Skip to Content

06. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

வாழ்வில் நமக்குத் தெரிந்த அனைத்தும் உண்மையில்லை.

அவை அறியாமைக்கு உண்மை.

இங்கு நிலை வேறு.

ஞானத்தில் எதிரானவையும் உண்மை.

எதிரானதின் உண்மை புரியும்பொழுது எட்டாத இலட்சியம் எட்டும்.

நம் நாட்டு விவேகம் பழமொழிகளாக வந்துள்ளது. அவ்வளவும் முன்னோர்கள் அனுபவத்தில் கண்ட உண்மை. இன்றும் எவரும் உண்மையெனக் காண்கின்றனர். ஆனால், அவை எதுவும் அன்பருக்கு உண்மையில்லை. (நாம் ஏற்றால் பலிக்கும். அன்னையை ஏற்றால், அவை உண்மையில்லை). உதாரணமாக பழகப் பழக பாலும் புளிக்கும் என்பது பழமொழி. அன்னையை ஏற்ற இருவர் பழக ஆரம்பித்தால், நட்பில் அன்னையை அதிகமாக அறிய முடியும். அதனால் நட்பு நாளுக்கு நாள் இனிப்பு கூடும். அதுபோல் 37 பழமொழிகளைக் கீழே எழுதுகிறேன். அன்பர் அவையனைத்தையும் தம் வாழ்வில் தவறு எனக் காண முடியும். ஒன்றிரண்டாவது தவறு எனக் காணாமல் அன்பராக முடியாது.

 1. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்.
 2. கொடுக்கல் வாங்கலில் முடியும்.
 3. பழகப்பழக பாலும் புளிக்கும்.
 4. ஜாதி புத்தி போகாது.
 5. மாமியாரை மெச்சிய மருமகளில்லை.
 6. யானைக்கும் அடி சறுக்கும்.
 7. குறுங்கழுத்தனை நம்ப முடியாது.  
 8. 30 ஆண்டு வாழ்ந்தவரில்லை, 30 ஆண்டு கெட்டவரில்லை.
 9. மாதா, பிதா செய்தது மக்களைத் தாக்கும்.
 10. பேதையும் பதரே.
 11. மதியாதார் தலைவாசல் மிதியாதே.
 12. சாமியார் வீட்டில் தங்கினால் குடும்பம் அழியும்.
 13. அக்கா பெண் விருத்திக்கு வாராது.
 14. மருந்தும், விருந்தும் மூன்று வேளை.
 15. குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன்.
 16. பண்ணிய புண்ணியம் பயிரில் தெரியும்.
 17. வாழும் பெண்ணைத் தாயார் கெடுத்தார்.
 18. கல்லடி படலாம், கண்ணடி படமுடியாது.
 19. கொண்டான் கொடுத்தாரிடம் கொடுக்கல் கூடாது.
 20. அபசகுனத்தைச் சுப சகுனமாக்கு.
 21. மனதிலிருப்பது நடக்கிறது.
 22. ஏழாம் மடம் காலி.
 23. ஐயோ பாவம் எனில், ஆறு மாதத்துப் பாவம் கையோடே.
 24. பெண் புத்தி பின் புத்தி.
 25. Henpecked husband will be a failure.
 26. சுபாவம் மாறாது.
 27. செய்த வேலை வீண் போகாது.
 28. மனிதன் தானே! ஆண்பிள்ளையை நம்ப முடியாது.
 29. தன் முதுகு தெரியாது.
 30. பழகினால் தொடர்பு இல்லாமலிருக்காது.
 31. அனுபவித்தால் உரிமை வரும்.
 32. கடன் கேட்காமல் வாராது, பயிர் பார்க்காமல் பலன் தாராது.
 33. நாய் விற்ற காசு குலைக்கும்.
 34. வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்.
 35. இடம் கொடுத்தால், மடம் பிடுங்குவர்.
 36. பேசுவான், செய்யமாட்டான்.
 37. மடியில் கனமில்லாவிட்டால், வழியில் பயமில்லை.
 • நம் சுபாவம் மாறும்படி வாழ்க்கை பிரச்சினை எழுப்பும் (நம்மை touch பண்ணும்) இடத்தில் அன்னையை ஏற்பது ஏற்பதாகும். அந்தக் கட்டாயம் இல்லாத (touch) பண்ணாத இடத்தில் நாம் அன்னையை ஏற்பது ஜீவனற்றதாகும் (external behaviour,not real feelings).

