிட்டு, அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பை அடுத்தவர்கள் பெற்றதைப் பார்த்தும் அறிய முடியாமல், வேதனைப்படுபவர் இருவர்.
 • நதி தீரத்தில் கருடன் காருந்து விழுந்த எலியைப் பெண் குழந்தையாக்கி வளர்த்த ரிஷி, அவளுக்குச் சூரியன், இமவான், சந்திரன் போன்ற வரன்களை அளித்தபொழுது, அவள் அவற்றை எல்லாம் மறுத்து மீண்டும் எலியாகி, எலியை மணந்தாள்.
 • கல்கத்தா ஹைகோர்ட் பிரதம நீதிபதி, கல்கத்தா பல்கலைக்கழகத் துணைவேந்தராகி, நாட்டில் அவர் கண்ணில்பட்ட திறமைவாய்ந்த இளைஞர்களை முன்னுக்குக் கொண்டுவந்தார்.அவர் மகன் அவர் பதவிக்கு வந்து, மத்திய மந்திரியானான்.அன்னையைத் தரிசிக்க அவர் வந்தபொழுது "இந்தியாவை உச்சகட்டத்திற்குக் கொண்டுவரக் கூடியவர் இவர்'' என்றார் அன்னை.
 • செல்வரும், தேசபக்தரானவருமான ஒருவரின் ஒரே மகன் திறமை, நாணயம், நல்ல குணமற்றவன். டாக்டரை மணந்து ஹைகோர்ட் வக்கீலாகி கேஸே வாராமல், வாய் சவடாலுடன் காலம் கழித்து வாழ்க்கையை முடித்தான்.
பெரிய இடத்திலிருப்பது வாய்ப்பு. வாய்ப்பு தானே பலன் தாராது. ஏதோ ஒருமுறை தானே பலனும் தரும். ரஷிய அரண்மனையில் barmaid வேலையாக இருந்த காதரீனை அவள் இனிமைக்காகப் போற்றாதவரில்லை. Peter the Great பீட்டருக்கு அவள் மேல் பிரியம். பீட்டருக்கு அளவு கடந்த கோபம் வந்தால் அடுத்த சில நாள் அதற்கு ஆயிரம் பலியுண்டு. அவனுக்குக் கோபம் எழும் அறிகுறிகளை காதரீன் கண்டவுடன் அவன் தலையைத் தன் மார்பில் பொருத்தி இதமாக வருடிக்கொடுத்து கோபத்தைக் கரைப்பாள். சக்ரவர்த்தியின் கோபம் வேலைக்காரியின் இனிமைக்கு அடிமையாயிற்று. காதரீன் அவன் மனைவியானாள். வாய்ப்பு பெரியது. அது பலன் தர பலன் பெறும் அம்சங்கள் - திறமை, பண்பு, அறிவு, நாணயம், உழைப்பு, அம்சம் - தேவை. அம்சமிருந்தால் அதுவே ஏதோ ஒரு சமயம் பலன் தரும். அம்சம் பலன் தர தேவையான மற்றவற்றைக் கொடுத்தால் பலன் வருகிறது. இல்லையெனில் உயர்ந்த இடத்தின் தாழ்ந்த மனிதனாக இருக்க வேண்டியிருக்கிறது. வாய்ப்புப் பலனாகப் பழுத்துப் பூர்த்தியாவது நம்மைப் பொறுத்தும், மற்ற இதர விஷயங்களைப் பொறுத்துமுள்ளது. படிக்காத தொண்டர் பகவான் ஸ்ரீ அரவிந்தர் திருவடியில் வாழ்வைக் கழிப்பதே பாக்கியம். அதனால் மட்டும் இருள் அகலாது. இருள் அகல ஞானம், பக்தி, சேவை, அடக்கம், சரணாகதி தேவை. அவையில்லாவிட்டாலும் ஓரிரு புள்ளியாக ஒளியை அருள் கொடுக்கிறது. அறியாமையால் செயல்படும் அகந்தை அதை மாற்றி ஓரிரு புள்ளி தவிர மீதி அனைத்தும் ஒளி என்று கொள்கிறது.

*********

612) புதுமை உள்ளே எழுவதால், புத்துணர்ச்சி பொங்கி எழுகிறது.

