Skip to Content

அன்பர் உரை

இந்தியா அமெரிக்காவாகச் சீக்கிரம் மாறலாம்

 

சென்னை - பெரம்பூர் ரிஷி இல்லத் தியான மையத்தில் 27.6.99 அன்று திருமதி ரேவதி சங்கரன் நிகழ்த்திய உரை

ஒருவர் ஒரு நாளில் பெற்றதை அடுத்தவர் பெற நெடுநாளாகும் என்பது உண்மை. ஓர் அரச குடும்பம் உற்பத்தியாகப் பல தலை முறைகளாகின்றன. நேரு இந்தியப் பிரதமரானார் எனில் அவர் தகப்பனார் மோதிலால் "இந்தியாவுக்கு சுதந்திரம் வந்தால் நான்தான் முதல் ஜனாதிபதி'' என்று கூறிய செல்வர். சுமார் 10, 20 தலைமுறைகளாக அது செல்வம் மிகுந்த குடும்பம். நேரு பெற்றதை சாஸ்திரியும், ராதாகிருஷ்ணனும், சஞ்ஜீவிரெட்டியும் பெற்றனர். நேரு செல்வப் பரம்பரையால் பெற்றதை மற்றவர் பாண்டித்தியத்தாலும், தியாகத்தாலும், நேர்மையாலும் பெற்றனர். நேரு முதல் பிரதமர். அவர் கட்டிய கோட்டையின் பலனைப் பிறர் அனுபவித்தனர்.

  • காலம் மாறினால் முற்காலத்தில் நெடுநாளில் பெற்றதைப் பிற்காலத்தில் குறுகியகாலத்தில் பெறலாம்.
  • பயிற்சி பலன் பெறும் காலத்தைப் பெரிய அளவில் சுருக்கும். நூறாண்டைப் பத்தாண்டாக்கும்.
  • விளக்கம் பெறாத மறைந்துள்ள திறமை உயர்ந்ததானால், பலன் சீக்கிரம் வரும்.

சிங்கப்பூர், ஜப்பான், கொரியா, தாய்வான் போன்ற நாடுகள் 1950இல் இந்தியா போலிருந்து இன்று மேலை நாடுகள் போல் 50 ஆண்டுகளில் மாறின. அவர்கள் பெற்ற பலனுக்கு அவர்களுடைய உயர்ந்த கல்வி முறையே காரணம். நம் கல்வித் திட்டத்தை அது போல் உயர்த்த நாளாகாது. மேல் நாடுகள் விஞ்ஞான முன்னேற்றத்தால் உயர்ந்தன. நமக்கு அது இல்லை. ஆனால் பண்பு (culture), ஆன்மீகம் உண்டு. பண்பும், ஆன்மீகமும், விஞ்ஞானத்தை விட உயர்ந்தவை. விஞ்ஞானத்தை தன்னுட் கொண்டவை. ஆன்மீகமிருந்தால் அறிவு வளர்ச்சியை எளிதில் பெறலாம்.

  • நம் நாட்டிலுள்ள ஆன்மீகத்திறனை அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுத்தினால்,
  • பண்பின் உயர்வை உழைப்பால் வெளிப்படுத்தினால், நாம் அமெரிக்கா போலாகலாம்.

50 ஆண்டுகளில் கொரியா சாதித்ததை இந்தியா  20 ஆண்டுகளில் சாதிக்கலாம். அதற்கு நாம் செய்யக் கூடியவை என்ன?

300 ஆண்டுகளில் ஐரோப்பா உயர்ந்து, உலகம் எனில் ஐரோப்பா என்று ஆயிற்று. அதைச் சாதித்தது அவர்கள் கல்வித்திட்டம், விஞ்ஞானம். ஐரோப்பாவில் அனைவரும் கல்வி பெற்றனர். விஞ்ஞானச் சாதனைகள் அனைத்தையும் அவர்களே கண்டுபிடித்தனர். நம்மைப்போல் 10 மடங்கு உழைக்கின்றனர். இந்தியர் உழைப்பதில்லை. இன்றும் கல்வி பெறாதவர் 40 சதவீதம். விஞ்ஞானம் நம் நாட்டில் வளரவில்லை. 300 ஆண்டுகளில் ஐரோப்பா சாதித்ததை அமெரிக்கர் 200 ஆண்டுகளில் சாதித்து அவர்களையும் கடந்தனர். அதற்குக் காரணம் ஐரோப்பியர் நாகரீகம் 1000 ஆண்டுகளாக வளர்ந்தது.1000 ஆண்டுகளில் ஐரோப்பியர் உற்பத்தி செய்த நாகரீகத்தை அமெரிக்கர் 200 ஆண்டுகளில் உற்பத்தி செய்ய 5 மடங்கு அதிகமாக உழைத்தனர். நம்மைப்போல் அது 50 மடங்கு அதிக உழைப்பு. உழைப்பு என்பதுடன் விஞ்ஞானத்தை வளர்த்தனர். அவற்றையெல்லாம் ஜப்பான் தன் பண்பின் பலத்தால் 50 ஆண்டில் சாதித்துக் கடந்தது எனில் நம்மைப்போல் 50 மடங்கு உழைத்த (ஐரோப்பியர்) அமெரிக்கர்கள் 200 ஆண்டில் சாதித்ததை 50 ஆண்டில் ஜப்பான் சாதித்தது எனில் பண்புக்கு அவ்வளவு திறனுண்டு எனப் பொருள்.