  (Reality begins where we are touched) சுபாவத்தைத் தொட்டால் தான் உண்மை வெளிவரும்.

  (Property touches the body) சொத்து எனில் உடல் ஆடும். (Marriage touches the vital) திருமண விஷயத்தில் உள்ளம் பதைக்கும்.

  (Both are real) அவையிரண்டும் உண்மை.

  எத்தனை நண்பர்கள் அங்கு தேறுவார்கள்? உறவினர் தேறுவாரா?

  நாம் அந்த இடத்தில் தேறுவோமா?

  அங்கு தேறுபவன் மனிதன்.

  உலகில் மனிதனைத் தேடலாம், கிடைப்பது அரிது.

  தெய்வமாகும் யோகத்திற்கு மனிதனாகும் நிலையேயில்லை எனில் என்ன செய்யலாம்?

அன்னை சூத்திரங்கள் சில (Formulas for Mother's Life)

 • பழமொழிகள் அன்பர்க்கு உண்மையில்லை.
  அன்பர்கள் வாழ்வில் அன்னை பலிப்பதை அடிப்படையாகக் கொண்டு எல்லாப் பழமொழிகளையும் மாற்றி எழுதலாம். அப்படி எழுதப்பட்ட சில உண்மைகளைக் கீழே எழுதுகிறேன்.
 1. இலட்சியம் யதார்த்தம். Theory is the best practice.
 2. தெரிந்த உண்மையிலுள்ள தெரியாத பொக்கிஷம். Public secret.
 3. நல்ல முறை நடைமுறை.
 4. உள்ளதெல்லாம் போனால், உலகமே பலிக்கும்.
 5. பொறுமையின் அவசரம் பொறுக்க முடியாத அவசரம்.
 6. எதிரான உண்மை எட்டாத இலட்சியம்.
 7. உள்ளத்தின் பெருந்தன்மை உலகைவிடப் பெரியது.
 8. சுத்தம் 10 முதல் 100 நிலைகள் உள்ளன. அவற்றைக் கடந்த சுத்தம் நமது இலட்சியம்.
 9. அகத்தூய்மை ஆன்ம வாழ்வு.
 10. விஸ்வாசம் விஸ்வரூபம்.
 11. நல்ல எண்ணம் நாராயண தரிசனம்.
 12. குழந்தை நம் ஆத்மாவின் பிரதிபலிப்பு.
 13. நிதானம் இடையறாத நினைவு.
 14. இரகஸ்யமான விளம்பரம் - அன்னையின் இரகஸ்யம்.
 15. கேட்டால் கிடைக்காது.
  கிடைப்பது கேட்காமல் கிடைப்பது.
 16. புதுவருஷம் புனர்ஜன்மம்.
 17. ஆழத்திலுள்ள சத்தியம் அன்னை சத்தியம்.
 18. தோற்றம் பொலிவு.
  விஷயம் விஸ்வரூபம்.
  சத்தியம் இரண்டையும் கடந்தது.
 19. சாமர்த்தியம் சர்வ நாசம்.
 20. எதையும் மாற்ற முயலாதே.
  எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.
  தானே மாறுவது தகுதி.
 21. இடைவிடாத நினைவு இகவாழ்வில் உயர்வு.
  நினைவழிவது நிலையான உயர்வு.
  உயர்வை நாடாத மனம் உயர்ந்த மனம்.
 22. தேடி வருவது கூடி வருவது.
 23. மனம் மாறியபிறகு மாற மறுக்கும் திறன் மற்றவர்க்கில்லை.
 24. பிரயாணம் பெரிய அனுபவம்.
 25. ஆசை பூர்த்தியாவது ஆண்டவன் வாழ்வில் பலிப்பது.
 26. மணியிலிருந்து நீங்கிய உமி கூடாது என்ற சிவப்பிரகாசர் வாக்கை அன்பர்கள் பொய்யாக்கலாம்.

