Skip to Content

09. பூரண யோகம் - முதல் வாயில்கள்

பூரண யோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

(12) சிருஷ்டியின் இரகஸ்யம்

இதுவரை இந்தியாவில் புத்தர், இராமன், கிருஷ்ணன், வெளிநாட்டு விஞ்ஞானிகள் கூறாத உண்மையிது. பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறியுள்ளார். The Life Divineஇல் 13ஆம் அத்தியாயம் முதல் 24ஆம் அத்தியாயம் வரை இவ்விளக்கம் எழுதப்படுகிறது. நூல் கடினம் என்ற பகுதிகளில் தலையான இடம்,

  1. பிரம்ம சத்தியம் சிருஷ்டியின் சத்தியமாவது.

    எல்லாம் எல்லாவற்றுள்ளும் இருப்பது, ஒவ்வொன்றும் அனைத்துள்ளும், அனைத்தும் ஒவ்வொன்றுள்ளுமாக மாறுவது.

  2. முழுஎண்ணம் அனைத்துமாக மாறுகிறது.

    அனைத்தும் பிரம்மத்துள்ளும், பிரம்மம் அனைத்துள்ளுமாகவும் மாறுகிறது.

  3. ஒன்றான ஜீவியம் ஞானி - ஞானம் - பொருளாகிறது.
  4. சத்தியஜீவியம் இரண்டாகப் பிரிந்து, மனம் பிறக்கிறது.
  5. மனத்தின் அறிவு உறுதியை, சக்தியை வெளிப்படுத்தச் செய்கிறது.
  6. அச்சக்தியே வாழ்வு.
  7. வாழ்வின் அசைவு நின்றால் ஜடம் உற்பத்தியாகிறது.

சத்தில் ஆரம்பித்து ஜடம்வரை ஏற்படும் மாறுதல்கள் இவை. இது தத்துவம்.

உதாரணம்:

  • முதலாளி கம்பனியை ஆரம்பிக்கிறார்.
  • தன் அதிகாரத்தை டைரக்டர்களிடம் தருகிறார்.
  • அவர்கள் ஆணையை மானேஜர் நிறைவேற்றுகிறார்.
  • சூப்பர்வைசர் வேலையில் ஆணையை நிறைவேற்றுகிறார்.
  • தொழிலாளி வேலையைச் செய்கிறான்.

தத்துவத்திற்கும் உதாரணத்திற்கும் உள்ள தொடர்பு தெளிவாகவில்லை. பணம் பெற்றவன் பெட்டியில் பணத்தை வைத்திருந்தால் அதற்குச் செல்வாக்குண்டு, அந்தஸ்துண்டு. ஆனால் பணம் பயன்படுவதில்லை. இது மோட்சத்தில் முனிவர் அடையும் அக்ஷர பிரம்மம், புருஷோத்தமன்போன்றது. பணத்தை முதலாக மாற்றி, கம்பனியை ஆரம்பித்து, டைரக்டர், மானேஜர், சூப்பர்வைசர், தொழிலாளி, கட்டடம், மெஷின், மார்க்கட்டில் செயல்பட்டால் பணம் பெருகும். பணம் சரக்காகும், பலருக்குச் சேவை செய்யும். முதல் இலாபம் ஈட்டும். பணத்தைச் சரக்காக்கி, சரக்கை மீண்டும் பணமாக்கத் துணிச்சல் தேவை.

பணம்
அக்ஷர பிரம்மம், மோட்சத்தில் அடைவது
முதல்
கம்பனி ஆரம்பிக்கும் பணம்
கம்பனி
உலகம்
டெக்னாலஜி
Real Idea முழுஎண்ணம்
டைரக்டர்கள்
சத்தியஜீவியம்
மானேஜர், சூப்பர்வைசர், தொழிலாளிகள்
மனம், உயிர், உடல்
சரக்கு
மனம், உயிர், உடல்

பணம் பிரம்மம். அதைப் பெற்றிருப்பது வெற்றி. அது ஆனந்தம் தருகிறது. அதைக் கடந்த ஆனந்தம் தேடி பிரம்மம் உலகைச் சிருஷ்டிக்கிறது. பணத்தைப் பணமாகப் பெற்று அனுபவிப்பதைவிட பெரிய ஆனந்தம் தேடி கம்பனி மூலம் சரக்கை உற்பத்திசெய்து, மார்க்கட்டில் அதை விற்று, முதலையும், இலாபத்தையும் பெறுவது பெருமகிழ்ச்சி. இதன் சட்டங்கள் சரிவரப் புரிந்தால், வாழ்வில் குறை வாராது. எந்தக் காரியமும் வெற்றியாகும், தோல்வி நம்மிடம் தோற்றுப் போகும். தன் சிறு முதலைத் துணிச்சலாகத் தொழில் போட்டுப் பெரும் பணம் சம்பாதித்தபின் அதை மீண்டும் தொழில் ஈடுபடுத்த பலரும் சம்மதிக்கமாட்டார்கள். தொழில் துணிச்சலுள்ளவர்க்கே வெற்றி. யோகத்தில் எல்லாக் கட்டங்களிலும் எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருப்பது அவசியம்.