  • ஆன்மீகம் பண்பைவிட உயர்ந்தது.
  • இந்தியப் பண்பு உயர்ந்தது எனப் பெயர் பெற்றது.
  • பண்பும், ஆன்மீகமும் உடைய இந்தியா அமெரிக்கா, ஜப்பான்போல மாற முயன்றால் முடியும் என்பது உறுதி.
  • ஜப்பான் 50 ஆண்டில் சாதித்ததை இந்தியா 20 ஆண்டிலும் சாதிக்கலாம்.
  • அதைச் சாதிக்க அபரிமிதமாக இன்றுபோல் 50 மடங்கு உழைக்க வேண்டும்.
  • நமது பண்பின் உயர்வையும், ஆன்மீகத்தின் சிறப்பையும் அறியவேண்டும்.
  • அச்சிறப்பை உழைப்பில் பண்பு வெளியிடவேண்டும். இன்று நம் நிலை என்ன?
  • விவசாயப்பட்டதாரிகள் பயிரிடுவதில்லை. உத்தியோகத்திற்குப் போகிறார்கள்.
  • இன்ஜீனீயரிங் படித்தவர்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்வதால், தொழிலில் ஓரளவு முன்னேற்றம் வந்துள்ளது.
  • விவசாயப்பட்டம் பெற்றவர் தம் படிப்பைப் பயிரிடுவதில் செலவு செய்தால் நிலஉற்பத்தி 10 மடங்கு பெருகும். அமெரிக்காவில் 4% மக்கள் நாட்டிற்கு உணவை உற்பத்தி செய்யும்பொழுது நம் நாட்டில் 70% மக்கள் உணவைத் தயார் செய்வதற்குக் காரணம் பெற்ற படிப்பைப் பயிரில் செலவிடாததுதான்.
  • நம் ஆன்மீகப் பொக்கிஷம் எங்கே? நாடு ஆன்மீகத்தை மறந்து மதவழிபாட்டைப் போற்றுகிறது.1900இல் ஜடம் என்பது சக்தி என விஞ்ஞானம் கண்டதைப் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன் ரிஷிகள் கண்டனர். ஜடம் என்பது சக்தி என்ற விஞ்ஞானத் தெளிவு அணுவைப் பிளந்தது. மேலையர் தாம் பெற்ற அறிவை வாழ்வில் வெளிப்படுத்தினர். இந்தியர் தாம் பெற்ற ஆன்மீக அறிவை வாழ்வில் வெளிப்படுத்த முயலவில்லை.
  • மறைமுகமாக தானே அத்தெளிவு softwareஇல் வெளிப்படுவதால் உலகில் software capital என வழங்கும் அளவுக்கு இந்தியா பெயரெடுத்தது. Software கண்டுபிடிக்க இந்தியர் அறிவு பயன்படவில்லை. வேலை செய்து சம்பாதிக்கவே அத்துறை பயன்படுகிறது.
  • உபநிஷதம், கீதை ஆகியவற்றை மேல் நாட்டார் போற்றிய பின்னரே நம் நாட்டவர் ஏற்றுக் கொள்கின்றனர்.
  • உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அரவிந்த ஆஸ்ரமம் இந்தியாவில் அதுபோல் பிரசித்தி பெறவில்லை. அண்மையிலிருந்த தமிழ்நாடும் நெடுநாளாக அறியவில்லை. புதுவையே ஏற்கவில்லை.