பகவான் அன்னை எழுதியவற்றைப் படிப்பது

 • அவற்றிற்கு சூட்சும சக்தியுண்டு.
 • ஒருவர் வாழ்வை, திருவுருமாற்றக்கூடியது அந்த சக்தி.
 • அவர்கள் எழுதியதைப் படிக்க சிறந்த முறை மனத்தில் எந்த எண்ணமுமில்லாமல் படிப்பது.

  தமிழில் என் புத்தகங்களில் உள்ள எல்லாக் கருத்துகளும் அவர்களுடையனவே.

  விளக்கம், உதாரணம் மட்டும் என்னுடையது.

  இந்த 141 கட்டுரைகளும் ஓர் அன்பருக்கு நேரடியாக எழுதப்பட்டவை என நினைத்துப் படிப்பது முழுப்பலன் தரும்.

  அப்படிப் படிப்பதால் நம் வாழ்வு முழுவதும் அன்னை வாழ்வாக மாறும்.

  ஆழ்ந்து பயில்வது அற்புதமாக இருக்கும்.

  எரிச்சல் (reaction) வாராமலிருப்பது யோகம்.

  காஷ்மீரைப் பற்றிப் படித்தாலும், இராமனுடைய தேரையைப் பற்றிப் படித்தாலும் (at a certain depth), ஏதோ ஓர் ஆழத்தில் அது நம் வாழ்விற்குப் பூரண உண்மையாகும்.

  முழுப்பலன் பெற எரிச்சல் (reaction) மயிரிழை கூட இருக்கக்கூடாது.

  எந்த மகானுடைய வாழ்விலுள்ள எந்தப் பெரிய நல்ல குணமும் எல்லா மனிதர்களிடமும் ஏதோ ஓர் ஆழத்திலிருக்கும். தவறாது இருக்கும். இல்லாமலே இருக்காது.

  அதே போல் உலகில் எவருடைய கெட்ட குணமும் நம்மிடம் எங்கோ அப்படியே இருக்கும். பார்த்தால் தெரியும்.

  மனிதனை நல்லவனாகவோ, கெட்டவனாகவோ கருதினால் சத்தியம் புரியாது. மனிதனை மனிதனாக மட்டும் புரிந்துகொள்ள வேண்டும். வேறு வழியில்லை என ஏற்பது மூடநம்பிக்கை.

  உள்ளதெல்லாம் உள்ளது என ஏற்பது உத்தம இரகஸ்யம்.

  எந்த நேரமும் எவர் சொல்லும், கண்ணில் படும் எந்த வார்த்தையும் நம் மனத்தின் முழு பிரதிபலிப்பு. ஒரு வகையில் இப்படிப் புரிந்து கொள்வது நம்மை மிக உயர்வாகப் புரிந்து கொள்வதாகும். அது பயன் தாராத நினைவு. வேறு சமயங்களில் மனம் பீதியடையும், வெட்கப்படும், ஆத்திரம் வரும். அதுவும் விலக்கப்பட வேண்டியது. விருப்பு, வெறுப்பில்லாமல் கேட்க, படிக்க, பார்க்க மனம் பக்குவப்பட்டால், மனம் விவேகம் பெறும், பக்குவப்படும், பவித்திரமாகும், பதம் எழும். புறத்தால் அகத்தை அறிவோம். இவை கடந்தகால நிகழ்ச்சிகளின் விட்ட குறை, தொட்ட குறை எனத் தெரியும். போன ஜன்மம் புரியும். ஆத்மா பிறந்த ஆதியும் ஓரிழை தெரியும். உடல் வெண்கலமாகும். உயிர் அமிர்தமாகும். மனம் சொர்க்கமாக மாறும்.

  பேசக்கூடாது, பேசவே கூடாது.

  நினைக்கக்கூடாது, நினைவே அழிய வேண்டும்.

  எவர் உதாரணமும் நமக்குப் பயன்படாது.

  நாம் நமக்கே உரிய உண்மையாகும்.

தொடரும்....

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
தகுதியில்லாதவர் பெற்றுப் பலனடையும் வகையிலும், பெறுவதால் அவர் மனம் புண்படாத நிலையிலும் கொடுக்க, ஆன்மாவில் வலிமை நிறைந்திருக்க வேண்டும். அது மனிதச் செயலில் வெளிப்படுவது கருணை.
கருணை ஆன்மீக வலிமையாகும்.

*****book | by Dr. Radut