Skip to Content

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

அண்ணன் - நம் பார்வை நமக்குத் தெரிந்தவற்றிலிருக்கும். நமது பாதை நமக்குத் தெரியாது. அன்னைக்குத் தெரியும். எனவே நாம் முன்னேறுவதற்கு நமக்குத் தெரிந்ததைச் செய்தால், அதே முன்னேற்றத்தை அன்னை நமக்கு நமக்குரிய பாதையில் தருவார்.

தம்பி - உதாரணம் உண்டா?

அண்ணன் - அன்னையின் செலவுக்குத் தேவையான தொகையை தாமே சம்பாதித்துத் தர ஒருவர் முன் வந்தார். அவர் முயற்சி நஷ்டமாயிற்று. ஆனால் அவர் எண்ணம் வேறு வகையில் பலித்தது. அவரைச்சார்ந்த ஒருவர் அவர் கொடுக்க முயன்ற தொகையைப்போல் 5 மடங்கு அன்னைக்குக் கொடுத்தார்.

தம்பி - என்ன அர்த்தம்?

அண்ணன் - இதை உதாரணத்தின் மூலமும் சொல்லலாம். பொதுவாகவும் சொல்லலாம்.அவருடைய எண்ணம் முழுமையானதால், ஏதோ ஒரு வகையில் அது பலித்து விட்டது.எண்ணம் சரி.அவருக்கு உடனிருந்தவர் சேவை மனப்பான்மையில்லாதவர் என்பதால் அவர் முயற்சி தோற்றது. அத்துடன் அவர் அடிப்படை முயற்சி மனித சுபாவம் மாற வேண்டும் என்பது.அன்னையை என்பதால் அன்னைக்கு எந்தக் காணிக்கையையும் தருவதில்லை. இந்தக் கருமி மனம் மாறி பல லட்சம் காணிக்கை கொடுத்தது அவர் முயற்சியின் அடிப்படை வலுவானது எனக் காட்டுகிறது.

தம்பி - வேறு உதாரணமுண்டா?

அண்ணன் - அதை நீதான் சொல்ல வேண்டும். ஓர் அன்னைக் கருத்தை வெளியிட பல உலகப்பிரசித்தி பெற்றவர்களைக் கூட்டி மாநாட்டில் அதை வெளியிட சென்ற ஆண்டு முயன்றது உனக்குத் தெரியும்.அங்கு அதை வெளியிட முடியவில்லை. மாநாட்டைக் கூட்டியவர் அதை முடித்துக்கொண்டு தம் தொழில் மாநாட்டுக்குப் போனார்.தொழிலுக்கும் அன்னைக்கும் தொடர்பில்லை.இக் கருத்தை அங்குப் பேசினார்.வந்திருந்த என்ஜீனீயர்கள் ஆரவாரமாக வரவேற்றார்கள்.அடுத்த நாள் மற்றொரு பிரபலமான கூட்டத்திற்கு அவரை அழைத்திருந்தனர்.நீண்ட பிரயாணம், ஓய்வில்லாமல் வேலை, நேரமில்லை என மறுத்தார்.வற்புறுத்தி அழைத்தனர். "26 மணி விமானப் பிரயாணம், 121/2 மணி time change, ஓய்வில்லை எனினும் வந்திருக்கிறார்'' என இவரை அறிமுகப்படுத்தினார்கள். உற்சாகமாகப் பேசினார். அன்னைக்குரிய செய்தியை அங்குச் சொன்னார்.ஒரே ஆரவாரம். பலத்த கைதட்டல். மாநாட்டுத் தலைவர் "இவர்கள் அனைவரும் பிரபலமானவர், எவர் பேச்சையும் கைதட்டி வரவேற்பவரில்லை இவர்கள்" என்று கூறினார்.

எந்தச் செய்திக்காக மாநாடு கூட்டினாரோ, அங்கு அதைச் சொல்ல முடியவில்லை.வரமாட்டேன் என்று மறுத்த இடத்தில் அன்னை செய்தி போகிறது. இவர் ஆர்வம் சரியானது. பார்வை மந்தம். எனவே அன்னை தம் போக்கில் தம் செய்தி பரவ வழி செய்கிறார்.