(13) ஜடம் சிருஷ்டியின் ஆனந்தம்

இதை விளக்கும் உதாரணம் புரியும். தத்துவம் புரிவது எளிதன்று.

பாடகன் தன்னை மறந்து பாடும்பொழுது இறைவனைத் தொட்டு மகிழ்கிறான். ஜடம்என்பது உடல். ஜடம் இறைவனையடைய தான் மறைந்துள்ள ஜீவியத்தை நாடுகிறது. ஜீவன் - இறைவன் - ஜீவியத்துள் உள்ளது. ஜடம் ஜீவியத்தைத் தூண்டி, ஜீவனைக் காணச் செய்கிறது. அது ஆனந்தம்.

செயலாற்றுவது உடல். உடல் சுறுசுறுப்பு அதிகமானால், அது உணர்ச்சியைச் செயல்படத் தூண்டும். செயல்படும் உணர்ச்சி ஆனந்தமயமாகித் தன்னை மறக்கும். அது இறைவனைத் தொடும் நிலை.

நாம் சமர்ப்பணத்தால் செயல்பட்டு அது சரணாகதியானால், அதனால் நாம் மெய் மறந்து பரவசப்பட்டால் ஜடம் ஆனந்தம் தருகிறது.

தத்துவம்:

பிரம்மம் பிரபஞ்சத்தில் பொருளாகி, மனத்தால் அப்பொருள் அணுக்களாகத் துண்டிக்கப்பட்டு, மீண்டும் ஒன்று சேர்வது ஜடம்.

  • அதனால் ஜடம் பிரம்மம்.
  • மனம் ஜடத்திற்கு உருவம் தருகிறது.
  • வாழ்வு ஜடத்திற்கு சக்தியளிக்கிறது.
  • ஜீவியம் சக்தியைக் கிரகிப்பதால் ஜடம் கண்மூடியாகித் தன்னையறிய முடியாத நிலைக்கு வருகிறது.
  • ஜடம்என்பது சச்சிதானந்தம்.
  • மனம் இம்மாற்றத்தைக் கொண்டு வருகிறது.

(15) சமர்ப்பணம் சரணாகதியாவது

மனம் செயல்பட ஆரம்பித்தால் நம் செயலை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வது சமர்ப்பணம்.

உறுதி செயல்படுகிறது. ஆனால் அது இறைவனுக்காகச் செயல்படுவதை சமர்ப்பணம் என்கிறோம். உறுதி தான் ஆத்மாவுக்குப் பயன்படவில்லைஎன அறிந்து, தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்து, மறைந்தநிலை சரணாகதி. உறுதியே (Will) இல்லையெனில் சமர்ப்பணம் செய்ய இயலாது.

  • சமர்ப்பணத்தை மனம் செய்கிறது.
  • ஆத்மா சரணாகதியை மேற்கொள்கிறது.
  • கீதையின் சமர்ப்பணம் மோட்சம் பெறும்.

    மோட்சமானாலும், அதுவும் ஒரு மனித இலட்சியமாகும்.

    எந்த இலட்சியத்தையும் நாடாத, நாட முடியாத ஆத்ம நிலை சரணாகதிக்குரியது.

  • சரணாகதி மனிதனின் கடைசி நிலை.
  • சமர்ப்பணத்தை மனம் ஏற்பதுபோல், உணர்வும், உடலும் ஏற்கலாம்.
  • ஆத்ம சமர்ப்பணம்என்பது நம் செயலை ஆத்மாவுக்கு அர்ப்பணம் செய்வதாகும்.
  • சமர்ப்பணத்தால் மனத்திலுள்ள காரியம் பூரணமாக முடியும்.
  • சரணாகதி நம்மையும், நம் மனத்தின் இலட்சியங்களையும் விலக்கி, அன்னை நம் ஜீவனில் எப்படிச் செயல்பட விரும்புகிறாரோ, அப்படிச் செயல்பட அனுமதிப்பதாகும்.
  • சமர்ப்பணம் முற்றி சரணாகதியாகும்.
  • பக்தி - சமர்ப்பணம் - சரணாகதி.

 

தொடரும்......

*****



book | by Dr. Radut