Freshness என்ற கருத்தைத் தமிழில் இங்கு புதுமை என்று குறிப்பிடுகிறேன். Freshness is indicated by a surge of energy  என்று ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மேற்சொன்னவாறு மொழிபெயர்த்தேன். சிறுவயது வளரும் பருவமாதலால் காலையில் எழுந்தவுடன் உடலும், உணர்வும், மனமும், புத்துணர்வால் நிரம்பியிருக்கும். வயதானால் அது இருக்காது. புதுக் கருத்து மனத்திற்கும், புதிய நட்பு உணர்வுக்கும், புதிய காரியம் செயலுக்கும் புத்துணர்வை அளிக்கும். புதிய நோக்கம் ஏற்பட்டால், எல்லாச் சொற்களிலும் புத்துணர்வு ஏற்படும். புதிய இலட்சியத்தை ஏற்றால், புது வாழ்வு மலர வேண்டிய தெம்பு நிரந்தரமாக எழுந்தபடியிருக்கும்.

செல்வம் வளமாக உள்ள குடும்பங்கüல் உள்ளவர் உடலில் ஒரு செழிப்புத் தெரியும். மனநிறைவு அதனால் ஏற்படும் (security) பாதுகாப்புணர்வு, தெம்பு மனத்தை நிரப்பி வழிந்து உடலில் வெளிப் படுவதால் தோலிலும், சதையிலும் மினுமினுப்பு இருக்கும். பதவியிலுள்ளவர்களுக்கும் இது ஓரளவு இருக்கும். குடும்பத்தில் அனைவரும் பிரியமானவர்கள், கடுஞ்சொல் காதில் விழாது, எதிலும் இனிமை நிறைந்துள்ளது என்ற குடும்பத்து குழந்தைகள் முகத்தில் அன்பால் இதே செழிப்பு தெரியும். பிறவியில் புத்திசாலித்தனமிருந்து, படிப்பால் அறிவு அதிகமாகப் பெற்றவர்க்கு முகம் அறிவால் பிரகாசமாக இருக்கும். பூஜை, பக்தி போன்றவை, ஞானம் கொடுக்கும் தேஜஸை முகத்தில் வெளிப்படுத்தும். உலகில் பலருக்கு இல்லாதது, சிலருக்குக் கிடைப்பதால், அவர்களைப் பொறுத்தவரை புதுமை இப்பலனை அளிக்கிறது. இதுவரை உலகிலில்லாத உணர்வின் செழிப்பை, ஜீவியத்தின் நிறைவாக அன்னை அளிப்பதால், அன்னையை உணர்விலோ, ஜீவியத்திலோ ஏற்றால், உள்ளமும், உணர்வும் புத்துணர்ச்சி பெறும்.

அன்னையை முழுமையாக ஜீவன் ஏற்ற நிலையில் நமக்குக் கிடைப்பது உலகில் இன்று உச்சகட்டத்திலுள்ளது. அன்னை அதைத் தவறாது அனைவருக்கும் கொடுக்கிறார். நம்மால் பெற முடியாமற் போகிறது. பெறுவதற்குரிய சாதனங்கள் அநேகம். அவற்றுள் புத்துணர்ச்சியும், புதுமை என மேலே குறிப்பிடுவதும் ஒன்று. பொதுவாக உள்ளே எழும் புத்துணர்ச்சி அன்னை உள்ளே நிறைந்திருந்தால் அது அன்னையின் புத்துணர்ச்சியாக (Mother's fresh energy) இருக்கும். இதை இயல்பாகச் செய்வது சமர்ப்பணம். சமர்ப்பணம் வாழ்வை அன்னை வாழ்வாகத் துலக்கப் பயன்படுத்தும் வழிகளில் புத்துணர்ச்சியும் ஒன்று.

அதற்குண்டான கருவியில்லாமல் மரத்தில் துவாரம் போட முனைவது சிரமம். துவாரம் போடும் கருவி (drill) பெருமுயற்சியை எளிமையாக்குகிறது.(powerdrill) மின்சாரத் துரப்பணம் மேலும் எளிதாக்குகிறது. சாதாரண மனிதனுக்குப் புத்துணர்ச்சிக் கருவிபோல. அன்னை கருவிக்கு மின்சாரசக்தி கொடுப்பதுபோல் ஆன்மீகச் சக்தியை அளிக்கிறார்.