தம்பி - இதை நாம் பல இடங்களிலும் காண்கிறோம். உடல் நலம் குன்றியவரிடம் அன்னையைப்பற்றிப் பேசினால், அவர் வியாதியிருக்கட்டும், அன்னை என் பிரச்சினையைத் தீர்ப்பார்களா எனக் கேட்கிறார். மறுநாள் அவருக்குத் தொழிலில் பெரிய ஆர்டர் வருகிறது. நாம் அவர் வியாதியை முக்கியமாகக் கருதினோம்.அவர் தம் பிரச்சினையை முக்கியமாகக் கருதுகிறார். அன்னை தொழிலை முக்கியமாகக் கருதுகிறார்.

ஒரு வக்ரமான முதலாளி.இவருக்கு ஒரு வக்ரமான மானேஜர். வெளிநாட்டார். இவர்களுக்குப் பாசம் என்பதே இருப்பதில்லை. எவரோடும் இந்த மானேஜர் பிரியமாகப் பேசிப் பழகாதவர். முதலாளிக்கு வக்ரமாகச் செய்தி அனுப்பினார்.முதலாளி அன்னை முறையைப் பின்பற்றி," நான் கம்பனி விஷயத்தில் வக்ரமாக இருப்பதைப்போல் மானேஜர் என்னிடம் வக்ரமாக இருக்கிறார் என்று எடுத்துக்கொள்கிறேன் என்றார்.அடுத்த நாள் மானேஜரிடமிருந்து e-mail வருகிறது.முடிவில் "please come soon.I miss you".சீக்கிரம் வாருங்கள்.உங்களைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று கூறியது.முதலாளி அதைப் படித்துவிட்டு இந்த மனிதன் இச் சொற்களை வாழ்வில் மனைவியுள்பட இதுவரை எவரிடமும் சொல்யறியாதவர். இது அன்னையின் அதிசயம் என்றார். தொழிலுக்காக முதலாளி மனம் மாறினால் மானேஜர் குணம் அடிப்படையில் மாறுகிறது. இந்தியர்கட்கு ஞானம் உண்டு என அன்னை கூறுகிறார். அந்த ஞானத்தை நாம் புறக்கணிக்கிறோம்.

அண்ணன் - யூவான் சாங் என்ற சீனர் இந்தியாவுக்கு வந்தபொழுது இந்தியா தெய்வீகமான நாடு, எவருமே பொய் சொல்வதில்லை என எழுதியுள்ளார்.இன்று நாடு மிகவும் மாறியுள்ளது.கேட்டுப்பெறுவது என்பதை மனிதன் கைவிட்டால், நாடு எப்படியிருக்கும்? மனிதன் அன்னையை எதுவும் கேட்கக் கூடாது என்று நினைப்பது எப்படிப்பட்ட நிலை?

தம்பி - இது உயர்ந்த நிலை என்பதில் ஐயமில்லை.சில உயர்ந்த ஆன்மாக்கள் இதைத் தவறாக எடுத்துக்கொண்டு அன்னையைக் கேட்டுப் பெறும் பாக்கியத்தை இழக்கின்றனர்.

அண்ணன் - இதுபோன்ற உண்மைகளைப் பெற்றோர் குழந்தைகட்குச் சொல்லிக் கொடுப்பதில்லை.சொல்லிக் கொடுத்தால் வாராது.குழந்தைகள் பெற்றோர் செய்வதையே செய்யும்.மனப்பாடம் செய்வது தவறு எனில், செய்யுளையும் மனப்பாடம் செய்யக்கூடாது என்பதுபோல் தவறு ஏற்படுகிறது.2000 வரி செய்யுளை மனப்பாடம் செய்வது இலக்கிய ரசனைக்கு அவசியம் என்று ரஸ்ஸல் என்ற மேதை கூறுகிறார்.

தம்பி - கேட்பது குறைவு. கேட்பது உயர்வு, என்ற இடங்கள் இரண்டும் உயர்ந்தவை என்பதை நடைமுறையில் அனைவரும் அறிவர்.என்றாலும் இத்தவறு ஏற்படுகிறது.பொதுவாகக் கேட்பது குறைவு. நெருக்கமான இடத்தில் நெருக்கமானவற்றைக் கேட்டுப் பெற்றால் நெருக்கம் அதிகமாகும் என நாமறிவோம். அங்குக் கேட்காமலிருப்பது நெருக்கத்தைப் பறிக்கும். நண்பர்களை நாம் எப்பொழுது கூப்பிட வேண்டும், எதற்கு நாம் கூப்பிடாமல் அவர்களே வர வேண்டுமென்ற பாகுபாடு நமக்குண்டில்லையா?

