Skip to Content

சிறு குறிப்புகள்

பென்ஜமின்

அன்னை ஆத்மா, ஆவி இவற்றைப் பற்றிப் பேசும்பொழுது நமக்குத் தேவையான பல செய்திகளைக் கூறுகிறார்.

பென்ஜமின் என்ற சாதகர் கிருத்துவர். அவர் காலமாவதற்குக் கொஞ்சநாள் முன் அவரது ஆத்மா உடலைவிட்டுப் பிரிந்துவிட்டது. அவர் கிருத்துவரானாலும் அடக்கம் செய்வதற்குப் பதிலாக அவரது உறவினர் தகனம் செய்யும்படிக் கேட்டனர். அவர் உடல் தகனம் செய்யப்பட்ட பின் அவரது அறையிலுள்ள மேஜை, நாற்காலி  முதலி யவற்றை அப்புறப்படுத்திவிட்டனர். 12 நாள் கழித்து "அவர்' நன்றாக உடையுடுத்தி, வழக்கம்போல் அன்னையை வந்து பார்த்து, "என் அறையிலிருந்து எல்லாச் சாமான்களையும் அப்புறப்படுத்திவிட்டனர். நான் என்ன செய்ய?' எனக் கேட்டார். அன்னையைத் தரிசிக்க வரும்பொழுது மிகவும் நன்றாக உடை உடுத்தி வருவது அவர் வழக்கம். அதேபோல் இப்பொழுதும் வந்தார். ‘"இனி உனக்கு மேஜை, நாற்காலிகள் தேவையில்லை' என அன்னை பதில் கூறினார். இது சம்பந்தமாக அன்னை நமக்குத் தெளிவுபடுத்தும் கருத்துகள்:-

  • ஆத்மா முன்னரே உடலைவிட்டுப் பிரிகிறது.
  • தகனத்திற்கு முன் அன்னை (certain interval) இடைவெளி  வேண்டும் என்றார்.
  • அவர் ஆவி வெகுவாக உடலைவிட்டுப் பிரிந்திருந்தாலும், ஆவி எரியும் உடலைவிட்டுப் பிரியும்பொழுது (violent) சிரமமாக இருந்தது.
  • மீண்டும் அந்த ஆவி ஓர் உருவமாக மாற 12 நாளாயிற்று.
  • இறந்தபின் கரைந்த ஆவியை மீண்டும் ஒன்று சேர்க்க அன்னை முயன்றிருந்தால் சில மணி நேரத்தில் செய்திருப்பார். இவர் விஷயத்தில் அதைச் செய்யவில்லை.
  • மீண்டும் எழுந்த ஆவி தன்னுடைய அறைக்குப் போயிற்று.
  • அறையில் பழையபடி வேலை செய்ய முயன்றது.
  • அன்னையை வந்து தரிசனம் செய்தது.
  • உயிரோடிருக்கும்பொழுது எப்படி அழகாகத் தலைவாரி, நன்றாக உடுத்து வருவாரோ, அதேபோல் ஆவியாக இருக்கும்பொழுதும் வந்தார்.
  • அந்த ஆவி ஓரிரு வருஷங்களிருந்தது.
  • உடல் வாழ்ந்த பழக்கத்தை ஆவி தொடர்ந்து வருவதால் அது நடக்கிறது.
  • இவர் தம் பிறந்தநாளில் உயிர் பிரிந்தார்.
  • தம்மிடம் வந்த ஆவியை அமைதிப்படுத்தி அவருடைய ஜீவனுடனிருக்கும்படி அன்னை அனுப்பினார்.
  • ஆத்மா பிரிந்தபின் உயிர் பிரியும்வரை சிலசமயங்களில் அவர் ஸ்வாதீனமில்லாமல் காணப்பட்டார்.
  • ஆத்மா, உயிர், ஆவி இவற்றிற்குள்ள வித்தியாசத்தை இந்நிகழ்ச்சி அறிய உதவுகிறது.

**********



book | by Dr. Radut