பொதுவாகப் புதுமை உணர்வு பெற மனம் கடந்ததைக் கருதக் கூடாது. தெம்பு அபரிமிதமாக இருக்கவேண்டும். எதையும் புதிய நோக்கோடு புரிந்துகொள்ள வேண்டும். புதிய மனப்பான்மையை நாட வேண்டும். இரண்டு பரமவைரிகள். ஒருவர் பெயரை அடுத்தவர் கேட்கப் பிரியப்படமாட்டார். அவர்களில் ஒருவரிடம் இந்தக் கருத்தைத் தெரிவித்து, இதனுள் பெரிய சக்தியுள்ளது. முழுவதும் புதியதாக மனம் மாறிப் புதுமை உணர்வு எழுந்தால் அதன் மூலம் எழும் சக்தியால் எதையும் சாதிக்கலாம் எனக் கூறியதை அவர் ஏற்று எதிர்ப்புணர்வை மாற்றி நட்புணர்வாக்கச் சம்மதித்த சமயம், ஆஸ்பத்திரியில் ஒருவர் சேர்ந்தார். அவருக்கு முக்கியச் சிகிச்சை நேரம் தியான அறை பல்பு நின்றுவிட்டது. அன்னை சம்பந்தமான புத்தகத்தைப் பிரித்துப் பார்த்ததில் மரணம் இயல்பானது என்றிருந்தது. மறுநாள் அவருடலில் சூட்சுமப்பார்வைக்கு மட்டும் தெரியுமாறு கறுப்பு படிந்திருந்தது. நின்ற பல்ப், புத்தகம் சொல்வது, படிந்த கறுப்பு அத்தனையையும் மாற்றும் சக்தி புத்துணர்வுக்குண்டு. மனம் மாறியது. புத்துணர்வு ஒரு கீறல் போல் எழுந்தது. அவர் போய்விட்டார். அடுத்த அரை மணியில் அவருடம்பில் கருமையைக் கண்டவர் ஆஸ்பத்திரியிருந்து வந்து, கருமை விலகுகிறது, பெரும்பாலும் விலவிவிட்டது என்றார். மறுநாள் காலை முழுவதும் விலகியது. இது புத்துணர்வின் சக்தி.

*********

613) நோக்கம் என்பதே மனிதனைக் குறிக்கிறது.ஞானம், பக்தி, செயல் சேருமிடத்தில் மனிதனுக்கு நோக்கம் பிறக்கின்றது என்பதால் பகவத்கீதை நோக்கத்தைச் சரணம் செய்யச் சொல்கிறது.

நோக்கமே மனிதன்.

ஒரே சந்தர்ப்பத்திலிருந்து இருவர் பத்து வருஷம் கழித்து உயர்ந்தும், தாழ்ந்துமிருந்தால் அவர்கள் நோக்கம் உயர்ந்தும், தாழ்ந்துமிருக்கும். உழைத்து வாழவேண்டும் என்ற நோக்கமுடையவன் உயர்வதையும், யார் உதவியாவது பெற்று வாழ வேண்டுமென்பவன் இருக்கும் நிலையிலிருந்து இறங்குவதையும் காண்கிறோம்.

உலகம் இயங்குவது ஒரு சட்டப்படி. உயர்வதும் இன்னொரு சட்டப்படி. உயர்வதற்குரிய கருவிகள், சாதனங்கள் பல. முதற்கருவி உழைப்பு. Skill திறமையால் உழைப்பு உயர்வதால் திறமையான உழைப்பு, வெறும் உழைப்பைவிட உயர்ந்தது. இவையிரண்டும் உடலைச் சார்ந்தவை. உற்சாகமிருந்தால் உழைப்புக்கு அதிக சக்தியுண்டு. உற்சாகத்திற்குப் பல நிலைகளுண்டு. அதை நிர்ணயிப்பது பலன். பெரிய பலன் அதிக உற்சாகத்தையும், சிறிய பலன் சிறிய உற்சாகத்தையும் அளிக்கும். எந்தப் பலனை நாடுகிறோம் என்பது நாமறிந்ததைப் பொருத்தது. அறிவு அதிகமானால், பலன் அதிகமாகும். அனுபவம் அறிவை உயர்த்தும். அறிவு அனுபவப்பட்டால், அபிப்பிராயம் ஏற்படும். ஏற்கனவே படிப்புக்குச் செலவு செய்வது வீண் என்ற அபிப்பிராயம் கிராமத்திலிருந்தது. இன்று படிப்பு முக்கியம் என்ற அபிப்பிராயம் இருக்கிறது. அபிப்பிராயம் அறிவு நிலையை உயர்த்தும். அபிப்பிராயமிருந்தால் உணர்வு அதிகப் பலனை நாடி உழைப்பின் திறன் அதிகமாகச் சாதிக்கும். அபிப்பிராயத்திற்கும் சக்தியை அளிப்பது உணர்வு. உணர்வு ஏற்றுக்கொண்ட அபிப்பிராயம் அதிகமாகப் பலிக்கும். உணர்வு ஏற்றுக்கொண்ட அபிப்பிராயத்தை நோக்கம் என்கிறோம். உழைப்பு, திறமை, உற்சாகம், அறிவு, அனுபவம், அபிப்பிராயம், உணர்வு என்ற நிலைகளுக்கு உயர்ந்த மனிதன் முடிவாக உணர்வும் அபிப்பிராயமும் சேர்ந்த நோக்கத்தைப் பெறுகிறான். எனவே நோக்கமே மனிதன்.