அண்ணன் - எத்தனையோ சிறு விஷயங்கள், பெரிய உண்மைகள் அவற்றுள் புதைந்துள்ளன.அங்குச் சிறு மாற்ற மேற்பட்டால், பெரியது சிறியதாகிவிடும்.பிரசாதம் வருவது நம் மனநிலையைப் பொருத்தது.ஆபீஸ் சுணக்கம் என அறிவது பிரசாதத்தை நம் மனத்திலிருந்து பிரிப்பதாகும்.இந்த உண்மைகளை எல்லாம் அறிந்து பின்பற்றாமல் அன்னை வழிபாடு ஜீவனற்றுப் போகும்.முறைகள் அவசியம், ஆனால் ஜீவனற்றவை.

தம்பி - ஜீவனோடு அவசியமாகப் பின்பற்ற நமக்கு மனதில் ஜீவன் வேண்டும்.ஜீவனற்றவர் தீவிரம்தான் நாம் காணமுடிவது.பொதுவாகத் தீவிரம் இருக்காது. இருந்தால் ஜீவனற்றவர்க்கே அதிருக்கும்.அன்னைக்கு அடிப்படையே ஜீவனாயிற்றே.திருடுபோனால் எவ்வளவு நஷ்டம் என நினைக்கலாமா?நம் வீட்டில் சிறு துரும்பும் திருடு போகலாமா?திருடு போனால், அங்கு அன்னையிருப்பாரா?ஜெயிலுக்குப் போவதைப் போலன்றோ திருடு போவது?அன்னையை அறியும் மனிதன் மனிதப்பிறவியில் அற்புதமானவன். அறிமுகமானபின் அன்னையை ஜீவனோடு வழிபடுதல் என்பது எவ்வளவு பெரிய விஷயம்?

- தொடரும்.

*********

பிறர் வாழப் பொறுக்காதவன்

எந்தத் தொழிலிலும், எவ்வளவு திறமைசாலியானாலும், தொழிலில் நுழைவது சிரமம்.அநேகமாக முடியாது. அற்புதமான பொருளை மார்க்கட்டுக்குக் கொண்டுவருவதால் மட்டும் அது விற்பதில்லை. 'மார்க்கட் பிடிப்பது' என்பது அதிர்ஷ்டம்.

அமெரிக்காவில், நம் நாடுபோலவே, சேல்ஸ் ரெப்ரஸெண்ட்டேடிவ் உண்டு. அவர்கள் பல கம்பனி பொருட்களையும் விற்பார்கள். நம்மால் மார்க்கட்டில் விற்க முடியாத பொருளை அவர்கள் விற்பார்கள்.மார்க்கட் பிடித்துவிட்டால், பொருள் தானே விற்கும்.ரெப்ரஸெண்ட்டேடிவ் தேவையில்லை.ஆனால் மார்க்கட்டில் யார் பொருளை நுழைக்கின்றார்களோ, அவர்கட்கு, மார்க்கட் பிடித்தபின்னும், தொடர்ந்த கமிஷன் உண்டு. இதனால் உயர்ந்த பொருளைச் செய்பவர்கள் சொந்தமாக விற்க முனைகிறார்கள்.எவரும் ரெப்ரஸெண்ட்டேடிவ்வுடன் வெற்றிகரமாகச் செயல்படுவதில்லை. ஒரு 400 கோடி கம்பனி விதிவிலக்காக ரெப்ரஸெண்ட்டேடிவ்வுடன் வெற்றிகரமாகச் செயல்பட்டது. அவரை நம் சொஸைட்டி அன்பர் என்ன ரகஸ்யம் எனக் கேட்டார்.அவர் பதில்,

  1. எவரும் ரெப்ரஸெண்ட்டேடிவ் தொடர்ந்து அபரிமிதமாகச் சம்பாதிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.
  2. நாங்கள் மாறாகச் செயல்பட்டோம் என்றார்.

நாம் Coco-colaவை அறிவோம்.இன்று அது உலகப்பிரசித்தி பெற்றதாக இருப்பதற்கு ஒரு காரணம், "எங்கள் ஏஜெண்டுகள் கோடீஸ்வரர்களாக நாங்கள் முனைவோம்'' என அவர்கள் செய்த முடிவாகும்.