  • இந்தியர்கள் முதலாகத் தங்கள் ஆன்மிகம், பண்பு இவற்றின் உயர்வை அறிய வேண்டும். அவற்றின் திறனை வாழ்வு மிளிரப் பயன்படுத்த வேண்டும்.
  • மேல் நாட்டவரின் விஞ்ஞான அறிவு வாழ்வில் கொடுத்த பலனைவிட நம் ஆன்மீகம் நமக்கு அதிகப் பலனைத் தரும். இது முடிவான பலனைத் தரவல்லது. ஆரம்பத்தில் என்ன செய்யலாம்?
  • ஒரே நகரத்தில் அல்லது ஒரே மாவட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் ஒரு ஸ்தாபனத்தை எடுத்து அதன் தலைவர்கள் ஒன்று சேர்ந்து, இந்த குறுகிய வட்டத்துள் தங்கள் தங்கள் ஸ்தாபனங்களை மேல்நாட்டு ஸ்தாபனம்போல் தரத்தில் உயர்த்த முன்வந்தால், இக்குழு அகில இந்திய முன்னோடியாக இருக்கும்.
  • இதற்குரிய அடிப்படை இந்தியாவிலுள்ளது. பஜாஜ் ஸ்கூட்டர் மேல் நாடுகட்கு ஏற்றுமதியாகிறது. டாட்டா நிறுவனம் நிர்வாகத்தில் மேலையருக்கு இணையாகவும், மிஞ்சியும் உள்ளது. ஏர்க்காடு பள்ளியின் தரம் அமெரிக்கருக்கு நிகரானது. இந்து பத்திரிகையை 30 ஆண்டுகட்குமுன் உலகத்தில் 6ஆம் தரமாக கணித்தனர். ஆசிரம புத்தகங்கள் மேல் நாட்டு வெளியீடுகளை ஒத்தது. Softare கம்பனிகள் அமெரிக்கக் கம்பனிகள் தோற்றப்பொலிவுடனுள்ளன. Titan கடிகாரம் தரம் உயர்ந்தது. அடிப்படை இருப்பதால் முயன்றால் முடியும். சென்னை நகரிலோ, தமிழ்நாடு முழுவதுமோ, ஒரே ஜில்லாவிலேயோ, வகைக்கு ஒரு ஸ்தாபனமென தானே முன்வருபவர்கள் ஓர் குழுவாகச் சேர்ந்து முடிந்த அளவு தரத்தை, நிர்வாகத்தை உயர்த்த முன்வந்தால், அக்குழு நாட்டு மனப்பான்மையை மாற்றவல்லது. முடியாது என இன்று கருதுவதை முடியும் என்று இச்சோதனை மாற்றும்;  இது குறுகிய காலத்திலும் முடியும்.
  • இக்குழுவின் உறுப்பினர்களாகச் சேர முன்வருபவர்கள் அவர்கள் ஸ்தாபனத்தின் தலைவர்களாகவோ, அல்லது ஒரு கிளையின் நிர்வாகியாகவோ இருப்பது அவசியம். சர்க்கார் ஸ்தாபனங்களும் சேர விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம். எதுவும் கட்டாயமில்லை என்பதால், நஷ்டமில்லை.
  • சுமார் 20 முதல் 100 வரை உறுப்பினர்கள் சேரலாம். அவர்கள் ஏற்கனவே தங்கள் துறையில் முதலிடம் பெற்றவர்களாக இருப்பது பொருத்தம்.
  • அப்படிச் சேரக்கூடிய ஸ்தாபனங்கள் எவை?