முன்னேற்றமில்லாதவனுக்கு, முன்னேற்றமுள்ளவனுடைய நோக்கத்தை ஏற்றுக்கொண்டால், முன்னேற்றம் வரும். முன்னேறாதவன் இக்கருத்தை ஏற்றுக்கொண்டால் தன் நோக்கத்தை மாற்றுவது எளிதன்று எனக் காண்பான். யாரைப் பார்த்தாலும் உதவி கேட்டு வாங்குபவனை, யாரையுமே உதவி கேட்காத அவனைப்போன்ற ஒருவரைக் காண்பித்து நீ உள்ளூரில் சாதாரண வக்கீலாக இருக்கிறாய், அவன் உன்னைப்போன்றவன், ஹைகோர்ட்டில் பெரிய வக்கீலாகி விட்டான், ஒரே வித்தியாசம் நோக்கம் என்று கூறினால் அவன் ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொள்வோம். மாறுவது எவ்வளவு சிரமம்? மாறினால் எவ்வளவு பெரிய பலன்? அதனால் நோக்கமே மனிதன்.

சரணாகதியை பகவத்கீதை வலியுறுத்துகிறது. மனிதன் தன் நோக்கத்தைச் சரணம் செய்ய வேண்டும் என்கிறது. நோக்கம் சரண் செய்யப்பட்டால், முழு மனிதனும் சரணாகதியடைந்துவிடுகிறான்.அபிப்பிராயமும், உணர்வும் சேர்ந்து நோக்கம் எழுவதாகச் சொன்னோம். ஞானம் அபிப்பிராயத்தைக் குறிக்கிறது, பக்தி உணர்வைக் குறிக்கிறது. எனவே ஞானமும் பக்தியும் சேர்ந்து நோக்கத்தை உருவாக்குகின்றன. அதுவே செயலில் வெளிப்படுவதால், ஞானமும், பக்தியும், செயலும் சேர்ந்தது நோக்கம். இவற்றிற்குப் புறம்பாக மனிதனில்லை.

வாழ்வில் உயர, எந்தக் குறிக்கோளையும் எட்ட இதை ஒரு முறையாகப் பயன்படுத்தலாம். நாம் எந்த நிலைக்கு உயர வேண்டு மோ, எந்தக் குறிக்கோளை எட்ட வேண்டுமோ, அதற்குரிய நோக்கம் எது எனக் கண்டு, இன்று நாம் எந்த நோக்கத்தால் செயல்படுகிறோம் என உணர்ந்து, இன்றுள்ள நோக்கத்தைக் கைவிட்டு, குறிக்கோளுக்குரிய நோக்கத்தை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தால், நம் நிலை உயரும், நாம் விரும்பும் குறிக்கோளை எட்ட முடியும்.

இதைவிட சக்திவாய்ந்த முறை வாழ்வில் உயருவதற்கில்லை.

- தொடரும்

ஜீவிய மணி

சிறிய ஆத்மா இறந்தவுடன் பிறக்கும்.

Comments

9-ஜன்மங்கüல்-ஜன்மங்களில்

9-ஜன்மங்கüல்-ஜன்மங்களில்

24-இடங்கüல்-இடங்களில்

73-உள்üருந்து-உள்ளிருந்து

94-நநகஈ

105-முதலாüகளால்-முதலாளிகளால்

108-தொழி-ல்- -தொழிலில்

108-வருஷங்கüல்-வருஷங்களில்

110-பள்üக்கூடம்-பள்ளிக்கூடம்

112-ஙகஈயாகி

135-காருந்து

148-டங்ற்ங்ழ் ற்ட்ங் ஏழ்ங்ஹற்

156-இடத்தின்-இடத்தில்

171-அüக்கும்-அளிக்கும்

174-குடும்பங்கüல்-குடும்பங்களில்

174-உட-ல் -உடலில்

184-அüப்பதால்-அளிப்பதால்

212-விலவிவிட்டது-விலகிவிட்டது

234-அலிப்பது-அளிப்பது

241-எüதன்று-எளிதன்று

10 - ஜன்மங்கüல்-ஜன்மங்களில்22

10 - ஜன்மங்கüல்-ஜன்மங்களில்

22 - இடங்கüல்-இடங்களில்

31-அருகிருப்பது-அருகிலிருப்பது

71-உள்üருந்து-உள்ளிருந்து

 book | by Dr. Radut