  • பிறர் வாழப் பொறுக்காதவன் வாழ்வதில்லை.
  • பிறரை வாழ வைக்க விரும்புபவன் கோடீஸ்வரனாகத் தவறுவதில்லை.

அன்பர்கள் மாதம் இலட்சரூபாய் சம்பாதிக்க உதவ முன்வரும் அன்பர்களை நான் தேடுகிறேன்.தானே அதைப்பெற எவரும் முன்வருவதில்லை. சிலர் முன்வந்தனர்.அவர்கள் மனம், "நான் மட்டும் முன்னேற வேண்டும்" என்றது. அதுவுமில்லாமல் போய்விட்டது.ஒருவர் விலக்கானார்.தம் முயற்சியால் அடுத்தவர் பெரும் வருமானத்தை அவர் மனம் ஏற்றது.மேலும் வருமானம் வரும்பொழுது முதலில் வருவது பிறருக்கும், முடிவாக வருவது தமக்கும் என்ற கொள்கையை ஏற்றார்.அவருக்கு அதிர்ஷ்டம் வந்தது.அவரால் பிறருக்கு அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்ய முடியும்.

தான் அதிர்ஷ்டம்பெறுவது அன்னையை அறிவதாகும்.

 பிறர் வாழ்வில் அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்வது அன்னையை ஏற்பதாகும்.

 

*******

 

 ஸ்டிரைக்

நியாயமான ஸ்டிரைக்குண்டு.அநியாயமான ஸ்டிரைக்கும் உண்டு.அந்த நாளில் அதிகாரியும், முதலாளியும் அதிகாரம் செய்தனர், அட்டகாசமும் செய்தனர்.இன்று யூனியன் ஏற்பட்டுவிட்டதால் முதலாளி பாரபட்சமாக நடக்க முடிவதில்லை. சட்டத்தைப் புறக்கணிக்க முடிவதில்லை.ஆனால் யூனியன் எல்லாச் சமயங்களிலும் நேராக இருப்பதில்லை.அந்த நாளில் முதலாளி செய்த கொடுமையை இன்று தொழிலாளிகள் ஏதோவொரு சமயம் செய்யவும் யூனியன் உடந்தையாக இருக்கிறது. Negotiations பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் நாகரீகம் நிலையாக எழும்வரை நியாயம் அநியாயக் கலப்புடனே வரும்.

டெலிபோன் ஜெனரல் மேனேஜர்.தமக்கு வசதியாக டிரான்ஸ்பர் வர பிரியப்பட்டார். ஆனால் சட்டப்படி டிரான்ஸ்பர் கேட்க இன்னும் 2 வருஷமுண்டு. இவர் பக்தர்.சட்டத்தை மீறிப் போக மனம் இடம் தரவில்லை.திடீரென இவர் விரும்பும் ஊரில் இவருடைய சேவை தேவைப்பட்டு சர்க்காரே டிரான்ஸ்பர் கொடுத்தது.யூனியன் ஆட்சேபித்தது.கொஞ்சநாள் கழித்து வேறொரு ஆபீசருக்கு 3 வருஷ சர்வீஸ் முடியுமுன் டிரான்ஸ்பர் வேண்டுமென யூனியன் கேட்டதைச் சர்க்கார் மறுத்தது.யூனியன் ஆட்சேபித்து ஸ்டிரைக் செய்தது.யூனியன் தலைவர் அன்பர் பெயரை banner இல் எழுதி யூனியன் ஆட்சேபணையைத் தெரிவித்தார்.

  • தம்மால் ஆபீசுக்கு ஸ்டிரைக் வந்தது கண்டு அன்பர் மனம் பொறுக்கவில்லை.
  • தீவிரமான பிரார்த்தனையை மேற்கொண்டு தம் பங்குக்கு உண்டான மனமாற்றத்தைச் செய்ய முயன்றார்.
  • 1/2 மணி கழித்து ஸ்டிரைக் நடக்கும் ஊரிலிருந்து ஸ்டிரைக் வாபஸ் செய்யப்பட்டதாகச் செய்தி வந்தது.
  • பிறகு யூனியன் தலைவர் அன்பரைச் சந்தித்து தம் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்!

******

Comments

133-தொழிலாüகள-தொழிலாளிகள்

133-தொழிலாüகள-தொழிலாளிகள்book | by Dr. Radut