 

  1. குடும்பங்கள் - கிராமத்துக் குடும்பம் ஒன்று, நகரத்துக் குடும்பம், கூட்டுக் குடும்பம், சிறுநகரத்துக் குடும்பம், சிறு குடும்பம், பெண் வேலை செய்யும் குடும்பம் என வகைக்கு ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம்.
  2. கடைகள் - அளவைப்பொருத்து 3 நிலைகள் அல்லது வகையைப் (நகைக் கடை, மளிகைக்கடை என) பொருத்து சுமார் 10 வகைக் கடைகளைச் சேர்க்க வேண்டும்.
  3. சிறு தொழில் - இங்கும் அளவு, தரம், துறை கருதி சுமார் 8, அல்லது 10 தொழில்களைச் சேர்க்கலாம்.
  4. நடுத்தரத் தொழில், கனரகத்தொழில், அந்நியர் பங்குகொண்ட தொழில்
  5. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், தொழிற்கல்லூரி, பாலிடெக்னிக்
  6. ஆஸ்பத்திரி
  7. ரோட்டரி கிளப்
  8. கோர்ட்
  9. போஸ்டாபீஸ்
  10. பாங்க்
  11. பண்ணை
  12. ஆராய்ச்சி நிலையம்
  13. நூலகம்
  14. பஸ் ரூட்
  15. ரயில்வே ஸ்டேஷன்
  16. பஸ் ஸ்டாண்ட்
  17. ஹோட்டல்
  18. டிராவல் ஏஜென்சி
  19. டூரிஸ்ட் சென்டர்
  20. திருவிழா
  21. திருமண விழா
  22. தினசரிப்பத்திரிகை
  23. லாரி சர்வீஸ்
  24. தேயிலை, காப்பி எஸ்டேட்
  25. சினிமா தியேட்டர்
  26. நகைக்கடை
  • தரம் உயர்த்தப்பட வேண்டிய வகைகள்:  
  1. முதற்படியாகப் பெறும் பலன் மேல் நாட்டுக்குச் சமமாக இருக்க வேண்டும். பள்ளியானால் அவர்கள்போல பாஸ் 100% இருக்க முயலவேண்டும். ஆஸ்பத்திரியானால் வியாதி குணமாக வேண்டும். பண்ணை எனில் மகசூல் உயரவேண்டும்.நிர்வாகம், சேவை, திறமை எப்படியாயினும் result ஸ்தாபனம் தரும் பலன் மேல் நாட்டு நிறுவனம் போலிருக்கவேண்டும்.
  2. Quality of product - பொருளின் தரம் நம் நிலையிலிருந்து அவர் நிலைக்கு உயர வேண்டும்.
  3. Quality of service
  4. Punctuality
  5. நாம் அவர்கள் 50 அல்லது 100 வருஷத்திற்குமுன் செய்ததைச் செய்கிறோம். Latest machine, latest method எனப் புதிய முறைகளில் அவர்கள் போலிருக்க வேண்டும்.
  6. நம் நாட்டில் மனிதனைவிட பணத்திற்கு மரியாதையுண்டு. அவர்கள் நாட்டில் மனிதனுக்கு மரியாதையுண்டு.
  7. சுத்தம் என்பதே நம் நாட்டிலில்லை.
  8. சத்தம் என்பதே அந்நாடுகளில்லை. நாம் சத்தத்தில் வாழ்கிறோம் என்பதையே நாமறியோம்.
  9. வாடிக்கைக்காரரை அங்குத் தெய்வமாகக் கருதுகிறார்கள்.
  10. பத்திரிகைகள் வெளியிடும் செய்திகளில் உண்மையின் அளவு.

கொரியா, டைவான் போன்ற நாடுகள் டெக்னாலஜியை மட்டும் குறிப்பாகப் பின்பற்றின. நாம் நிர்வாகம், தரம், பண்பு, life style, நோக்கம் ஆகிய அனைத்தையும் இந்த நிறுவனங்களில் பின்பற்றினால் சில ஆண்டுகளில் மேல் நாட்டுத் தரத்தில் 50, 60% எட்டிப் பிடிக்கலாம். இம்மாற்றம் நாம் இன்று எதை அடைய முடியாது என நினைக்கிறோமோ அதை அடையமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். இது ஒரு model ஆக அமையும்.

நாடு முன்னேற மாடல் உதவும். ஆனால் இவ்வெண்ணம் நிறைவேற புதிய மனப்பான்மை எழவேண்டும். பிறர் உதவியை எதிர்பாராத சுய கௌரவம், நானும் மனிதன், என்னால் முடியாது என்று விட்டு விடுதல் எனக்குக் குறைவு, எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்பதை மாற்றி மரியாதையுடன், நாணயமாக, கௌரவமாக, சௌகரியமாக வாழ வேண்டும் என்ற தன்மான உணர்வு, உழைப்பு, சுறுசுறுப்பு ஆகியவை வேண்டும். அவற்றை ஏற்படுத்த பள்ளிகள், தலைவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், குடும்பத் தலைவர்களால்தான் முடியும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆசையை அடக்குவது நடத்தை. ஆசையைப் புரிந்து அழிப்பது பண்பு. மீறிடும் சக்தியை மனதால் அடக்குவது நடத்தை.

உணர்வின் பக்குவம் பண்பு. ஆசையின் ஆன்மாவை எழுப்பி திசையை மாற்றுவது திருவுருமாற்றம்.

நடத்தையும், பண்பும் திருவுருமாற்றத்தில் முடியும்.

 

 

Comments

43-வெüயிட-வெளியிட67-மிüரப்-மி

43-வெüயிட-வெளியிட

67-மிüரப்-மிளிர

97-மüகைக்கடை-மளிகைக்கடை

101-பள்ü-பள்ளி

101-பாடெக்னிக்-பாலிடெக்னிக்

135-போருக்க -போலிருக்க

145-நிறுவனங்கüல்-நிறுவனங்களில்

145-ஆண்டுகüல்-ஆண்டுகளில்

153-பள்üகள்-பள்ளிகள்



book | by Dr. Radut